தங்கம் விலை தடாலடியாக உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள், ஒரே நாளில் இவ்வளவா..?

அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்க அளவுக்கு நேற்று வெளியானது, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 3.5 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 2.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனாலும் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இலக்கு நிர்ணயம் செய்துள்ள 2 சதவீத இலக்கை இன்னும் அடையவில்லை.

அக்டோபர் மாதம் பணவீக்கம் குறைந்துள்ள நிலையில் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் நாணய கொள்கை தளர்வுகள் குறித்து பேசுவார் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில் 2 சதவீத இலக்கை இன்னும் அடையாத காரணத்தால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தங்கம் விலை தடாலடியாக உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள், ஒரே நாளில் இவ்வளவா..?

இதன் வாயிலாக அமெரிக்க டாலர் மதிப்பு தடுமாற்றத்தில் இருக்கும் காரணத்தால் பத்திர சந்தையிலோ, பங்குச்சந்தையிலோ முதலீடு செய்யாமல் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கினர். தங்கம் விலை ஏற்கனவே 7 மாத உச்சத்தில் இருந்த நிலையில் ஜெரோம் பவல் பேச்சின் மூலம் 2050 டாலர் அளவீட்டை உடைத்து உயர துவங்கியது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2035 டாலரில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், வர்த்தக முடிவில் இன்று 2072.80 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச தங்கம் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாறுபடும் என்பதால், இன்றைய டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் முக்கியமானதாக உள்ளது.

ஏற்கனவே கூறியது போல் அமெரிக்க டாலர் மதிப்பு தடுமாற்றத்தில் இருக்கும் காரணத்தால் கடந்த ஒரு வாரமாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது. இன்று 83.22 ரூபாயாக உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை பிப்ரவரி மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 63,355 ரூபாயாக உள்ளது, ஆனால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 800 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதேபோல் மார்ச் மாத பியூச்சர்ஸ் ஆர்டரில் ஒரு கிலோ வெள்ளி விலை 0.16 சதவீதம் சரிந்து 77,965 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 59,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 710 ரூபாய் உயர்ந்து 64,530 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 520 ரூபாய் அதிகரித்து 47,320 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை 1000 ரூபாய் உயர்ந்து 83,500 ரூபாயாக உள்ளது, இதோடு பிளாட்டினம் விலை 10 கிராம் 180 ரூபாய் உயர்ந்து 25000 ரூபாயாக உள்ளது. இதனால் 45000 ரூபாய்க்கு கீழ் ஒரு பவுன் தங்க நகை வாங்கக் கூடிய நிலை வராது என கணிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டின் முக்கியமான நகரங்களில் ரீடைல் சந்தையில் தங்கம் விலை என்ன தெரியுமா..? குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்க.

தங்கம் விலை தடாலடியாக உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள், ஒரே நாளில் இவ்வளவா..?

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,150 ரூபாய், மும்பை - 58,450 ரூபாய், டெல்லி - 58,600 ரூபாய், கொல்கத்தா - 58,450 ரூபாய், பெங்களூர் - 58,450 ரூபாய், ஹைதராபாத் - 58,450 ரூபாய், கேரளா - 58,450 ரூபாய், புனே - 58,450 ரூபாய், பரோடா - 58,500 ரூபாய், அகமதாபாத் - 58,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,600 ரூபாய், லக்னோ - 58,600 ரூபாய், கோயம்புத்தூர் - 59,150 ரூபாய், மதுரை - 59,150 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 64,530 ரூபாய், மும்பை - 63,760 ரூபாய், டெல்லி - 63,910 ரூபாய், கொல்கத்தா - 63,760 ரூபாய், பெங்களூர் - 63,760 ரூபாய், ஹைதராபாத் - 63,760 ரூபாய், கேரளா - 63,760 ரூபாய், புனே - 63,760 ரூபாய், பரோடா - 63,810 ரூபாய், அகமதாபாத் - 63,810 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,910 ரூபாய், லக்னோ - 63,910 ரூபாய், கோயம்புத்தூர் - 64,530 ரூபாய், மதுரை - 64,530 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 47320 ரூபாய், மும்பை - 46760 ரூபாய், டெல்லி - 46880 ரூபாய், கொல்கத்தா - 46760 ரூபாய், பெங்களூர் - 46760 ரூபாய், ஹைதராபாத் - 46760 ரூபாய், கேரளா - 46760 ரூபாய், புனே - 46760 ரூபாய், பரோடா - 46800 ரூபாய், அகமதாபாத் - 46800 ரூபாய், ஜெய்ப்பூர் - 46880 ரூபாய், லக்னோ - 46880 ரூபாய், கோயம்புத்தூர் - 47320 ரூபாய், மதுரை - 47320 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 25,000 ரூபாய், பெங்களூர் - 25,000 ரூபாய், புவனேஸ்வர் - 25,000 ரூபாய், சண்டிகர் - 25,000 ரூபாய், சென்னை - 25,000 ரூபாய், கோயம்புத்தூர் - 25,000 ரூபாய், டெல்லி - 25,000 ரூபாய், ஹைதராபாத் - 25,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,000 ரூபாய், கேரளா - 25,000 ரூபாய், கொல்கத்தா - 25,000 ரூபாய், லக்னோ - 25,000 ரூபாய், மதுரை - 25,000 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 83500 ரூபாய், மும்பை - 80500 ரூபாய், டெல்லி - 80500 ரூபாய், கொல்கத்தா - 80500 ரூபாய், பெங்களூர் - 79000 ரூபாய், ஹைதராபாத் - 83500 ரூபாய், கேரளா - 83500 ரூபாய், புனே - 80500 ரூபாய், பரோடா - 80500 ரூபாய், அகமதாபாத் - 80500 ரூபாய், ஜெய்ப்பூர் - 80500 ரூபாய், லக்னோ - 80500 ரூபாய், கோயம்புத்தூர் - 83500 ரூபாய், மதுரை - 83500 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+