தங்கம் விலை பொசுக்குன்னு ஏறிவிட்டது.. சென்னை, கோவை, பெங்களூர், துபாயில் இன்று என்ன விலை..!

தங்கம் விலை 3 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதற்காக மிகவும் ஆர்வமாகக் காத்திருந்த நிலையில் இன்று திடிரென உயர்ந்துவிட்டதால், வீக்எண்டில் தங்க நகை வாங்க திட்டமிட்டு இருந்தோர் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

டாலர் ஆதிக்கம் அடைந்த காரணத்தால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நேரத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும் அபாயம் உருவாகி வரும் காரணத்தாலும், சீன பொருளாதார வளர்ச்சியில் அதிகமான தடுமாற்றம் இருக்கும் காரணத்தாலும் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டைத் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

தங்கம் விலை பொசுக்குன்னு ஏறிவிட்டது.. சென்னை, கோவை, பெங்களூர், துபாயில் இன்று என்ன விலை..!

இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2009 டாலரில் இருந்து 2030.34 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.47 சதவீதம் உயர்ந்து 62,059.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.30 சதவீதம் உயர்ந்து 71,828.00 ரூபாயாக உள்ளது.

ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று ஒரு நாளில் மட்டுமே 300 ரூபாய் உயர்ந்து 10 கிராம் 58100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 240 ரூபாய் அதிகரித்து 46,480 ரூபாயாக உள்ளது.

மேலும் 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு 330 ரூபாய் அதிகரித்து 63,380 ரூபாயாக உயர்ந்துள்ளது. நீங்கள் 18 கேரட் தங்க நகைகளை வாங்க விரும்பினால் இன்று 10 கிராம் 18 கேரட் தங்கம் விலை 186 ரூபாய் அதிகரித்து 47,536 ரூபாயாக உள்ளது.

இதோடு ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 200 ரூபாய் அதிகரித்து 77,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராமுக்குத் தடாலடியாக உயர்ந்து 760 ரூபாய் உயர்ந்து 24,380 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் இன்று தங்கம் விலை நிலவரத்தைப் பார்ப்போம்.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 58,100 ரூபாய், மும்பை - 57,700 ரூபாய், டெல்லி - 57,850 ரூபாய், கொல்கத்தா - 57,700 ரூபாய், பெங்களூர் - 57,700 ரூபாய், ஹைதராபாத் - 57,700 ரூபாய், கேரளா - 57,700 ரூபாய், புனே - 57,700 ரூபாய், பரோடா - 57,750 ரூபாய், அகமதாபாத் - 57,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,850 ரூபாய், லக்னோ - 57,850 ரூபாய், கோயம்புத்தூர் - 58,100 ரூபாய், மதுரை - 58,100 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 63,380 ரூபாய், மும்பை - 62,950 ரூபாய், டெல்லி - 63,100 ரூபாய், கொல்கத்தா - 62,950 ரூபாய், பெங்களூர் - 62,950 ரூபாய், ஹைதராபாத் - 62,950 ரூபாய், கேரளா - 62,950 ரூபாய், புனே - 62,950 ரூபாய், பரோடா - 63,000 ரூபாய், அகமதாபாத் - 63,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,100 ரூபாய், லக்னோ - 63,100 ரூபாய், கோயம்புத்தூர் - 63,380 ரூபாய், மதுரை - 63,380 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 46480 ரூபாய், மும்பை - 46160 ரூபாய், டெல்லி - 46280 ரூபாய், கொல்கத்தா - 46160 ரூபாய், பெங்களூர் - 46160 ரூபாய், ஹைதராபாத் - 46160 ரூபாய், கேரளா - 46160 ரூபாய், புனே - 46160 ரூபாய், பரோடா - 46200 ரூபாய், அகமதாபாத் - 46200 ரூபாய், ஜெய்ப்பூர் - 46280 ரூபாய், லக்னோ - 46280 ரூபாய், கோயம்புத்தூர் - 46480 ரூபாய், மதுரை - 46480 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,380 ரூபாய், பெங்களூர் - 24,380 ரூபாய், புவனேஸ்வர் - 24,380 ரூபாய், சண்டிகர் - 24,380 ரூபாய், சென்னை - 24,380 ரூபாய், கோயம்புத்தூர் - 24,380 ரூபாய், டெல்லி - 24,380 ரூபாய், ஹைதராபாத் - 24,380 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,380 ரூபாய், கேரளா - 24,380 ரூபாய், கொல்கத்தா - 24,380 ரூபாய், லக்னோ - 24,380 ரூபாய், மதுரை - 24,380 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 77200 ரூபாய், மும்பை - 75700 ரூபாய், டெல்லி - 75700 ரூபாய், கொல்கத்தா - 75700 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 77200 ரூபாய், கேரளா - 77200 ரூபாய், புனே - 75700 ரூபாய், பரோடா - 75700 ரூபாய், அகமதாபாத் - 75700 ரூபாய், ஜெய்ப்பூர் - 75700 ரூபாய், லக்னோ - 75700 ரூபாய், கோயம்புத்தூர் - 77200 ரூபாய், மதுரை - 77200 ரூபாய்.

உலகளவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை: உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம் - பாஹ்ரைன் - BHD 240 - 52,877.28 ரூபாய், குவைத் - KWD 197 - 53,148.43 ரூபாய், மலேசியா - MYR 3,030 - 53,324.67 ரூபாய், ஓமன் - OMR 250 - 53,930.25 ரூபாய், கத்தார் - QAR 2,365 - 53,877.77 ரூபாய், சவுதி அரேபியா - SAR 2,370 - 52,478.67 ரூபாய், சிங்கப்பூர் - SGD 845 - 52,333.47 ரூபாய், ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,277.50 - 51,497.92 ரூபாய், அமெரிக்கா - USD 615 - 51,075.26 ரூபாய், அபுதாபி - AED 2,277.50 - 51,497.92 ரூபாய், அஜ்மான் - AED 2,277.50 - 51,497.92 ரூபாய், துபாய் - AED 2,277.50 - 51,497.92 ரூபாய், புஜைரா - AED 2,277.50 - 51,497.92 ரூபாய், ராஸ் அல் கைமா - AED 2,277.50 - 51,497.92 ரூபாய், ஷார்ஜா - AED 2,277.50 - 51,497.92 ரூபாய், தோஹா - QAR 2,365 - 53,877.77 ரூபாய், மஸ்கட் - OMR 250 - 53,930.25 ரூபாய், தம்மம் - SAR 2,370 - 52,478.67 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+