தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு.. சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன..?

தங்கம் விலை கடந்த 5 வாரத்தில் பெரிய அளவிலான உயர்வை சந்தித்த பின்பு வெள்ளிக்கிழமை மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையிலும், MCX சந்தையிலும் தங்கம் விலை மந்தமான முதலீட்டை பெற்றுள்ளது. குறிப்பாக MCX வர்த்தக சந்தையில் பியூச்சர்ஸ் ஆர்டர்களின் விலை குறைந்துள்ளது.

ஆனால் ரீடைல் சந்தையில் நிலைமை தலைகீழாக உள்ளது, வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்தியா முழுவதும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயர உள்ளதாக தெரிகிறது.

தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு.. சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன..?

ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்பட்டு உள்ள தடுமாற்றம் கடந்த சில நாட்களாக தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது, இதேபோல் இந்திய பங்குச்சந்தையில் இருந்து கூட கணிசமான வெளிநாட்டு முதலீடுகள் கடந்த 2 நாட்களில் வெளியேறியுள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்றைய வர்த்தகத்தில் 1967 டாவராக வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று 1966 டாலராக குறைந்து, கடந்த 1 மணிநேர வர்த்தகத்தில் 1960 டாலராக குறைந்துள்ளது. இதேவேளையில் MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.07 சதவீதம் சரிந்து 59,883 ரூபாயாக உள்ளது, இதுவே ஒரு கிலோ வெள்ளி விலை 0.33 சதவீதம் உயர்ந்து 73,911.00 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் உயர்ந்து 56000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 390 ரூபாய் உயர்ந்து 61100 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் அதிகரித்து 44,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 2000 ரூபாய் உயர்ந்து 79,700 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,000 ரூபாய், மும்பை - 55,600 ரூபாய், டெல்லி - 55,750 ரூபாய், கொல்கத்தா - 55,600 ரூபாய், பெங்களூர் - 55,650 ரூபாய், ஹைதராபாத் - 55,600 ரூபாய், கேரளா - 55,600 ரூபாய், புனே - 55,600 ரூபாய், பரோடா - 55,650 ரூபாய், அகமதாபாத் - 55,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,750 ரூபாய், லக்னோ - 55,750 ரூபாய், கோயம்புத்தூர் - 56,000 ரூபாய், மதுரை - 56,000 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,100 ரூபாய், மும்பை - 60,650 ரூபாய், டெல்லி - 60,830 ரூபாய், கொல்கத்தா - 60,680 ரூபாய், பெங்களூர் - 60,730 ரூபாய், ஹைதராபாத் - 60,680 ரூபாய், கேரளா - 60,650 ரூபாய், புனே - 60,650 ரூபாய், பரோடா - 60,730 ரூபாய், அகமதாபாத் - 60,730 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,830 ரூபாய், லக்னோ - 60,830 ரூபாய், கோயம்புத்தூர் - 61,100 ரூபாய், மதுரை - 61,100 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44800 ரூபாய், மும்பை - 44480 ரூபாய், டெல்லி - 44600 ரூபாய், கொல்கத்தா - 44480 ரூபாய், பெங்களூர் - 44520 ரூபாய், ஹைதராபாத் - 44480 ரூபாய், கேரளா - 44480 ரூபாய், புனே - 44480 ரூபாய், பரோடா - 44520 ரூபாய், அகமதாபாத் - 44520 ரூபாய், ஜெய்ப்பூர் - 44600 ரூபாய், லக்னோ - 44600 ரூபாய், கோயம்புத்தூர் - 44800 ரூபாய், மதுரை - 44800 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79700 ரூபாய், மும்பை - 74500 ரூபாய், டெல்லி - 74500 ரூபாய், கொல்கத்தா - 74500 ரூபாய், பெங்களூர் - 74000 ரூபாய், ஹைதராபாத் - 79700 ரூபாய், கேரளா - 79700 ரூபாய், புனே - 74500 ரூபாய், பரோடா - 74500 ரூபாய், அகமதாபாத் - 74500 ரூபாய், ஜெய்ப்பூர் - 74500 ரூபாய், லக்னோ - 74500 ரூபாய், கோயம்புத்தூர் - 79700 ரூபாய், மதுரை - 79700 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+