தங்கம் விலை உயர்வு.. டிரம்ப் செய்த லீலை..!

அமெரிக்க அரசின் சமீபத்திய நடவடிக்கை உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25% வரி விதிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவு, வர்த்தகப் போரின் அச்சுறுத்தலை அதிகரித்து, உலகளாவிய பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை பட்ஜெட் நாளில் எதிர்பார்த்தபடியே அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 84,490 ரூபாயாக உள்ளது. இதேபோல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் அதிகரித்து 77,450 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை உயர்வு.. டிரம்ப் செய்த லீலை..!

மேலும் ஒரு சரவன் தங்கம் லிலை 120 ரூபாய் அதிகரித்து 61,960 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளி விலை நேற்றைய அளவில் இருந்து மாறாமல் 1,07,000 ரூபாயாக உள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 கிராம் பிளாட்டினம் விலை 390 ரூபாய் உயர்ந்து 27,240 ரூபாயாக உள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 61960 ரூபாய், மும்பை - 61960 ரூபாய், டெல்லி - 62080 ரூபாய், கொல்கத்தா - 61960 ரூபாய், பெங்களூர் - 61960 ரூபாய், ஹைதராபாத் - 61960 ரூபாய், கேரளா - 61960 ரூபாய், புனே - 61960 ரூபாய், பரோடா - 62000 ரூபாய், அகமதாபாத் - 62000 ரூபாய், ஜெய்ப்பூர் - 62080 ரூபாய், லக்னோ - 62080 ரூபாய், கோயம்புத்தூர் - 61960 ரூபாய், மதுரை - 61960 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,745 ரூபாய், மும்பை - 7,745 ரூபாய், டெல்லி - 7,760 ரூபாய், கொல்கத்தா - 7,745 ரூபாய், ங்களூர் - 7,745 ரூபாய், ஹைதராபாத் - 7,745 ரூபாய், கேரளா - 7,745 ரூபாய், புனே - 7,745 ரூபாய், பரோடா - 7,750 ரூபாய், அகமதாபாத் - 7,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,760 ரூபாய், லக்னோ - 7,760 ரூபாய், கோயம்புத்தூர் - 7,745 ரூபாய், மதுரை - 7,745 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,449 ரூபாய், மும்பை - 8,449 ரூபாய், டெல்லி - 8,464 ரூபாய், கொல்கத்தா - 8,449 ரூபாய், பெங்களூர் - 8,449 ரூபாய், ஹைதராபாத் - 8,449 ரூபாய், கேரளா - 8,449 ரூபாய், புனே - 8,449 ரூபாய், பரோடா - 8,454 ரூபாய், அகமதாபாத் - 8,454 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,464 ரூபாய், லக்னோ - 8,464 ரூபாய், கோயம்புத்தூர் - 8,449 ரூபாய், மதுரை - 8,449 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,395 ரூபாய், மும்பை - 6,337 ரூபாய், டெல்லி - 6,349 ரூபாய், கொல்கத்தா - 6,337 ரூபாய், பெங்களூர் - 6,337 ரூபாய், ஹைதராபாத் - 6,337 ரூபாய், கேரளா - 6,337 ரூபாய், புனே - 6,337 ரூபாய், பரோடா - 6,341 ரூபாய், அகமதாபாத் - 6,341 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,349 ரூபாய், லக்னோ - 6,349 ரூபாய், கோயம்புத்தூர் - 6,395 ரூபாய், மதுரை - 6,395 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,240 ரூபாய், மும்பை - 27,240 ரூபாய், டெல்லி - 27,240 ரூபாய், கொல்கத்தா - 27,240 ரூபாய், பெங்களூர் - 27,240 ரூபாய், ஹைதராபாத் - 27,240 ரூபாய், கேரளா - 27,240 ரூபாய், புனே - 27,240 ரூபாய், வதோதரா - 27,240 ரூபாய், அகமதாபாத் - 27,240 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,07,000 ரூபாய், மும்பை - 99,500 ரூபாய், டெல்லி - 99,500 ரூபாய், கொல்கத்தா - 99,500 ரூபாய், பெங்களூர் - 99,500 ரூபாய், ஹைதராபாத் - 1,07,000 ரூபாய், கேரளா - 1,07,000 ரூபாய், புனே - 99,500 ரூபாய், பரோடா - 99,500 ரூபாய், அகமதாபாத் - 99,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 99,500 ரூபாய், லக்னோ - 99,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,07,000 ரூபாய், மதுரை - 1,07,000 ரூபாய்.

அமெரிக்காவின் வரி உயர்வால் உருவாகியுள்ள வர்த்தகப் போர் காரணமாக, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான இடங்களில் முதலீடு செய்யத் தூண்டப்படுகின்றனர். தங்கம் பாரம்பரியமாக பாதுகாப்பான முதலீட்டுத் தளமாகக் கருதப்படுவதால், இந்த சூழ்நிலையில் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்துள்ளது.

இந்த வர்த்தகப் போரின் எதிரொலியாக, வெள்ளிக்கிழமை அமெரிக்க நேரத்தில் அந்நாட்டின் வர்த்தகம் தொடங்கியதும் தங்க விலை புதிய உச்சத்தை எட்டியது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,815.75 அளவை நெருங்கியது. இது தங்கம் முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், பொதுவாக பொருளாதாரத்திற்கு இது நல்ல அறிகுறியாக இல்லை.

வர்த்தகப் போர் நீடித்தால், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம். மேலும், பணவீக்கம் அதிகரித்து, பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படலாம்.

இந்த நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்கள் பொருளாதார கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்வது, இந்த நிச்சயமற்ற சூழலில் ஒரு விருப்பமாக இருக்கலாம். இருப்பினும், நீண்ட காலத்திற்கு பார்க்கும்போது, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+