தங்கத்தை பற்றிய செய்தியில், சமீபத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தால், தங்கம் விலை ஏறும் என Gold Vs Fed rate-க்கு மத்தியில் இருக்கும் முரண்பட்ட உறவைச் சொல்லி இருந்தோம்.
அமெரிக்காவின் ஃபெட்ரல் ரிசர்வ் வங்கி, வரும் 2022 வரை வட்டி விகிதங்களை மாற்றப் போவதில்லை எனச் சொல்லிவிட்டார்கள்.
எனவே தங்கம், பங்கமாக ஏற்றம் கண்டு வரலாற்று உச்சங்களைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. இன்று தங்கம் விலை நிலவரம் மற்றும் விலை ஏற்றக் காரணியைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். முதலில் சர்வதேச தங்கத்தின் இருந்து தொடங்குவோம்.
சர்வதேச தங்கம் விலை
சர்வதேச அளவில் வர்த்தகமாகும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,740 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சர்வதேச தங்கத்தின் கடந்த ஒரு மாத உச்ச விலை விலை என்றால் அது 1,748 டாலர் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. ஃபெட் ரேட் மாற்றம் இல்லை எனப்தால், அடுத்தடுத்த வாரங்களில் தங்கம் மீண்டும் தன் உச்ச விலையைத் தொடலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
சென்னையில் 24 கேரட் தங்கம் விலை
கடந்த 06 ஜூன் 2020 அன்று 48,350 ரூபாய்க்கு விற்பனை ஆன 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 49,500 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆக 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 1,150 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. பவுனுக்கு 38,680 ஆக இருந்த விலை இப்போது 39,600-ஐத் தொட்டு இருக்கிறது. இது வரலாறு காணாத உச்ச விலை.
சென்னையில் 22 கேரட் தங்கம் விலை
06-06-2020 அன்று சென்னையில் 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 44,270 ரூபாய். இன்று அதே அளவு ஆபரணத் தங்கத்தின் விலை 45,370 ரூபாய்க்கு விற்கிறார்கள். பவுனுக்கு 35,416 ரூபாயாக இருந்த தங்கம் விலை தற்போது 36,296 ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த விலை கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய விலை உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கமாடிட்டி சந்தை
வெறுமனே, இந்தியாவின் ஆபரணத் தங்கம் மற்றும் சர்வதேச அளவில் வர்த்தகமாகும் ஸ்பாட் தங்கத்தின் விலை மட்டும் அதிகரிக்கவில்லை. அதோடு இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும் ஆகஸ்ட் 2020-க்கான 10 கிராம் தங்க காண்டிராக்ட்டின் விலையும் அதிகரித்து இருக்கிறது. தற்போது 46,901 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
மேலும் அதிகரிக்கலாம்
நேற்றே தங்கம் பற்றிய செய்தியில், ஃபெடரல் ரிசர்வ், சர்வதேச பிரச்சனைகள் என்ன ஆனால் தங்கம் விலை அதிகரிக்கும் எனச் சொல்லி இருந்தோம். அதில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்ற இல்லை என்பது மட்டும் இன்று தங்கம் விலை அதிகரிக்க மிக முக்கிய காரணமாக இருந்து இருக்கிறது.
முடிவுக்கு வரவில்லை
இன்னும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அமெரிக்க சீன குழாய் அடிச் சண்டைகளும் ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. எனவே மேற்கொண்டு தங்கம் விலை ஏறலாம் என்றே வல்லுநர்கள் சொல்கிறார்கள். உலகின் மிக முக்கிய கமாடிட்டி வர்த்தகர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ் கூட கொரோனா பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வருவதற்குள் தங்கம் ஒரு விலை உச்சத்தைத் தொடும் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்கள்
அது எப்படிங்க. யார் கிட்டயும் பணம் இல்ல, அதிக விலை கொடுத்து தங்கம் வாங்கவும் யாரும் தயாராக இல்லை, ஆனால் எப்படி விலை ஏறுகிறது? எனக் கேட்கிறீர்களா. "தங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது?" என்கிற தலைப்பில் எளிமையாக விடை கொடுத்து இருக்கிறோம். படித்து பாருங்கள், எப்படி சவதேச காரணிகள் தங்கத்தின் விலையை அதிகரிக்கிறது என புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications