இந்திய மக்களை இரவில் விழிக்க வைத்த ஆபரேஷன் சிந்தூர் வர்த்தக சந்தைக்கும் ஷாக் கொடுத்தது. சர்வதேச சந்தையில் ஆசிய சந்தை துவக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை குறைந்தது. ஆனால் ரீடைல் சந்தையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. போர் காலத்தில் எப்போதும் தங்கம் முக்கிய முதலீடாக பார்க்கப்படும் வேளையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 3430.77 டாலரில் இருந்து 3364 டாலர் வரையில் குறைந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் நிலைமை வேறு, இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 500 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்து 90,750 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 540 ரூபாய் உயர்ந்து 99000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 400 ரூபாய் உயர்ந்து 72,600 ரூபாயாக உயர்ந்து உள்ளது. வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தடாவடியாக 3100 ரூபாய் உயர்ந்து 1,11,000 ரூபாய் என்ற அளவை தொட்டு உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 370 ரூபாய் உயர்ந்து 24,310 ரூபாயாக உள்ளது.
இந்திய படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதில், பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, மற்றும் சியால்கோட் உள்ளிட்ட நான்கு இலக்குகளும், PoK-இல் ஐந்து இலக்குகளும் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலால், மே 7 அதிகாலை 1:45 மணியளவில் துவங்கியுள்ளது, காஷ்மீர் பகுதியில் இருக்கும் மக்கள் ஜெட் விமான ஒலிகளும், ஸ்ரீநகரில் இரண்டு பெரும் வெடிப்பு ஒலிகளும் கேட்டு அதிர்ந்து போயினர். ஏப்ரல் 22 பாகல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் உச்சத்தில் உள்ள நிலையில், இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து சரிவுடனே உள்ளது. காலை வர்த்தகத்தில் 0.60 சதவீதம் வரையில் சரிந்த தங்கம் விலை தற்போது 0.49 சதவீதம் சரிந்து 97,011.00 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications