தொடர் சரிவில் தங்கம் விலை! தங்கத்தில் குறையும் முதலீடுகள்! தள்ளுபடி கொடுக்கும் தங்க டீலர்கள்!

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. அக்டோபர் மாதத்தில் இருந்து நவராத்திரி, தசரா, நவம்பரில் தீபாவளி என எல்லா பண்டிகைகளும் வரிசையாக வரும்.

இனி மெல்ல, மக்கள் தங்கம் வாங்கத் தொடங்குவார்கள், அப்படியே, தங்க நகை வியாபாரமும் அதிகரிக்கத் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பில் தான் நகைக் கடைக்காரர்கள் இருக்கிறார்கள்.

நகைக் கடைக்காரர்கள் எதிர்பார்த்தது போல, தங்கத்துக்கான டிமாண்ட் கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. கடந்ந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் இந்த நேரத்தில் கூட, மக்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் தங்க டீலர்கள்.

இதை எல்லாம் பார்ப்போம் வாங்க

இதை எல்லாம் பார்ப்போம் வாங்க

தங்கம் விலை நிலவரம் என்ன? ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறார்கள்? தங்கத்தில் செய்யப்படும் முதலீடு எவ்வளவு குறைந்து இருக்கிறது? இன்று தங்கம் விலை தடுமாற்றத்தோடு வர்த்தகமாகக் காரணங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கு விரிவாக விடை காண்போம். முதலில் தங்கம் விலை நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

இன்றைய தங்கம் விலை - (சென்னை 24 கேரட் & 22 கேரட்)

இன்றைய தங்கம் விலை - (சென்னை 24 கேரட் & 22 கேரட்)

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 52,150 ரூபாய்க்கு நேற்று விற்பனை ஆனது. அதே போல 10 கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 47,810 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிட்டத்தட்ட ஆகஸ்ட் உச்ச விலையில் இருந்து 6,000 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டு இருக்கிறது சென்னை ஆபரணத் தங்கம் விலை.

MCX Gold price

MCX Gold price

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் விலையான 49,659 ரூபாயில் இருந்து 244 ரூபாய் (0.49 %) சரிந்து 49,415 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எம் சி எக்ஸ் தங்கமும் தன் ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து சுமாராக 6,500 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

MCX Silver Future price

MCX Silver Future price

டிசம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த 25 செப் 2020 அன்றைய குளோசிங் விலையான 59,027 ரூபாயில் இருந்து 1,148 ரூபாய் (1.94 %) விலை சரிந்து, 57,879 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. வெள்ளி விலை தன் ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து சுமாராக 20,000 ரூபாய்க்கு மேல் சரிந்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

XAU USD - இண்டர்நேஷனல் தங்கம் விலை

XAU USD - இண்டர்நேஷனல் தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் விலையான 1,861 டாலரில் இருந்து 3 டாலர் விலை (0.14 %) இறக்கம் கண்டு, 1,859 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து, சுமாராக 200 டாலர் விலை வீழ்ச்சி கண்டு இருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் ஏன் விலை இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது?

தங்கம் விலை தடுமாறக் காரணங்கள் என்ன?

தங்கம் விலை தடுமாறக் காரணங்கள் என்ன?

டாலர் பலமடைந்து 94.5 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தங்கத்தில் முதலீடுகள் குறையத் தொடங்கி இருக்கின்றன. காமெக்ஸ் சந்தையில் ஸ்பெகுலேட்டர்கள், தங்கள் புல்லிஷ் (Bullish) பொசிஷன்களை கணிசமாகக் குறைத்து இருக்கிறார்கள். இவை எல்லாமே தங்கத்தின் விலையை, ஏற்றம் காணவிடாமல் தடுக்க முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

தள்ளுபடி கொடுக்கும் தங்க டீலர்கள்

தள்ளுபடி கொடுக்கும் தங்க டீலர்கள்

இந்தியாவில் ரீடெயில் தங்கத்துக்கான டிமாண்ட் கொஞ்சம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால் இப்போதும் தங்க டீலர்கள், ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 5 டாலர் தள்ளுபடி கொடுப்பதாக லைவ் மிண்ட் பத்திரிகை சொல்கிறது. முந்தைய வாரத்தில் இதே ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 23 டாலர் வரை தள்ளுபடி கொடுத்தார்களாம்.

தங்கத்தில் முதலீடுகள் சரிவு

தங்கத்தில் முதலீடுகள் சரிவு

உலகின் மிகப் பெரிய தங்க ட்ரஸ்டான SPDR Gold Trust-ன் கையிருப்பு, கடந்த 21 செப்டம்பர் 2020 அன்று 1,278.82 டன்னாக இருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை, இந்த ட்ரஸ்டின் தங்க கையிருப்பு 1,266.84 டன்னாக சரிந்து இருக்கிறது. இது தங்கத்தில் முதலீடுகள் குறைவதை தெளிவாகக் காட்டுகிறது.

எதிர்காலத்தில் தங்கம் விலை

எதிர்காலத்தில் தங்கம் விலை

க்ரெடிட் சூசி (Credit Suisse), கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman sachs) போன்ற கம்பெனிகள், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,300 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறார்கள். பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America), ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,000 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. ஜிம் ராஜர்ஸ் கண்ணை மூடிக் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகச் சொல்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+