Gold: சீராக விலை ஏறும் தங்கம்! உச்சத்திலிருந்து பவுனுக்கு ரூ. 2,296 குறைவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் என்ன ஆனாலும் சரி, எத்தனை பேர் பிறந்தாலும், இறந்தாலும் தங்கத்தின் மீதான ஈர்ப்பு மட்டும் நிலையாக இருக்கிறது.

கடந்த சில நூற்றாண்டுக்கு முன்பில் இருந்தே தங்கத்தின் மீதான காதல் மனித இனத்துக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

சரி இப்போதைய விலை நிலவரத்துக்கு வருவோம். அதோடு தங்கத்தின் விலை ஏற்றம் எப்படி இருக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.

சர்வதேச ஸ்பாட் தங்கம்

சர்வதேச ஸ்பாட் தங்கம்

சர்வதேச அளவில் ஸ்பாட் தங்கத்தின் விலை, கடந்த மார்ச் 09, 2020 அன்று தான் உச்சத்தில் இருந்தது. அந்த தேதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,680 டாலருக்கு வர்த்தகமானது. அதன் பின் அதிகபட்ச சரிவாக கடந்த 19 மார்ச் 2020 அன்று 1,471 டாலரைத் தொட்டது. ஆனால் இன்று மீண்டும் 1,489 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

நல்ல சரிவு ஆனால் விலை ஏற்றம்

நல்ல சரிவு ஆனால் விலை ஏற்றம்

ஆக 1,680 டாலரில் இருந்து 1,471 டாலரைத் தொட்டது உண்மையாகவே ஒரு நல்ல விலை சரிவு தான். ஆனால் இன்று மீண்டும் சுமாராக 1,489 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே 1,680 - 1,489 = 191 டாலர் விலை குறைந்து வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எம் சி எக்ஸ் உச்சம்

எம் சி எக்ஸ் உச்சம்

இந்தியாவில் தங்கம் காண்டிராக்ட்களாக வர்த்தகமாகும் எம் சி எக்ஸ் சந்தையில் கடந்த மார்ச் 06, 2020 அன்று தான் 03 ஏப்ரல் 2020 மாதத்துக்கான காண்டிராக்ட் 44,961 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆக கிட்டத்தட்ட 45,000 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது 10 கிராம் தங்கம்.

எம் சி எக்ஸ் சரிவு & தற்போதைய விலை

எம் சி எக்ஸ் சரிவு & தற்போதைய விலை

அதன் பின், குறைந்தபட்சமாக, 03 ஏப்ரல் 2020 மாத காண்டிராக்ட் விலை மார்ச் 16, 2020 அன்று 38,400 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. தற்போது சுமாராக 39,935 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 44,961 - 39,935 = 5,026 ரூபாய் விலை சரிவில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சீரான விலை ஏற்றம்

சீரான விலை ஏற்றம்

ஆனால் தன் முந்தைய விலை சரிவான 38,400 ரூபாய் உடன் ஒப்பிட்டால் தற்போது தங்கம் 39,935 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக தங்கத்தில் மீண்டும் சீரான விலை ஏற்றம் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதும் இங்கு தெளிவாகத் தெரிகிறது.

ஆபரணத் தங்கம் விலை ஏற்ற காரணம்

ஆபரணத் தங்கம் விலை ஏற்ற காரணம்

ஏற்கனவே இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் மீது 12.5 சதவிகித இறக்குமதி வரி மற்றும் 3% ஜிஎஸ்டி வரி போன்றாவைகள் இருக்கின்றன. இது போக, இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே ஆபரணத் தங்கத்தின் விலை இயற்கையாகவே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

விலை நிலவரம்

விலை நிலவரம்

கடந்த மார்ச் 06, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,160 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். அதன் பின், மார்ச் 19, 2020 அன்று 41,920 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். இன்று 43,290 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

உச்ச விலை - தற்போதைய விலை

உச்ச விலை - தற்போதைய விலை

ஆக 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் உச்ச விலையான 46,160 - இன்றைய விலை 43,290 = 2,870 ரூபாய் இன்னும் விலை குறைவாகத் தான் தங்கம் விற்கப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் உச்ச விலையில் இருந்து, பவுனுக்கு 2,296 ரூபாய் விலை குறைவாகத் தான் விற்பனை ஆகிறது. இருப்பினும் 46,160-ல் இருந்து 41,920-க்கு வந்துவிட்டு, மீண்டும் தங்கம் 43,290-ஐத் தொட்டு இருப்பது, தங்கம் விலை ஏறி வருவதை தெளிவாகக் காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is steadily rising up Chennai gold price is down 2296 from its 46160

Gold in all three formats like international gold rice, Indian future gold contract and retail gold price is steadily rising up, but still the gold price did not breach the recent high price
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X