வீடு முதல் நாடு வரையில் தங்கம் மிகவும் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படும் காரணத்தாலேயே பண்டைய காலம் தொட்டு டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோகரன்சி பயன்படுத்தும் இந்த நவீன காலம் வரையில் உலகம் முழுவதும் தங்கம் முக்கிய முதலீடாகப் பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் இந்தியா, சீனா, சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் தங்க நகைகளை அதிகம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவிலும் தங்க நகைகளை அணிவோர் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
4 நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றமில்லாமல் இருந்த நிலையில் இன்று தடாலடியாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலையின் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 10 டாலர் அதிகரித்து தற்போது 2520 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் உயர்ந்து 67,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 410 ரூபாய் உயர்ந்து 73,250 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 304 ரூபாய் உயர்ந்து 53,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 91,500 ரூபாயாக உள்ளது. இதேபோல் பிளாட்டினம் விலை 10 கிராம் 60 ரூபாய் உயர்ந்து 25,430 ரூபாயாக உள்ளது.
இன்றைய தங்கம் விலை உயர்வுக்கு முதலும் முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத சில்லறை விலை பணவீக்க குறியீடு (CPI) தரவு இன்று வெளியாவது தான். இந்த தரவுகள் அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பிற்கு மிகவும் முக்கிய காரணமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் இத்தரவுகளை அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதேவேளையில் அமெரிக்க டாலர் ஆறு முக்கிய சர்வதேச நாணயங்களுக்கு எதிராக அளவிடும் டாலர் குறியீடு நேற்றைய வர்த்தகத்தில் குறைந்ததால், உலகளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து தங்கம் விலை அதிகரிக்க வழிவகுத்தது. டாலர் மதிப்பு குறையும் போது பிற நாணயங்கள் மூலம் தங்கம் வாங்குவது லாபகரமானதாக இருக்கும். தங்கம் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுவதால், அமெரிக்க நாணயம் சரியும் போது இது மற்ற நாணயங்களில் தங்கம் வாங்கும் போது மலிவானதாக்கும். இதனால் அதன் தேவை அதிகரிக்கிறது.
அமெரிக்காவின் CPI தரவுடன், வியாழக்கிழமை வெளியாகும் உற்பத்தியாளர் விலைக் குறியீட்டு மற்றும் வேலையின்மை தரவுகளும் வெளியாக உள்ளதால், முதலீட்டாளர்கள் இதை அனைத்தையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்தத் தரவுகள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகிதக் குறைப்பு அளவு மற்றும் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும். அமெரிக்காவின் நாணய கொள்கை கூட்டம் செப்டம்பர் 17-18 அன்று நடக்க இருக்கும் காரணத்தால் தங்கம் தற்போது முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த வாரம் அமெரிக்காவில் வெளியாகும் தரவுகள் அனைத்தும் அதிகப்படியான வட்டி விகித குறைப்பிற்கு வழிவகுத்தால், தங்கம் விலை இனி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும். இதோடு தங்கத்தின் டிமாண்ட் மற்றும் அதன் விலையை அதிகரிக்க, வட்டி விகிதக் குறைப்புகள், புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகியவை வரும் மாதங்களில் முக்கிய காரணிகளாக இருக்கும்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?



Click it and Unblock the Notifications