அடம்பிடிக்கும் தங்கம் விலை.. இந்தியர்களுக்குத் தலைவலியாக மாறியது..!!

இந்தியாவில் தங்கம் வாங்கும் பெரும்பாலான மக்கள் நகைகளாக வாங்குபவர்கள், மிகவும் குறைந்த அளவிலான தங்கம் மட்டுமே முதலீட்டுக்காக வாங்கப்படுகிறது. இப்படியிருக்கையில் சர்வதேச பொருளாதாரம், பணவீக்கம் காரணமாகத் தங்கம் விலை குறையாமல் அடம்பிடிக்கிறது.

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஜனவரி 2024 இறுதியில் தனது முதல் வட்டி குறைப்பை அறிவிக்கும் எனக் கூறப்பட்டாலும் இதற்கான வாய்ப்பு 15 சதவீதம் மட்டுமே என்பது சந்தையின் கணிப்பு, இப்படியிருக்கையில் வட்டி விகிதம் குறைய அதிகப்படியான வாய்ப்பு மார்ச் 20, 2024 காலகட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடம்பிடிக்கும் தங்கம் விலை.. இந்தியர்களுக்குத் தலைவலியாக மாறியது..!!

இதேவேளையில் சீனாவில் கேமிங் நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு அந்நாட்டு அரசு வைத்த செக், பெரும் தொகையைத் தங்கத்தின் மீது திருப்பியுள்ளது. இதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து 2060 டாலருக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 3 டாலர் உயர்ந்து 2068.6 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.50 சதவீதம் உயர்ந்து 63,337.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 75,027 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் உயர்ந்து 59,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் உயர்ந்து 64,360 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 40 ரூபாய் அதிகரித்து 47,200 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் மட்டுமே குறைந்து 80,700 ரூபாயாக உள்ளது, இதோடு பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 26,360 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,000 ரூபாய், மும்பை - 58,500 ரூபாய், டெல்லி - 58,650 ரூபாய், கொல்கத்தா - 58,500 ரூபாய், பெங்களூர் - 58,500 ரூபாய், ஹைதராபாத் - 58,500 ரூபாய், கேரளா - 58,500 ரூபாய், புனே - 58,500 ரூபாய், பரோடா - 58,550 ரூபாய், அகமதாபாத் - 58,550 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,650 ரூபாய், லக்னோ - 58,650 ரூபாய், கோயம்புத்தூர் - 59,000 ரூபாய், மதுரை - 59,000 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 64,360 ரூபாய், மும்பை - 63,820 ரூபாய், டெல்லி - 63,960 ரூபாய், கொல்கத்தா - 63,820 ரூபாய், பெங்களூர் - 63,820 ரூபாய், ஹைதராபாத் - 63,820 ரூபாய், கேரளா - 63,820 ரூபாய், புனே - 63,820 ரூபாய், பரோடா - 63,860 ரூபாய், அகமதாபாத் - 63,860 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,960 ரூபாய், லக்னோ - 63,960 ரூபாய், கோயம்புத்தூர் - 64,360 ரூபாய், மதுரை - 64,360 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 47200 ரூபாய், மும்பை - 46800 ரூபாய், டெல்லி - 46920 ரூபாய், கொல்கத்தா - 46800 ரூபாய், பெங்களூர் - 46800 ரூபாய், ஹைதராபாத் - 46800 ரூபாய், கேரளா - 46800 ரூபாய், புனே - 46800 ரூபாய், பரோடா - 46840 ரூபாய், அகமதாபாத் - 46840 ரூபாய், ஜெய்ப்பூர் - 46920 ரூபாய்,லக்னோ - 46920 ரூபாய், கோயம்புத்தூர் - 47200 ரூபாய், மதுரை - 47200 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 26,360 ரூபாய், பெங்களூர் - 26,360 ரூபாய், புவனேஸ்வர் - 26,360 ரூபாய், சண்டிகர் - 26,360 ரூபாய், சென்னை - 26,360 ரூபாய், கோயம்புத்தூர் - 26,360 ரூபாய், டெல்லி - 26,360 ரூபாய், ஹைதராபாத் - 26,360 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,360 ரூபாய், கேரளா - 26,360 ரூபாய், கொல்கத்தா - 26,360 ரூபாய், லக்னோ - 26,360 ரூபாய், மதுரை - 26,360 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 80700 ரூபாய், மும்பை - 79200 ரூபாய், டெல்லி - 79200 ரூபாய், கொல்கத்தா - 79200 ரூபாய், பெங்களூர் - 77000 ரூபாய், ஹைதராபாத் - 80700 ரூபாய், கேரளா - 80700 ரூபாய், புனே - 79200 ரூபாய், பரோடா - 79200 ரூபாய், அகமதாபாத் - 79200 ரூபாய், ஜெய்ப்பூர் - 79200 ரூபாய், லக்னோ - 79200 ரூபாய், கோயம்புத்தூர் - 80700 ரூபாய், மதுரை - 80700 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+