தங்கம் விலை ரூ.500 உயர்வு.. காரணம் ரூ.2000 அறிவிப்பு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

அமெரிக்க டாலர் உயர்வின் மூலம் லாபம் பார்க்க முதலீட்டாளர்கள் திட்டமிட்ட நிலையிலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை இறுக்கும் அளவீட்டை குறைக்கவும் முடிவு செய்தது தங்கம் மீது முதலீடு செய்ய ஆரம்பமாக இருந்தாலும், ஆர்பிஐ வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறும் அறிவிப்பு தங்கம் மீது அதிகப்படியான முதலீட்டை குவித்தது.

இதன் எதிரொலியாக தங்கம் விலை இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து, தங்கம் வாங்கலாம் என முடிவு செய்த பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை உயர்வு அமைந்துள்ளது.

தங்கம் விலை ரூ.500 உயர்வு.. காரணம் ரூ.2000 அறிவிப்பு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1958.32 டாலரில் இருந்து 1982 டாலர் வரையில் உயர்ந்தது. இதே வேளையில அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82.91 ரூபாய் அளவுக்கு சரிந்து 83 என்ற மோசமான நிலைக்கு உயர்ந்துள்ளது.

ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற உள்ளதாக அறிவித்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை அதிகம் வைத்துள்ளவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வேகமாக குறைக்க அதிக மதிப்புடைய பொருட்களை வாங்க கூடும். குறிப்பாக தங்கம் மீது அதிகப்படியான பணம் முதலீடு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

இதற்கு ஏற்றார் போல் சனிக்கிழமை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்வுடன் உள்ளது. MCX சந்தையில் பியூச்சர் ஆர்டர்கள் நேற்று வர்த்தக முடிவில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து 1.12 சதவீதம் உயர்ந்து 60,390 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலை 1.67 சதவீதம் உயர்ந்து 73,350 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்து 56300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 61420 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ரூ.500 உயர்வு.. காரணம் ரூ.2000 அறிவிப்பு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 45,040 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 1000 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 75,300 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,800 ரூபாய், மும்பை - 56,300 ரூபாய், டெல்லி - 56,450 ரூபாய், கொல்கத்தா - 56,300 ரூபாய், பெங்களூர் - 56,350 ரூபாய், ஹைதராபாத் - 56,300 ரூபாய், கேரளா - 56,300 ரூபாய், புனே - 56,300 ரூபாய், பரோடா - 56,350 ரூபாய், அகமதாபாத் - 56,350 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,450 ரூபாய், லக்னோ - 56,450 ரூபாய், கோயம்புத்தூர் - 56,800 ரூபாய், மதுரை - 56,800 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,960 ரூபாய், மும்பை - 61,420 ரூபாய், டெல்லி - 61,570 ரூபாய், கொல்கத்தா - 61,420 ரூபாய், பெங்களூர் - 61,470 ரூபாய், ஹைதராபாத் - 61,420 ரூபாய், கேரளா - 61,420 ரூபாய், புனே - 61,420 ரூபாய், பரோடா - 61,470 ரூபாய், அகமதாபாத் - 61,470 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,570 ரூபாய், லக்னோ - 61,570 ரூபாய், கோயம்புத்தூர் - 61,960 ரூபாய், மதுரை - 61,960 ரூபாய்.

தங்கம் விலை ரூ.500 உயர்வு.. காரணம் ரூ.2000 அறிவிப்பு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 45440 ரூபாய், மும்பை - 45040 ரூபாய், டெல்லி - 45160 ரூபாய், கொல்கத்தா - 45040 ரூபாய், பெங்களூர் - 45080 ரூபாய், ஹைதராபாத் - 45040 ரூபாய், கேரளா - 45040 ரூபாய், புனே - 45040 ரூபாய், பரோடா - 45080 ரூபாய், அகமதாபாத் - 45080 ரூபாய், ஜெய்ப்பூர் - 45160 ரூபாய், லக்னோ - 45160 ரூபாய், கோயம்புத்தூர் - 45440 ரூபாய், மதுரை - 45440 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79000 ரூபாய், மும்பை - 75300 ரூபாய், டெல்லி - 75300 ரூபாய், கொல்கத்தா - 75300 ரூபாய், பெங்களூர் - 79000 ரூபாய், ஹைதராபாத் - 79000 ரூபாய், கேரளா - 79000 ரூபாய், புனே - 75300 ரூபாய், பரோடா - 75300 ரூபாய், அகமதாபாத் - 75300 ரூபாய், ஜெய்ப்பூர் - 75300 ரூபாய், லக்னோ - 75300 ரூபாய், கோயம்புத்தூர் - 79000 ரூபாய், மதுரை - 79000 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+