சிங்காரச் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 53,660 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,190 ருபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
இது நல்ல விலையா? ஆகஸ்ட் மாதத்தில் முதல் 3 வாரங்களின் உச்ச விலை உடன் ஒப்பிட்டால் இது எவ்வளவு குறைவு?
எம் சி எக்ஸில் தங்கம் விலை என்ன? சர்வதேச அளவில் தங்கம் விலை என்ன? வாருங்கள் எல்லாவற்றையும் பார்ப்போம்.
24 கேரட் தங்கம் விலை ஒப்பீடு
சென்னையில், கடந்த 7 ஆகஸ்ட் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று 53,660 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். ஆக 5,470 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. 24 கேரட் ஒரு பவுன் தங்கத்துக்கு 4,376 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
22 கேரட் ஆபரணத் தங்கம் விலை ஒப்பீடு
22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 07 ஆகஸ்ட் 2020 அன்று 54,200 ரூபாய்க்கு விற்றார்கள். நேற்று, அதே 22 கேரட் 10 கிராம் தங்கம் சென்னையில் 49,190 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக 5,010 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. 22 கேரட் ஒரு பவுன் தங்கம் விலை 4,008 ரூபாய் விலை வீழ்ந்து இருக்கிறது.
நல்ல வாய்ப்பா?
அடுத்த சில மாதங்களில் திருமணம் போன்ற நல்ல காரியங்களை வைத்திருப்பவர்கள், இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கலாம். இந்த 2020-ம் ஆண்டில், ஆபரணத் தங்கம் விலை பெரிய வீழ்ச்சிகளைக் காணவில்லை. ஆனால் இப்போது 10 கிராம் தங்கம் சுமாராக 5,000 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
எம் சி எக்ஸ் தங்கம் விலை
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான, எம்சிஎக்ஸ் சந்தையில், அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை இன்று 51,535 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 07 ஆகஸ்ட் 2020 உச்ச விலையான 56,191 ரூபாயை விட தற்போது 4,656 ரூபாய் விலை குறைவாகத் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
எம் சி எக்ஸ் வெள்ளி விலை
கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று, செப்டம்பர் மாதத்துக்கான 1 கிலோ எம் சி எக்ஸ் வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, 77,949 ரூபாய் என்கிற உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானது. இன்று 67,323 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இப்போதும் 10,626 ரூபாய் விலை குறைவாகத் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சர்வதேச தங்கம் விலை - ஒரு அவுன்ஸுக்கு எவ்வளவு?
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, இன்று 1,946 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 06 ஆகஸ்ட் 2020 அன்று அதிகபட்சமாக, சர்வதேச தங்கம் 2,075 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. இந்த உச்ச விலை உடன் ஒப்பிட்டால் இப்போதும் சர்வதேச தங்கம் 129 டாலர் விலை குறைவாகத் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பலவீனமடைந்த டாலர்
இன்று டாலர் இண்டெக்ஸ் 0.2 % பலவீனமடைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் காணாத சரிவைக் கண்டிருக்கிறது டாலர் இண்டெக்ஸ். அதோடு அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜேரோம் பவல், பணவீக்கம் மற்றும் பணக் கொள்கை குறித்து பேச இருப்பதையும் முதலீட்டாளர்கள் கேட்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இவை எல்லாம் எதிர்காலத்தில் தங்கம் விலை போக்கை தீர்மானிக்கும் காரணிகளாக அமையலாம்.
தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடுகள்
நேற்று ஒரே நாளில் உலகின் மிகப் பெரிய கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டான SPDR Gold Trust-ல் 0.3 % முதலீடுகள் அதிகரித்து இருக்கின்றனவாம். ஆக மீண்டும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
தங்கம் விலை ஏற்றத்துக்கான மற்ற காரணிகள்
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான சண்டைகள் தொடங்கி கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, இதுவரை தீர்மானமாக ஒரு மாற்று மருந்து கண்டு பிடிக்கப்படாதது போன்ற காரணிகள் எல்லாமே, தங்கத்தின் விலையை நேரடியாக பாதிக்கலாம். 2,300 டாலர் வரை தங்கம் தொடலாம் என கோல்ட்மேன் சாக்ஸ் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications