முதலீட்டுச் சந்தையில் கிட்டத்தட்ட 2 மாதத்திற்குப் பின்பு மீண்டும் தங்கம் முக்கிய முதலீடாக மாறியுள்ளது, டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு தங்கம் விலை பெரிய அளவில் சரிந்து அரசு பத்திரமும், டாலர் மதிப்பும் அதிகளவில் உயர்ந்தது. ஆனால் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு கனடா - மெக்சிகோ நாடுகள் மீது 25 சதவீத வரி விதிக்க உள்ளதாக அறிவித்ததும், சீனா, இந்தியா போன்ற நாடுகள் இருக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என கூறியதும் முதலீட்டுச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரு அறிவிப்பும் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, தொடர்ந்து உயர்ந்து வந்த அரசு பத்திரமும், டாலர் மதிப்பு சரிந்தது. இதன் வாயிலாகத் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அரசு வரி விதித்தால் கட்டாயம் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க ஓரே வழி தங்கம் மட்டுமே.

தங்கம் சர்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் உயரத் துவங்கி இன்று காலை வர்த்தகத்தில் இந்தியச் சந்தையில் எதிரொலித்துள்ளது. செவ்வாயன்று 1% க்கும் அதிகமாக உயர்ந்து தங்கம் விலை இரண்டு மாத உயர்வான 2,745 டாலரை எட்டியது. நேற்று இரவு அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் 2750 டாலர் வரையில் உயர்ந்தது, இன்று காலையிலும் இதே விலை தக்கவைத்துள்ளது தங்கம்.
இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.24 சதவீதம் உயர்ந்து 79,413 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 0.35 சதவீதம் அதிகரித்து 92,416 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 860 ரூபாய் உயர்ந்து 82,090 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 750 ரூபாய் உயர்ந்து 75,250 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 60,200 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் மட்டும் குறைந்து 1,03,900 ரூபாயாக உள்ளது, மேலும் பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 60 ரூபாய் மட்டும் உயர்ந்து 26,300 ரூபாயாக உள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 60200 ரூபாய், மும்பை - 60200 ரூபாய், டெல்லி - 60320 ரூபாய், கொல்கத்தா - 60200 ரூபாய், பெங்களூர் - 60200 ரூபாய், ஹைதராபாத் - 60200 ரூபாய், கேரளா - 60200 ரூபாய், புனே - 60200 ரூபாய், பரோடா - 60240 ரூபாய், அகமதாபாத் - 60240 ரூபாய், ஜெய்ப்பூர் - 60320 ரூபாய், லக்னோ - 60320 ரூபாய், கோயம்புத்தூர் - 60200 ரூபாய், மதுரை - 60200 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,525 ரூபாய், மும்பை - 7,525 ரூபாய், டெல்லி - 7,540 ரூபாய், கொல்கத்தா - 7,525 ரூபாய், பெங்களூர் - 7,525 ரூபாய், ஹைதராபாத் - 7,525 ரூபாய், கேரளா - 7,525 ரூபாய், புனே - 7,525 ரூபாய், பரோடா - 7,530 ரூபாய், அகமதாபாத் - 7,530 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,540 ரூபாய், லக்னோ - 7,540 ரூபாய், கோயம்புத்தூர் - 7,525 ரூபாய், மதுரை - 7,525 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,209 ரூபாய், மும்பை - 8,209 ரூபாய், டெல்லி - 8,224 ரூபாய், கொல்கத்தா - 8,209 ரூபாய், பெங்களூர் - 8,209 ரூபாய், ஹைதராபாத் - 8,209 ரூபாய், கேரளா - 8,209 ரூபாய், புனே - 8,209 ரூபாய், பரோடா - 8,214 ரூபாய், அகமதாபாத் - 8,214 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,224 ரூபாய், லக்னோ - 8,224 ரூபாய், கோயம்புத்தூர் - 8,209 ரூபாய், மதுரை - 8,209 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,205 ரூபாய், மும்பை - 6,157 ரூபாய், டெல்லி - 6,169 ரூபாய், கொல்கத்தா - 6,157 ரூபாய், பெங்களூர் - 6,157 ரூபாய், ஹைதராபாத் - 6,157 ரூபாய், கேரளா - 6,157 ரூபாய், புனே - 6,157 ரூபாய், பரோடா - 6,161 ரூபாய், அகமதாபாத் - 6,161 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,169 ரூபாய், லக்னோ - 6,169 ரூபாய், கோயம்புத்தூர் - 6,205 ரூபாய்,
மதுரை - 6,205 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,03,900 ரூபாய், மும்பை - 96,400 ரூபாய், டெல்லி - 96,400 ரூபாய், கொல்கத்தா - 96,400 ரூபாய், பெங்களூர் - 96,400 ரூபாய், ஹைதராபாத் - 1,03,900 ரூபாய், கேரளா - 1,03,900 ரூபாய், புனே - 96,400 ரூபாய், பரோடா - 96,400 ரூபாய், அகமதாபாத் - 96,400 ரூபாய், ஜெய்ப்பூர் - 96,400 ரூபாய், லக்னோ - 96,400 ரூபாய், கோயம்புத்தூர் - 1,03,900 ரூபாய், மதுரை - 1,03,900 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,892 ரூபாய்
குவைத் - KWD 25.08 - 7,045 ரூபாய்
மலேசியா - MYR 363 - 7,069 ரூபாய்
ஓமன் - OMR 32.50 - 7,311 ரூபாய்
கத்தார் - QAR 310 - 7,363 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 313 - 7,224 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,937 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 305.50 - 7,202 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,754 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 305.50 - 7,202 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 305.50 - 7,202 ரூபாய்
துபாய் (UAE) - AED 305.50 - 7,202 ரூபாய்
புஜைரா (UAE) - AED 305.50 - 7,202 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 305.50 - 7,202 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 305.50 - 7,202 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 310 - 7,363 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.50 - 7,311 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 313 - 7,224 ரூபாய்
இங்கிலாந்து - GBP 65.78 - 7,025 ரூபாய்
கனடா - CAD 121.75 - 7,352 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,768 ரூபாய்
நேபாளம் - NPR 12,470.38 - 7,787 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,328 ரூபாய்
குவைத் - KWD 27.42 - 7,702 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,361 ரூபாய்
ஓமன் - OMR 34.60 - 7,784 ரூபாய்
கத்தார் - QAR 331.50 - 7,874 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 339 - 7,824 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,697 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 330 - 7,780 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,187 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 330 - 7,780 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 330 - 7,780 ரூபாய்
துபாய் (UAE) - AED 330 - 7,780 ரூபாய்
புஜைரா (UAE) - AED 330 - 7,780 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 330 - 7,780 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 330 - 7,780 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 331.50 - 7,874 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.60 - 7,784 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 339 - 7,824 ரூபாய்
இங்கிலாந்து - GBP 71.76 - 7,664 ரூபாய்
கனடா - CAD 128.50 - 7,760 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,381 ரூபாய்
நேபாளம் - NPR 13,554.76 - 8,464 ரூபாய்
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?



Click it and Unblock the Notifications