Gold Rate Today: தங்கம் விலை கடந்த 4 நாட்கள் குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் அதிரடியாக 1000 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. ஒருபக்கம் மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைந்தது மூலம் மக்கள் அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்தது மூலம் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதேவேளையில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தங்கம் நகை ஏற்றுமதி வர்த்தகமும் இந்த வரி குறைப்பால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சனையைச் சரி செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் தங்கம் மீது குறைக்கப்பட்ட வரியை மீண்டும் உயர்த்த உள்ளதாகக் கருத்து நிலவி வருகிறது. இது வெறும் கணிப்பு என்றாலும் சந்தை நிலவரத்தைப் பார்க்கும் போது இதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விற்பனை சந்தையில் அதிகரித்துள்ளது.

இதேவேளையில் அமெரிக்கப் பங்குச்சந்தை மோசமான சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில் பெரும் பகுதி முதலீடுகள் தற்போது தங்கம் மீது திரும்பியுள்ளது, இதன் வாயிலாகக் கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2737 டாலரில் இருந்து 2765 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இது 2790 டாலர் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் மற்றும் அமெரிக்கச் சந்தை நிலவரத்தின் எதிரொலியாகத் தங்கம் விலை இன்று சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தில் தடாலடியாக உயர்ந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் கோவை, மதுரை, திருநெல்வேலி, தருமபுரி என அனைத்து மாவட்டத்திலும் தங்கம் விலை 900 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இன்றைய ரீடைல் வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 850 ரூபாய் உயர்ந்து 75,950 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 920 ரூபாய் உயர்ந்து 82850 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 680 ரூபாய் உயர்ந்து 60,760 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெள்ளி விலையில் இன்று எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ நேற்றைய விலையான 1,04,000 ஆகவே உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. சரி தமிழ்நாட்டின் முக்கிய நகரத்திலும், இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை இப்போது விளக்கமாக பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 60760 ரூபாய், மும்பை - 60760 ரூபாய், டெல்லி - 60880 ரூபாய், கொல்கத்தா - 60760 ரூபாய், பெங்களூர் - 60760 ரூபாய், ஹைதராபாத் - 60760 ரூபாய், கேரளா - 60760 ரூபாய், புனே - 60760 ரூபாய், பரோடா - 60800 ரூபாய், அகமதாபாத் - 60800 ரூபாய், ஜெய்ப்பூர் - 60880 ரூபாய், லக்னோ - 60880 ரூபாய், கோயம்புத்தூர் - 60760 ரூபாய், மதுரை - 60760 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,595 ரூபாய், மும்பை - 7,595 ரூபாய், டெல்லி - 7,610 ரூபாய், கொல்கத்தா - 7,595 ரூபாய், பெங்களூர் - 7,595 ரூபாய், ஹைதராபாத் - 7,595 ரூபாய், கேரளா - 7,595 ரூபாய், புனே - 7,595 ரூபாய், பரோடா - 7,600 ரூபாய், அகமதாபாத் - 7,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,610 ரூபாய், லக்னோ - 7,610 ரூபாய், கோயம்புத்தூர் - 7,595 ரூபாய், மதுரை - 7,595 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,285 ரூபாய், மும்பை - 8,285 ரூபாய், டெல்லி - 8,300 ரூபாய், கொல்கத்தா - 8,285 ரூபாய், பெங்களூர் - 8,285 ரூபாய், ஹைதராபாத் - 8,285 ரூபாய், கேரளா - 8,285 ரூபாய், புனே - 8,285 ரூபாய், பரோடா - 8,290 ரூபாய், அகமதாபாத் - 8,290 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,300 ரூபாய், லக்னோ - 8,300 ரூபாய், கோயம்புத்தூர் - 8,285 ரூபாய், மதுரை - 8,285 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,275 ரூபாய், மும்பை - 6,214 ரூபாய், டெல்லி - 6,227 ரூபாய், கொல்கத்தா - 6,214 ரூபாய், பெங்களூர் - 6,214 ரூபாய், ஹைதராபாத் - 6,214 ரூபாய், கேரளா - 6,214 ரூபாய், புனே - 6,214 ரூபாய், பரோடா - 6,218 ரூபாய், அகமதாபாத் - 6,218 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,227 ரூபாய், லக்னோ - 6,227 ரூபாய், கோயம்புத்தூர் - 6,275 ரூபாய், மதுரை - 6,275 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,100 ரூபாய், மும்பை - 26,100 ரூபாய், டெல்லி - 26,100 ரூபாய், கொல்கத்தா - 26,100 ரூபாய், பெங்களூர் - 26,100 ரூபாய், ஹைதராபாத் - 26,100 ரூபாய், கேரளா - 26,100 ரூபாய், புனே - 26,100 ரூபாய், வதோதரா - 26,100 ரூபாய், அகமதாபாத் - 26,100 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,04,000 ரூபாய், மும்பை - 96,500 ரூபாய், டெல்லி - 96,500 ரூபாய், கொல்கத்தா - 96,500 ரூபாய், பெங்களூர் - 96,500 ரூபாய், ஹைதராபாத் - 1,04,000 ரூபாய், கேரளா - 1,04,000 ரூபாய், புனே - 96,500 ரூபாய், பரோடா - 96,500 ரூபாய், அகமதாபாத் - 96,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 96,500 ரூபாய், லக்னோ - 96,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,04,000 ரூபாய், மதுரை - 1,04,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,891 ரூபாய்
குவைத் - KWD 25.20 - 7,077 ரூபாய்
மலேசியா - MYR 363 - 7,152 ரூபாய்
ஓமன் - OMR 32.70 - 7,354 ரூபாய்
கத்தார் - QAR 312 - 7,411 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 315 - 7,272 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,969 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 308.25 - 7,268 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,754 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 307.75 - 7,256 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 307.75 - 7,256 ரூபாய்
துபாய் (UAE) - AED 307.75 - 7,256 ரூபாய்
புஜைரா (UAE) - AED 307.75 - 7,256 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 307.75 - 7,256 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 307.75 - 7,256 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 312 - 7,411 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.70 - 7,354 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 315 - 7,272 ரூபாய்
இங்கிலாந்து - GBP 65.48 - 7,059 ரூபாய்
கனடா - CAD 123.50 - 7,429 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,738 ரூபாய்
நேபாளம் - NPR 12,557.14 - 7,847 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,328 ரூபாய்
குவைத் - KWD 27.54 - 7,734 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,447 ரூபாய்
ஓமன் - OMR 34.80 - 7,827 ரூபாய்
கத்தார் - QAR 333.50 - 7,922 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 340 - 7,849 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,732 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 333 - 7,851 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,187 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 332.25 - 7,833 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 332.25 - 7,833 ரூபாய்
துபாய் (UAE) - AED 332.25 - 7,833 ரூபாய்
புஜைரா (UAE) - AED 332.25 - 7,833 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 332.25 - 7,833 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 332.25 - 7,833 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 333.50 - 7,922 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.80 - 7,827 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 340 - 7,849 ரூபாய்
இங்கிலாந்து - GBP 71.43 - 7,700 ரூபாய்
கனடா - CAD 130.25 - 7,836 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,349 ரூபாய்
நேபாளம் - NPR 13,649.07 - 8,530 ரூபாய்
More From GoodReturns

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications