தடுமாறும் தங்கம் விலை! பெருமூச்சு விடும் சாமானியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னும் சில வாரங்களில் ஆடி மாதம் தொடங்கிவிடும். அதற்குள் திருமணம், போன்ற சுப காரியங்கள் எல்லாம் இப்போதே நடந்து கொண்டு இருக்கிறது.

நல்ல காரியங்கள் நடப்பது எல்லாம் இருக்கட்டும், அந்த வைபவங்களுக்கு தங்கம் வாங்குவது தான் தற்போது குதிரைக் கொம்பு பேரமாக இருக்கிறது.

10 பவுன் நகைக்கு பணம் எடுத்துக் கொண்டு போனால், விலை ஏற்றம், செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி... என எல்லாம் சேர்த்து 9 பவுன் நகை தான் கைக்கு வருகிறது. அந்த அளவுக்கு தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது.

2020-ல் மட்டும்

2020-ல் மட்டும்

இந்த 2020-ம் ஆண்டில் மட்டும் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,750 ரூபாய்க்கு விற்பனை ஆகத் தொடங்கியது. ஆனால் தற்போது 49,450 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்த ஆறு மாத காலத்திலேயே தங்கம் விலை சுமாராக 21 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

நேற்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 49,450 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 45,320 ரூபாய்க்கு வர்த்தகமானது. பவுனுக்கு 24 கேரட் தங்கம் 39,560 ரூபாய்க்கு வர்த்தகமானது. 22 கேரட் தங்கம் பவுனுக்கு 36,256 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இரக்கம் காட்டும் தங்கம்

இரக்கம் காட்டும் தங்கம்

கடந்த 27 மார்ச் 2020 அன்று 48,090 ரூபாய்க்கு விற்பனை ஆன 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை, தொடர்ந்து ஏற்றம் கண்டு, 14 ஜூன் 2020 அன்று 49,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று தான் 24 கேரட் 10 கிராம் தங்கத்துக்கு 210 ரூபாய் குறைந்து கொஞ்சம், சாமானிய மக்கள் மீது இரக்கம் காட்டி இருக்கிறது தங்கம். இன்னும் தங்கம் எவ்வளவு விலை அதிகரிக்கப் போகிறது. இந்த விலைக்கு எல்லாம் தங்கம் வாங்க முடியுமா என சாமானியர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச அளவில், அமெரிக்க டாலரில் வர்த்தகமாகும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை பெரிய மாற்றங்களைக் காணாமல் 1,733 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது ஆபரணத் தங்கம் வாங்கும் சாமானியர்களுக்கு இன்னும் ஆறுதலான விஷயம். இங்கு தங்கம் விலை அதிகரித்தால் தொடர் சங்கிலி போல ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும்.

தங்கம் விலை தடுமாற்றம்

தங்கம் விலை தடுமாற்றம்

கடந்த 10 ஜூன் 2020 அன்று 1,738 டாலரில் நிறைவடைந்தது. அதற்குப் பின், இன்று வரை 1,738 டாலரைத் தாண்ட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது தங்கம் விலை. தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், தற்போது அமெரிக்க டாலரில் முதலீடு செய்கிறார்களாம். தங்கம் விலை தடுமாற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.

எம் சி எக்ஸில் கலக்கும் தங்கம்

எம் சி எக்ஸில் கலக்கும் தங்கம்

எல்லா பக்கமும் தங்கம் கொஞ்சம் தேக்கம் கண்டாலும், இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை 47,129 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்போது தங்கம் விலை தேக்கம் கண்டு இருக்கிறதே, இனி தங்கம் விலை சரியுமா..?

தங்கம் விலை என்ன ஆகும்

தங்கம் விலை என்ன ஆகும்

அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆசிய பங்குச் சந்தைகள் எல்லாம் இன்று தூள் கிளப்பிக் கொண்டு இருக்கின்றன. எனவே தங்கம் விலை ஒரு சிறிய தேக்கம் கண்டு இருக்கிறது. கொரோனா வைரஸ், அமெரிக்க சீன பிரச்சனை எல்லாம் இன்னும் கிடப்பில் தான் இருக்கின்றன. தீர்வு காணப்படவில்லை. எப்போது முதலீட்டாளர்கள்,கொரோனாவையும், சர்வதேச அரசியலில் நிலையற்ற தன்மையையும் கண்டு கொள்கிறார்களோ, அப்போது மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is struggling to go up due to dollar

Gold price is struggling to go up due to investment are going to dollar. The Gold price may surge again once the coronavirus news and America china problem arises.
Story first published: Tuesday, June 16, 2020, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X