உலகளவில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் தங்கம் விலை திங்கள்கிழமை காலை நேர வர்த்தகத்தில் உயர்வுடன் தொடங்கியுள்ளது. பொதுவாக அமெரிக்க டாலர் உயரும் போது தங்கம் விலை குறையும். ஆனால், இன்றைய சூழலில் இந்த விதி தலைகீழாக மாறியுள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) -ல் இன்று தங்கம் விலை ரூ.72,214 என உயர்வில் திறந்தது. சில நிமிடங்களிலேயே ரூ.72,362 என்ற உள்நாட்டு உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தது சர்வதேச தங்கம் விலை.

சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் சுமார் $2,360 என வர்த்தகமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் மூடும் போது தங்கம் விலை 2343 டாலராக இருந்த நிலையில், இன்று வாரத்தில் முதல் நாளில் 0.70 சதவீதம் அதிகமான விலையில் வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு உள்ள போர் பதற்றம் முக்கியமான காரணமாக அமைகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் முதலீட்டுச் சந்தை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி வருகின்றனர்.
இதன் காரணமாக, தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளில் முதலீடு செய்வது கடந்த 24 மணிநேரத்தில் அதிகரித்து வருகிறது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீதான ஈரான் ராணுவத்தின் 200 ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் எதிர் தாக்குதல் எப்படியிருக்கும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது. இதனால் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் தங்கம், பத்திரம், ரியல் எஸ்டேட் போன்ற பாதுகாப்பான பிரிவில் முதலீடு செய்ய துவங்கும் காலம் வந்துவிட்டது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலையில் 1.60 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.70,000 என்ற அடிப்படை ஆதரவு விலை தொடர்ந்து வலுவாக இருப்பதால், தொடர்ந்து ஏற்றம் காணும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
எவ்வாறெனினும், உலக அரசியல் சூழல் ஸ்திரப்படுத்தப்படாவிட்டால், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து தங்கத்தில் முதலீடு செய்வது உத்தமம்.
More From GoodReturns

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?



Click it and Unblock the Notifications