வியாழக்கிழமை காலை இந்திய பியூச்சர்ஸ் மார்கெட்டான MCX சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப்பட இன்னும் சில நாட்களே இருக்கும் வேளையில் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனாலேயே இன்று தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
குறிப்பாக, எம்சிஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடையும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டரின் தங்கம் விலை 0.35 சதவீதம் உயர்ந்து, காலை 9:20 மணி அளவில் 10 கிராம் ரூ.87,949 ஆக அதிகரித்தது. இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை தடாலடியாக உயர மற்றொரு காரணமும் உள்ளது. இதை தனியாக பார்ப்போம்.

அமெரிக்காவில் அதிக உற்பத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, வாகன இறக்குமதியில் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருப்பது, சர்வதேச வர்த்தகப் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் இது அமெரிக்காவுக்கு தான் பெரும் பாதிப்பு, இதற்கு ஏற்றார்போல் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள அனைத்து நிறுவன பங்குகளும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் புதிய வர்த்தக வரிகள் அமலுக்கு வர உள்ள நிலையில், இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பு கார் விலையை உயர்த்துவது தாண்டி, அந்நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி தடைப்படும், இது முதலீட்டாளர்களுக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது.
அதே நேரத்தில், சர்வதேச வர்த்தகத்தில் ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பை அளவிடும் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 0.32 சதவீதம் உயர்ந்து 104.55 ஆக உள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, ஸ்பாட் தங்கத்தின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்பது தான் தற்போதைய அச்சம்.
இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. 5 நாட்களாக குறைந்து வந்த தங்கம் நேற்றும் கிராமுக்கு 11 ரூபாய் மட்டுமே உயர்ந்த நிலையில் மக்கள் இதை அதிகம் பொருட்படுத்தவில்லை, ஆனால் இன்று கிராமுக்கு 44 ரூபாயும், 10 கிராமுக்கு 440 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவோருக்கு மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் அதிகரித்து 82,350 ரூபாயாக உள்ளது, இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் அதிகரித்து 89,840 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 320 ரூபாய் அதிகரித்து 65,880 ரூபாயாக உள்ளது. மேலும் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவில் மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதியில் இன்றைய தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலையைப் பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 65880 ரூபாய், மும்பை - 65880 ரூபாய், டெல்லி - 66000 ரூபாய், கொல்கத்தா - 65880 ரூபாய், பெங்களூர் - 65880 ரூபாய், ஹைதராபாத் - 65880 ரூபாய், கேரளா - 65880 ரூபாய், புனே - 65880 ரூபாய், பரோடா - 65920 ரூபாய், அகமதாபாத் - 65920 ரூபாய், ஜெய்ப்பூர் - 66000 ரூபாய், லக்னோ - 66000 ரூபாய், கோயம்புத்தூர் - 65880 ரூபாய், மதுரை - 65880 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,235 ரூபாய், மும்பை - 8,235 ரூபாய், டெல்லி - 8,250 ரூபாய், கொல்கத்தா - 8,235 ரூபாய், பெங்களூர் - 8,235 ரூபாய், ஹைதராபாத் - 8,235 ரூபாய், கேரளா - 8,235 ரூபாய், புனே - 8,235 ரூபாய், பரோடா - 8,240 ரூபாய், அகமதாபாத் - 8,240 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,250 ரூபாய், லக்னோ - 8,250 ரூபாய், கோயம்புத்தூர் - 8,235 ரூபாய், மதுரை - 8,235 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,984 ரூபாய், மும்பை - 8,984 ரூபாய், டெல்லி - 8,999 ரூபாய், கொல்கத்தா - 8,984 ரூபாய், பெங்களூர் - 8,984 ரூபாய், ஹைதராபாத் - 8,984 ரூபாய், கேரளா - 8,984 ரூபாய், புனே - 8,984 ரூபாய், பரோடா - 8,989 ரூபாய், அகமதாபாத் - 8,989 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,999 ரூபாய், லக்னோ - 8,999 ரூபாய், கோயம்புத்தூர் - 8,984 ரூபாய், மதுரை - 8,984 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,800 ரூபாய், மும்பை - 6,738 ரூபாய், டெல்லி - 6,750 ரூபாய், கொல்கத்தா - 6,738 ரூபாய், பெங்களூர் - 6,738 ரூபாய், ஹைதராபாத் - 6,738 ரூபாய், கேரளா - 6,738 ரூபாய், புனே - 6,738 ரூபாய், பரோடா - 6,742 ரூபாய், அகமதாபாத் - 6,742 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,750 ரூபாய், லக்னோ - 6,750 ரூபாய், கோயம்புத்தூர் - 6,800 ரூபாய், மதுரை - 6,800 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,800 ரூபாய், மும்பை - 26,800 ரூபாய், டெல்லி - 26,800 ரூபாய், கொல்கத்தா - 26,800 ரூபாய், பெங்களூர் - 26,800 ரூபாய், ஹைதராபாத் - 26,800 ரூபாய், கேரளா - 26,800 ரூபாய், புனே - 26,800 ரூபாய், வதோதரா - 26,800 ரூபாய், அகமதாபாத் - 26,800 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,11,000 ரூபாய், மும்பை - 1,02,000 ரூபாய், டெல்லி - 1,02,000 ரூபாய், கொல்கத்தா - 1,02,000 ரூபாய், பெங்களூர் - 1,02,000 ரூபாய், ஹைதராபாத் - 1,11,000 ரூபாய், கேரளா - 1,11,000 ரூபாய், புனே - 1,02,000 ரூபாய், பரோடா - 1,02,000 ரூபாய், அகமதாபாத் - 1,02,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,02,000 ரூபாய், லக்னோ - 1,02,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,11,000 ரூபாய், மதுரை - 1,11,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 34.807,923 - ரூபாய்
குவைத் - KWD 27.757,724 - ரூபாய்
மலேசியா - MYR 4238,192 - ரூபாய்
ஓமன் - OMR 35.958,015 - ரூபாய்
கத்தார் - QAR 3418,029 - ரூபாய்
சவுதி அரேபியா - SAR 3447,871 - ரூபாய்
சிங்கப்பூர் - SGD 126.508,112 - ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 336.507,863 - ரூபாய்
அமெரிக்கா - USD 91.507,854 - ரூபாய்
அபுதாபி (UAE) - AED 336.507,863 - ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 336.507,863 - ரூபாய்
துபாய் (UAE) - AED 336.507,863 - ரூபாய்
புஜைரா (UAE) - AED 336.507,863 - ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 336.507,863 - ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 336.507,863 - ரூபாய்
தோஹா (Qatar) - QAR 3418,029 - ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 35.958,015 - ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 3447,871 - ரூபாய்
இங்கிலாந்து - GBP 69.337,686 - ரூபாய்
கனடா - CAD 133.758,048 - ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 149.508,095 - ரூபாய்
நேபாளம் - NPR 13,685.088,555 - ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 37.208,469 - ரூபாய்
குவைத் - KWD 30.258,420 - ரூபாய்
மலேசியா - MYR 4408,521 - ரூபாய்
ஓமன் - OMR 38.358,550 - ரூபாய்
கத்தார் - QAR 365.508,606 - ரூபாய்
சவுதி அரேபியா - SAR 3748,557 - ரூபாய்
சிங்கப்பூர் - SGD 139.208,927 - ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 363.258,488 - ரூபாய்
அமெரிக்கா - USD 97.258,348 - ரூபாய்
அபுதாபி (UAE) - AED 363.258,488 - ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 363.258,488 - ரூபாய்
துபாய் (UAE) - AED 363.258,488 - ரூபாய்
புஜைரா (UAE) - AED 363.258,488 - ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 363.258,488 - ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 363.258,488 - ரூபாய்
தோஹா (Qatar) - QAR 365.508,606 - ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.358,550 - ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 3748,557 - ரூபாய்
இங்கிலாந்து - GBP 75.638,385 - ரூபாய்
கனடா - CAD 141.258,500 - ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 163.108,831 - ரூபாய்
நேபாளம் - NPR 14,875.089,299 - ரூபாய்
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் உருவாகியுள்ள இந்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்த ஆண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 2 முறை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அடுத்த மாதம் நடக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை ஆகியவை தங்கத்தின் விலையை தொடர்ந்து அதிக அளவில் வைத்திருக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அவ்வப்போது லாப நோக்கத்திற்காக தங்கத்தை மக்கள் விற்கலாம், இதனால் தங்கம் விலை அவ்வபோது சிறிய அளவிலான சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?



Click it and Unblock the Notifications