தங்கம் விலையில் திடீர் திருப்பம்! அதிர்ச்சியில் மக்கள்.. அடுத்து என்ன?

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், மக்கள் மிகவும் ஆர்வமாகத் தங்கம் வாங்க நகைக்கடைகளுக்குக் கடந்த 2 வாரமாக படையெடுத்து வருகின்றனர். மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் பல முன்னணி நகைக் கடைகள் சப்ளை அதிகரிக்கத் தங்க நகை செய்யும் ஆசாரிகளுக்கு விடுமுறையைக் கட் செய்துவிட்டு பணியாற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்படியிருக்கும் சூழ்நிலையில் தங்கம் விலை தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து உயர துவங்கியுள்ளது. அதுவும் ஒரே நாளில் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் ஏற்கனவே கூறியது போல் மத்திய அரசின் இறக்குமதி வரி குறைப்பை ரீடைல் சந்தை முழுமையாக உள்வாங்கும் வரையில் சர்வதேச சந்தையின் பாதையில் இயங்காது என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்றைய வர்த்தகத்தைப் பார்க்கும் போதும் தங்கம் விலையில் உள்நாட்டுச் சந்தைக்கும், வெளிநாட்டுச் சந்தைக்குமான பிரேக் பாயின்ட் வந்துள்ளது.

 தங்கம் விலையில் திடீர் திருப்பம்! அதிர்ச்சியில் மக்கள்.. அடுத்து என்ன?

இஸ்ரேல் லெபனான் தலைநகர் பெய்ரட்டில் நடத்திய வான் வழி தாக்குதலும், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தங்கம் விலையும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

சர்வதேசச் சந்தை வர்த்தகத்தில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2384 டாலருக்கு வர்த்தகமான நிலையில், இஸ்ரேல் நேற்று மாலை லெபனான் தலைநகரில் நடத்திய தாக்குதல் மூலம் 2410 டாலர் வரையில் உயர்ந்தது. இதை தொடர்ந்து இன்று காலை தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2425 டாலர் வரையில் உயர்ந்து காணப்படுகிறது.

இதன் வாயிலாக MCX சந்தையில் அக்டோபர் 4 ஆம் தேதி முடியும் 10 கிராம் 24 கேரட் பியூச்சர்ஸ் ஆர்டரின் மதிப்பு 0.38 சதவீதம் அதிகரித்து 69,438 ரூபாயாக உள்ளது. இதேபோல் செப்டம்பர் 5ஆம் தேதி முடியும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.78 சதவீதம் அதிகரித்து 83,310 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 64,250 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் உயர்ந்து 70,090 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து 51,400 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலை ஒரு கிலோ 2000 ரூபாய் உயர்ந்து 91000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 390 ரூபாய் உயர்ந்து 25,960 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,425 ரூபாய், மும்பை - 6,400 ரூபாய், டெல்லி - 6,415 ரூபாய், கொல்கத்தா - 6,400 ரூபாய், பெங்களூர் - 6,400 ரூபாய், ஹைதராபாத் - 6,400 ரூபாய், கேரளா - 6,400 ரூபாய், புனே - 6,400 ரூபாய், பரோடா - 6,405 ரூபாய், அகமதாபாத் - 6,405 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,415 ரூபாய், லக்னோ - 6,415 ரூபாய், கோயம்புத்தூர் - 6,425 ரூபாய், மதுரை - 6,425 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,009 ரூபாய், மும்பை - 6,982 ரூபாய், டெல்லி - 6,997 ரூபாய், கொல்கத்தா - 6,982 ரூபாய், பெங்களூர் - 6,982 ரூபாய், ஹைதராபாத் - 6,982 ரூபாய், கேரளா - 6,982 ரூபாய், புனே - 6,982 ரூபாய், பரோடா - 6,987 ரூபாய், அகமதாபாத் - 6,987 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,997 ரூபாய், லக்னோ - 6,997 ரூபாய், கோயம்புத்தூர் - 7,009 ரூபாய், மதுரை - 7,009 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51400 ரூபாய், மும்பை - 51200 ரூபாய், டெல்லி - 51320 ரூபாய், கொல்கத்தா - 51200 ரூபாய், பெங்களூர் - 51200 ரூபாய், ஹைதராபாத் - 51200 ரூபாய், கேரளா - 51200 ரூபாய், புனே - 51200 ரூபாய், பரோடா - 51240 ரூபாய், அகமதாபாத் - 51240 ரூபாய், ஜெய்ப்பூர் - 51320 ரூபாய், லக்னோ - 51320 ரூபாய், கோயம்புத்தூர் - 51400 ரூபாய், மதுரை - 51400 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,960 ரூபாய், மும்பை - 25,960 ரூபாய், டெல்லி - 25,960 ரூபாய், கொல்கத்தா - 25,960 ரூபாய், பெங்களூர் - 25,960 ரூபாய், ஹைதராபாத் - 25,960 ரூபாய், கேரளா - 25,960 ரூபாய், அகமதாபாத் - 25,960 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,960 ரூபாய், லக்னோ - 25,960 ரூபாய், கோயம்புத்தூர் - 25,960 ரூபாய், மதுரை - 25,960 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 91,000 ரூபாய், மும்பை - 86,500 ரூபாய், டெல்லி - 86,500 ரூபாய், கொல்கத்தா - 86,500 ரூபாய், பெங்களூர் - 84,000 ரூபாய், ஹைதராபாத் - 91,000 ரூபாய், கேரளா - 91,000 ரூபாய், புனே - 86,500 ரூபாய், பரோடா - 86,500 ரூபாய், அகமதாபாத் - 86,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 86,500 ரூபாய், லக்னோ - 86,500 ரூபாய், கோயம்புத்தூர் - 91,000 ரூபாய், மதுரை - 91,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,175 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,957 ரூபாய்
மலேசியா - MYR 352 - 6,397 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,274 ரூபாய்
கத்தார் - QAR 272 - 6,257 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 274 - 6,116 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 101 - 6,284 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 268 - 6,122 ரூபாய்
அமெரிக்கா - USD 73 - 6,113 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 268 - 6,122 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 268 - 6,122 ரூபாய்
துபாய் (UAE) - AED 268 - 6,122 ரூபாய்
புஜைரா (UAE) - AED 268 - 6,122 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 268 - 6,122 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 268 - 6,122 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 272 - 6,257 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,274 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 274 - 6,116 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,552 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,499 ரூபாய்
மலேசியா - MYR 367 - 6,670 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,601 ரூபாய்
கத்தார் - QAR 290 - 6,671 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 295 - 6,584 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 111 - 6,927 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 290 - 6,612 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,490 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 290 - 6,612 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 290 - 6,612 ரூபாய்
துபாய் (UAE) - AED 290 - 6,612 ரூபாய்
புஜைரா (UAE) - AED 290 - 6,612 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 290 - 6,612 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 290 - 6,612 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 290 - 6,671 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,601 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 295 - 6,584 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+