தங்கத்தை பிடிக்காதவர்கள் யார் இருப்பார்கள், குறிப்பாக பொருளாதாரம், வர்த்தக தடுமாற்றம் அதிகமாக இருக்கும் போதும் தங்கம் தான் பல முதலீட்டாளர்களை காப்பாற்றுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலை தான் தற்போது உருவாகியுள்ளது, இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கு மத்தியிலான போர் தான், இரு தரப்புக்கு மத்தியிலும் காசா பகுதியில் கடுமையான தாக்குதல்கள் நடந்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல்-க்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வரும் வேளையில் ஹமாஸ் அமைப்புக்கு நேரடியாக பல அரபு நாடுகள் நேரடியாக உதவி செய்ய துவங்கியுள்ளது.

ஆனால் மத்திய கிழக்கு சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்ப்பதோடு அமெரிக்கப் பொருளாதாரம் தேக்கநிலை (stagflation) அபாயத்தை கொண்டு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா போன்ற பொருளாதார நாடுகளில் வருவது பெரும் பிரச்சனையாகவே பார்க்கப்படும் காரணத்தால் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் தங்கம் மீது திரும்பி வருகிறது.
இவ்விரு காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று ஒரு நாளில் 1894 டாலரில் இருந்து 1931 டாலர் வரையில் தடாலடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல் எம்சிஎஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை சுமார் 2.58 சதவீதம் உயர்ந்து 59,415.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 3.32 சதவீதம் உயர்ந்து 71,368 ரூபாயாக உள்ளது.
இதன் வாயிலாக சனிக்கிழமை சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 55,550 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 60,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 44,440 ரூபாயாக உள்ளது.
மேலும் இந்திய ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 77,000 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 350 ரூபாய் அதிகரித்து 23,580 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications