தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் தங்கத்தின் விலை ஒரு நாள் உயரும்போது மக்களின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, குறிப்பாக மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மற்றொரு முக்கியமான விஷயமாகவும் இது உள்ளது. இன்று தங்கம் நகைகளைப் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அதிகம் பயன்படுத்தும் காரணத்தால் நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தங்கம் விலை ஒவ்வொரு முறையும் அதிகரிக்கும் போது அதிகப்படியான மக்களைப் பாதித்து வருகிறது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்திய பின்பு சர்வதேச அளவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேவேளையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயரும் காரணத்தால் தங்கம் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாகக் கடந்த 8 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆனால் தங்கம் விலை அடுத்த 2 நாட்களில் குறையும் சூழ்நிலை தற்போது உருவாக்கியுள்ளது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இதற்கு முக்கியமான காரணம் அடுத்த சில நாட்களில் வெளியாக இருக்கும் அமெரிக்கத் தனிநபர் நுகர்வோர் குறியீடு தரவுகள் தான். அது அடுத்த வட்டி விகித குறைப்பை நிர்ணயம் செய்யும் முக்கிய கருவியாக மட்டும் அல்லாமல் டாலர் மதிப்பை நிர்ணயம் செய்யும் முக்கிய விஷயமாக உள்ளது.
இப்படியிருக்கையில், தங்கம் விலை நேற்று பதிவான வரலாற்று உச்ச விலையில் இருந்து கணிசமான இன்று ஆசியச் சந்தையில் குறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2685 டாலர் வரையில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் உயர்ந்த நிலையில் இன்று, 2663 டாலர் வரையில் குறைந்துள்ளது.
இதன் தாக்கம் நாளை ரீடைல் சந்தையில் எதிரொலிக்கும், நேற்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தின் தாக்கத்தின் காரணமாக இன்று ரீடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 8 நாளில் ஒரு கிராம் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 275 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 71,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 430 ரூபாய் உயர்ந்து 77,450 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து 56,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் வீதம் கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 1,02,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 120 ரூபாய் உயர்ந்து 26,860 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,100 ரூபாய், மும்பை - 7,100 ரூபாய், டெல்லி - 7,115 ரூபாய், கொல்கத்தா - 7,100 ரூபாய், பெங்களூர் - 7,100 ரூபாய், ஹைதராபாத் - 7,100 ரூபாய், கேரளா - 7,100 ரூபாய், புனே - 7,100 ரூபாய், பரோடா - 7,105 ரூபாய், அகமதாபாத் - 7,105 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,115 ரூபாய், லக்னோ - 7,115 ரூபாய், கோயம்புத்தூர் - 7,100 ரூபாய், மதுரை - 7,100 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,745 ரூபாய், மும்பை - 7,745 ரூபாய், டெல்லி - 7,760 ரூபாய், கொல்கத்தா - 7,745 ரூபாய், பெங்களூர் - 7,745 ரூபாய், ஹைதராபாத் - 7,745 ரூபாய், கேரளா - 7,745 ரூபாய், புனே - 7,745 ரூபாய், பரோடா - 7,750 ரூபாய், அகமதாபாத் - 7,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,760 ரூபாய், லக்னோ - 7,760 ரூபாய், கோயம்புத்தூர் - 7,745 ரூபாய், மதுரை - 7,745 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,815 ரூபாய், மும்பை - 5,809 ரூபாய், டெல்லி - 5,822 ரூபாய், கொல்கத்தா - 5,809 ரூபாய், பெங்களூர் - 5,809 ரூபாய், ஹைதராபாத் - 5,809 ரூபாய், கேரளா - 5,809 ரூபாய், புனே - 5,809 ரூபாய், பரோடா - 5,813 ரூபாய், அகமதாபாத் - 5,813 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,822 ரூபாய், லக்னோ - 5,822 ரூபாய், கோயம்புத்தூர் - 5,815 ரூபாய், மதுரை - 5,815 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 56800 ரூபாய், மும்பை - 56800 ரூபாய், டெல்லி - 56920 ரூபாய், கொல்கத்தா - 56800 ரூபாய், பெங்களூர் - 56800 ரூபாய், ஹைதராபாத் - 56800 ரூபாய், கேரளா - 56800 ரூபாய், புனே - 56800 ரூபாய், பரோடா - 56840 ரூபாய், அகமதாபாத் - 56840 ரூபாய், ஜெய்ப்பூர் - 56920 ரூபாய், லக்னோ - 56920 ரூபாய், கோயம்புத்தூர் - 56800 ரூபாய், மதுரை - 56800 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,860 ரூபாய், மும்பை - 26,860 ரூபாய், டெல்லி - 26,860 ரூபாய், கொல்கத்தா - 26,860 ரூபாய், பெங்களூர் - 26,860 ரூபாய், ஹைதராபாத் - 26,860 ரூபாய், கேரளா - 26,860 ரூபாய், புனே - 26,860 ரூபாய், வதோதரா - 26,860 ரூபாய், அகமதாபாத் - 26,860 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,02,000 ரூபாய், மும்பை - 96,000 ரூபாய், டெல்லி - 96,000 ரூபாய், கொல்கத்தா - 96,000 ரூபாய், பெங்களூர் - 90,000 ரூபாய், ஹைதராபாத் - 1,02,000 ரூபாய், கேரளா - 1,02,000 ரூபாய், புனே - 96,000 ரூபாய், பரோடா - 96,000 ரூபாய், அகமதாபாத் - 96,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 96,000 ரூபாய், லக்னோ - 96,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,02,000 ரூபாய், மதுரை - 1,02,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,838 ரூபாய்
குவைத் - KWD 24.25 - 6,646 ரூபாய்
மலேசியா - MYR 346 - 7,013 ரூபாய்
ஓமன் - OMR 31.95 - 6,944 ரூபாய்
கத்தார் - QAR 298 - 6,840 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,782 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 107.20 - 6,976 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 294.50 - 6,709 ரூபாய்
அமெரிக்கா - USD 80 - 6,695 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 294.50 - 6,709 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 294.50 - 6,709 ரூபாய்
துபாய் (UAE) - AED 294.50 - 6,709 ரூபாய்
புஜைரா (UAE) - AED 294.50 - 6,709 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 294.50 - 6,709 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 294.50 - 6,709 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 298 - 6,840 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.95 - 6,944 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,782 ரூபாய்
இங்கிலாந்து - GBP 58.75 - 6,578 ரூபாய்
கனடா - CAD 111.75 - 6,931 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 117.90 - 6,785 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,282 ரூபாய்
குவைத் - KWD 26.45 - 7,248 ரூபாய்
மலேசியா - MYR 363 - 7,357 ரூபாய்
ஓமன் - OMR 34 - 7,390 ரூபாய்
கத்தார் - QAR 318.50 - 7,311 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 327 - 7,295 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 118 - 7,679 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 318.25 - 7,251 ரூபாய்
அமெரிக்கா - USD 84.50 - 7,071 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 318.25 - 7,251 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 318.25 - 7,251 ரூபாய்
துபாய் (UAE) - AED 318.25 - 7,251 ரூபாய்
புஜைரா (UAE) - AED 318.25 - 7,251 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 318.25 - 7,251 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 318.25 - 7,251 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 318.50 - 7,311 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34 - 7,390 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 327 - 7,295 ரூபாய்
இங்கிலாந்து - GBP 64.09 - 7,176 ரூபாய்
கனடா - CAD 118 - 7,319 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 128.70 - 7,407 ரூபாய்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!



Click it and Unblock the Notifications