தங்கம் விலை 2 நாள் சரிவுக்கு பின் திடீர் உயர்வு.. மக்களுக்கு மீண்டும் ஷாக்..!!

அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் போல் அமெரிக்க பெட்ரல் வங்கி அறிவிப்பால் பத்திர சந்தையில் முடங்கி கிடந்த பல டிரில்லியன் டாலர் முதலீட்டு சந்தைக்குள் நுழைந்துள்ளது. இதன் மூலம் அனைத்து முதலீட்டு பிரிவிலும் முதலீடுகள் குவிந்து வருகிறது, இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் தங்க நகை வாங்க திட்டமிடுவோர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இந்திய ரீடைல் சந்தையில் 2 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் பிரிட்டன் பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சி, சீனாவில் ரியல் துறை வீழ்ச்சி உடன் நிலநடுக்கம் போன்ற பிரச்சனைகளால் தங்கம் முக்கியமான முதலீடாக மாறியுள்ளது.

தங்கம் விலை 2 நாள் சரிவுக்கு பின் திடீர் உயர்வு.. மக்களுக்கு மீண்டும் ஷாக்..!!

இன்று சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை கணிசமான உயர்ந்து 2027 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.26 சதவீதம் சரிந்து 62,126.00 ரூபாய் விலையிலும், மார்ச் மாதம் முடியும் வெள்ளி பியூச்சர்ஸ் ஆர்டரின் விலை 0.05 சதவீதம் சரிந்து 74,370.00 ரூபாயாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 57,950 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 63,220 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 46,360 ரூபாயாக உள்ளது.

இதை தொடர்ந்து ரீடைல் சந்தையில் விற்கப்படும் 1 கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 7950 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலையும் 10 கிராம் 240 ரூபாய் உயர்ந்து 25,440 ரூபாயாக உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வெள்ளிக்கிழமையில் இருந்து சரிந்து வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 57,950 ரூபாய், மும்பை - 57,400 ரூபாய், டெல்லி - 57,550 ரூபாய், கொல்கத்தா - 57,400 ரூபாய், பெங்களூர் - 57,400 ரூபாய், ஹைதராபாத் - 57,400 ரூபாய், கேரளா - 57,400 ரூபாய், புனே - 57,400 ரூபாய், பரோடா - 57,450 ரூபாய், அகமதாபாத் - 57,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,550 ரூபாய், லக்னோ - 57,550 ரூபாய், கோயம்புத்தூர் - 57,950 ரூபாய், மதுரை - 57,950 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 63,220 ரூபாய், மும்பை - 62,620 ரூபாய், டெல்லி - 62,770 ரூபாய், கொல்கத்தா - 62,620 ரூபாய், பெங்களூர் - 62,620 ரூபாய், ஹைதராபாத் - 62,620 ரூபாய், கேரளா - 62,620 ரூபாய், புனே - 62,620 ரூபாய், பரோடா - 62,670 ரூபாய், அகமதாபாத் - 62,670 ரூபாய், ஜெய்ப்பூர் - 62,770 ரூபாய், லக்னோ - 62,770 ரூபாய், கோயம்புத்தூர் - 63,220 ரூபாய், மதுரை - 63,220 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 46360 ரூபாய், மும்பை - 45920 ரூபாய், டெல்லி - 46040 ரூபாய், கொல்கத்தா - 45920 ரூபாய், பெங்களூர் - 45920 ரூபாய், ஹைதராபாத் - 45920 ரூபாய், கேரளா - 45920 ரூபாய், புனே - 45920 ரூபாய், பரோடா - 45960 ரூபாய், அகமதாபாத் - 45960 ரூபாய், ஜெய்ப்பூர் - 46040 ரூபாய், லக்னோ - 46040 ரூபாய், கோயம்புத்தூர் - 46360 ரூபாய், மதுரை - 46360 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 25,440 ரூபாய், பெங்களூர் - 25,440 ரூபாய், புவனேஸ்வர் - 25,440 ரூபாய், சண்டிகர் - 25,440 ரூபாய், சென்னை - 25,440 ரூபாய், கோயம்புத்தூர் - 25,440 ரூபாய், டெல்லி - 25,440 ரூபாய், ஹைதராபாத் - 25,440 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,440 ரூபாய், கேரளா - 25,440 ரூபாய், கொல்கத்தா - 25,440 ரூபாய், லக்னோ - 25,440 ரூபாய், மதுரை - 25,440 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79500 ரூபாய், மும்பை - 77500 ரூபாய், டெல்லி - 77500 ரூபாய், கொல்கத்தா - 77500 ரூபாய், பெங்களூர் - 75750 ரூபாய், ஹைதராபாத் - 79500 ரூபாய், கேரளா - 79500 ரூபாய், புனே - 77500 ரூபாய், பரோடா - 77500 ரூபாய், அகமதாபாத் - 77500 ரூபாய், ஜெய்ப்பூர் - 77500 ரூபாய், லக்னோ - 77500 ரூபாய், கோயம்புத்தூர் - 79500 ரூபாய், மதுரை - 79500 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+