தங்கம் விலை அட்சய திருதியை நாளில் அதிகப்படியான உள்நாட்டு டிமாண்ட் இருந்த காரணத்தால் ஒரே நாளில் 115 ரூபாய் வரையில் உயர்ந்தது, ஆனால் கணிக்கப்பட்ட படியே அடுத்த 3 நாட்களில் தங்கம் விலை மளமளவென குறைந்தது.
ஆனால் நேற்று முதல் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் தான். அமெரிக்காவின் ஏப்ரல் மாத பணவீக்கம் மார்ச் மாதத்தை விட குறைந்துள்ளதால் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைப்பது ஒருப்பக்கம் இருந்தாலும், அமெரிக்க பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் குறைவது தான் தற்போதைய முக்கிய பிரச்சனை.
பத்திர முதலீட்டு சந்தையில் முதலீடுகள் மீதான லாபம் குறைந்தால் இந்த முதலீடுகள் வெளியேறி தங்கத்திலோ அல்லது பங்குச்சந்தையிலோ குவியும். தற்போது இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பொது தேர்தல் நடக்கும் காரணத்தால் பங்குச்சந்தையை காட்டிலும் தங்கத்தில் அதிகமாக முதலீடுகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை சர்வதேச வர்த்தக சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2355 டாலரில் இருந்து 2395 டாலராக உயர்ந்து அதிரடி கிளப்பியுள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது, இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.17 சதவீதம் உயர்ந்து 73,228.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.68 சதவீதம் உயர்ந்து 87,452.00 ரூபாயாக உள்ளது.
இன்று (மே 16) ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 700 ரூபாய் உயர்ந்து 67,950 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 770 ரூபாய் உயர்ந்து 74,130 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஒவ்வொரு நகரத்திலும் அதன் ரீடைல் வர்த்தக சந்தை சார்ந்து மாறுப்படும்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 560 ரூபாய் உயர்ந்து 54,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1500 ரூபாய் உயர்ந்து 92,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 410 ரூபாய் உயர்ந்து 28,700 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,795 ரூபாய், மும்பை - 6,785 ரூபாய், டெல்லி - 6,800 ரூபாய், கொல்கத்தா - 6,785 ரூபாய், பெங்களூர் - 6,785 ரூபாய், ஹைதராபாத் - 6,785 ரூபாய், கேரளா - 6,785 ரூபாய், புனே - 6,785 ரூபாய், பரோடா - 6,790 ரூபாய், அகமதாபாத் - 6,790 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,800 ரூபாய், லக்னோ - 6,800 ரூபாய், கோயம்புத்தூர் - 6,795 ரூபாய், மதுரை - 6,795 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,413 ரூபாய், மும்பை - 7,402 ரூபாய், டெல்லி - 7,417 ரூபாய், கொல்கத்தா - 7,402 ரூபாய், பெங்களூர் - 7,402 ரூபாய், ஹைதராபாத் - 7,402 ரூபாய், கேரளா - 7,402 ரூபாய், புனே - 7,402 ரூபாய், பரோடா - 7,407 ரூபாய், அகமதாபாத் - 7,407 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,417 ரூபாய், லக்னோ - 7,417 ரூபாய், கோயம்புத்தூர் - 7,413 ரூபாய், மதுரை - 7,413 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5436 ரூபாய், மும்பை - 5428 ரூபாய், டெல்லி - 5440 ரூபாய், கொல்கத்தா - 5428 ரூபாய், பெங்களூர் - 5428 ரூபாய், ஹைதராபாத் - 5428 ரூபாய், கேரளா - 5428 ரூபாய், புனே - 5428 ரூபாய், பரோடா - 5432 ரூபாய், அகமதாபாத் - 5432 ரூபாய், ஜெய்ப்பூர் - 5440 ரூபாய், லக்னோ - 5440 ரூபாய், கோயம்புத்தூர் - 5436 ரூபாய், மதுரை - 5436 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 28,700 ரூபாய், மும்பை - 28,700 ரூபாய், டெல்லி - 28,700 ரூபாய், கொல்கத்தா - 28,700 ரூபாய், பெங்களூர் - 28,700 ரூபாய், ஹைதராபாத் - 28,700 ரூபாய், கேரளா - 28,700 ரூபாய், அகமதாபாத் - 28,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 28,700 ரூபாய், லக்னோ - 28,700 ரூபாய், கோயம்புத்தூர் - 28,700 ரூபாய், மதுரை - 28,700 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 92500 ரூபாய், மும்பை - 89100 ரூபாய், டெல்லி - 89100 ரூபாய், கொல்கத்தா - 89100 ரூபாய், பெங்களூர் - 86750 ரூபாய், ஹைதராபாத் - 92500 ரூபாய், கேரளா - 92500 ரூபாய், புனே - 89100 ரூபாய், பரோடா - 89100 ரூபாய், அகமதாபாத் - 89100 ரூபாய், ஜெய்ப்பூர் - 89100 ரூபாய், லக்னோ - 89100 ரூபாய், கோயம்புத்தூர் - 92500 ரூபாய், மதுரை - 92500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.70 - 6,133 ரூபாய்,
குவைத் - KWD 22.35 - 6,079 ரூபாய்,
மலேசியா - MYR 350 - 6,241 ரூபாய்,
ஓமன் - OMR 28.80 - 6,246 ரூபாய்,
கத்தார் - QAR 271.50 - 6,216 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 274 - 6,098 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 99.60 - 6,192 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 267.25 - 6,074 ரூபாய்,
அமெரிக்கா - USD 72.50 - 6,052 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 267.25 - 6,074 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 267.25 - 6,074 ரூபாய்,
துபாய் (UAE) - AED 267.25 - 6,074 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 267.25 - 6,074 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 267.25 - 6,074 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 267.25 - 6,074 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 271.50 - 6,216 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 28.80 - 6,246 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 274 - 6,098 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.40 - 6,509 ரூபாய்,
குவைத் - KWD 23.95 - 6,514 ரூபாய்,
மலேசியா - MYR 368 - 6,562 ரூபாய்,
ஓமன் - OMR 30.35 - 6,582 ரூபாய்,
கத்தார் - QAR 289.50 - 6,628 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 295 - 6,566 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 110.10 - 6,844 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 288.75 - 6,563 ரூபாய்,
அமெரிக்கா - USD 77 - 6,427 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 288.75 - 6,563 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 288.75 - 6,563 ரூபாய்,
துபாய் (UAE) - AED 288.75 - 6,563 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 288.75 - 6,563 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 288.75 - 6,563 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 288.75 - 6,563 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 289.50 - 6,628 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 30.35 - 6,582 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 295 - 6,566 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications