தங்கம் விலை ஷாக் மேல் ஷாக்.. இனி நடக்கப்போவது இதுதான்..!

இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு முதலீடு என்றால் தங்கம், பங்குச்சந்தை போல் சிறிய தொகைக்கும் தங்கத்தை வாங்க முடியும் என்பதாலும், தங்கம் நீண்ட கால அடிப்படையில் நிலையான சொத்தாகக் கருதப்படும் காரணத்தாலும் தங்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி அதிகம் முதலீடு செய்யும் விஷயமாக உள்ளது. இப்படியிருக்கும் வேளையில், தங்கம் விலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் அதிகப்படியான மக்களைப் பாதிக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு 12 வருடத்திற்கு பின்பு தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைத்தது மூலம் தங்கம் விலை பெரிய அளவில் சரிந்த நிலையில், கடந்த 10 நாட்களாக வழக்கம் போல் சர்வதேச சந்தைக்கு இணையாகச் செயல்படத் துவங்கியுள்ளது. சீனாவில் பொருளாதார வளர்ச்சியில் தொய்வு, அமெரிக்காவில் ரெசிஷன் அச்சம், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம், ஜப்பானில் வட்டி விகித உயர்வின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாகச் சர்வதேச வர்த்த சந்தை இந்த வாரம் மந்தமாகத் துவங்கியுள்ளது.

தங்கம் விலை ஷாக் மேல் ஷாக்.. இனி நடக்கப்போவது இதுதான்..!

பொதுவாக இத்தகைய சூழ்நிலையில் தங்கம் மீது அதிகம் முதலீடு செய்யப்பட வேண்டும், ஆனால் பங்குச்சந்தையிலும், நாணய சந்தையிலும் ஏற்பட்டு உள்ள தடுமாற்றத்திலிருந்து மீண்டு வர முதலீட்டாளர்கள் தீவிர முயற்சியில் இருக்கும் காரணத்தால் உபரி முதலீடுகள் வெறும் பணமாக வைக்கப் பல முதலீட்டாளர்கள் முடிவு செய்யும் காரணத்தால் தங்கம் விலையும் கணிசமான உயர்வுடன் நகர்ந்து வருகிறது.

இந்திய ரீடைல் சந்தையில் கடந்த 4 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் இதேவேளையில், அமெரிக்க மத்திய வங்கி 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்களைச் சந்தையிலிருந்து திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதனால் விரைவில் பணப்புழக்கம் குறைந்து வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் 1 அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை கடந்த வாரம் வர்த்தக முடிவில் பதிவான 2430 டாலர் விலையில் இருந்து 2424 டாலராக இன்று காலையில் சரிந்தது. ஆனால் ஆசிய சந்தை வர்த்தக சரிவில் இருந்து மீண்டு வந்து 2433 டாலர் வரையில் உயர்ந்தது. இதேபோல் காமெக்ஸ் பியூச்சர்ஸ்-ல் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 5.2 டாலர் குறைந்து 2468.2 டாலராக உள்ளது.

இதேவேளையில் இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் பியூச்சர்ஸ் சந்தையில் 0.05 சதவீதம் அதிகரித்து 69,929 ரூபாயாக உள்ளது, இதுவே வெள்ளி விலை 0.32 சதவீதம் உயர்ந்து 80,802.00 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் உயர்ந்து 64,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 270 ரூபாய் உயர்ந்து 70,580 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து 51,760 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து 87,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 140 ரூபாய் குறைந்து 24,770 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,470 ரூபாய், மும்பை - 6,470 ரூபாய், டெல்லி - 6,485 ரூபாய், கொல்கத்தா - 6,470 ரூபாய், பெங்களூர் - 6,470 ரூபாய், ஹைதராபாத் - 6,470 ரூபாய், கேரளா - 6,470 ரூபாய், புனே - 6,470 ரூபாய், பரோடா - 6,475 ரூபாய், அகமதாபாத் - 6,475 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,485 ரூபாய், லக்னோ - 6,485 ரூபாய், கோயம்புத்தூர் - 6,470 ரூபாய், மதுரை - 6,470 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,058 ரூபாய், மும்பை - 7,058 ரூபாய், டெல்லி - 7,073 ரூபாய், கொல்கத்தா - 7,058 ரூபாய், பெங்களூர் - 7,058 ரூபாய், ஹைதராபாத் - 7,058 ரூபாய், கேரளா - 7,058 ரூபாய், புனே - 7,058 ரூபாய், பரோடா - 7,063 ரூபாய், அகமதாபாத் - 7,063 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,073 ரூபாய், லக்னோ - 7,073 ரூபாய், கோயம்புத்தூர் - 7,058 ரூபாய், மதுரை - 7,058 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51760 ரூபாய், மும்பை - 51760 ரூபாய், டெல்லி - 51880 ரூபாய், கொல்கத்தா - 51760 ரூபாய், பெங்களூர் - 51760 ரூபாய், ஹைதராபாத் - 51760 ரூபாய், கேரளா - 51760 ரூபாய், புனே - 51760 ரூபாய், பரோடா - 51800 ரூபாய், அகமதாபாத் - 51800 ரூபாய், ஜெய்ப்பூர் - 51880 ரூபாய், லக்னோ - 51880 ரூபாய், கோயம்புத்தூர் - 51760 ரூபாய், மதுரை - 51760 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 24,770 ரூபாய், மும்பை - 24,770 ரூபாய், டெல்லி - 24,770 ரூபாய், கொல்கத்தா - 24,770 ரூபாய், பெங்களூர் - 24,770 ரூபாய், ஹைதராபாத் - 24,770 ரூபாய், கேரளா - 24,770 ரூபாய், அகமதாபாத் - 24,770 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,770 ரூபாய், லக்னோ - 24,770 ரூபாய், கோயம்புத்தூர் - 24,770 ரூபாய், மதுரை - 24,770 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87,500 ரூபாய், மும்பை - 82,500 ரூபாய், டெல்லி - 82,500 ரூபாய், கொல்கத்தா - 82,500 ரூபாய், பெங்களூர் - 79,000 ரூபாய், ஹைதராபாத் - 87,500 ரூபாய், கேரளா - 87,500 ரூபாய், புனே - 82,500 ரூபாய், பரோடா - 82,500 ரூபாய், அகமதாபாத் - 82,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 82,500 ரூபாய், லக்னோ - 82,500 ரூபாய், கோயம்புத்தூர் - 87,500 ரூபாய், மதுரை - 87,500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,302 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,078 ரூபாய்
மலேசியா - MYR 343 - 6,476 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,401 ரூபாய்
கத்தார் - QAR 277 - 6,378 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 279 - 6,240 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100 - 6,346 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 273 - 6,235 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,213 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 273 - 6,235 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 273 - 6,235 ரூபாய்
துபாய் (UAE) - AED 273 - 6,235 ரூபாய்
புஜைரா (UAE) - AED 273 - 6,235 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 273 - 6,235 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 273 - 6,235 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 277 - 6,378 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,401 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 279 - 6,240 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,681 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,630 ரூபாய்
மலேசியா - MYR 355 - 6,702 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,750 ரூபாய்
கத்தார் - QAR 296 - 6,815 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 301 - 6,732 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110 - 6,998 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 295 - 6,738 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,591 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 295 - 6,738 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 295 - 6,738 ரூபாய்
துபாய் (UAE) - AED 295 - 6,738 ரூபாய்
புஜைரா (UAE) - AED 295 - 6,738 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 295 - 6,738 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 295 - 6,738 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 296 - 6,815 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,750 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 301 - 6,732 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+