அலற விடும் தங்கம் விலை! 51,000 ரூபாயைத் தாண்டி விலை உச்சம்! அடுத்து என்ன?

இந்தியாவில் ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து, இறப்பதற்குள் ஒரு முறையாவது தங்கத்தை வாங்கி இருப்பார். அந்த அளவுக்கு தங்கத்துக்கும் நமக்குமான செண்டிமெண்ட் மிகவும் வலுவானது.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த சில மாதங்களாக, கட்டுக்கடங்காமல் சீறிப் பாய்ந்து கொண்டு இருக்கிறது. எந்த அளவுக்கு சீறிப் பாய்ந்து இருக்கிறது. இனி அடுத்து என்ன ஆகப் போகிறது? என்பதை எல்லாம் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

சரி, முதலில் சர்வதேச தங்கம் விலையில் இருந்து தொடங்குவோம். அங்கு தான் கொஞ்சம் விலை குறைந்து இருக்கிறதாம்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் 1,800 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் எல்லாம் 1,818 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமான தங்கம் விலை, தற்போது கொஞ்சம் ஓய்வு கொடுத்து 1,800 டாலர் வரை இறங்கி வந்து இருக்கிறது. கடந்த 3 வாரங்களாக, சர்வதேச தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த திடீர் இறக்கம்

ஏன் இந்த திடீர் இறக்கம்

தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், வந்த லாபத்தை எத்தனை நாட்களுக்குத் தான் எடுக்காமல் இருப்பார்கள். அதுவும் 1,800 டாலருக்கு மேல் தங்கம் போகிறது என்றால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறு பக்கம் எப்போது 1,800 டாலரில் இருந்து விலை வீழ்ச்சி காணுமோ என்கிற பயமும் இருக்கத் தானே செய்யும். அதான் முதலீட்டாளர்கள் வந்த லாபத்தை வெளியே எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். விலையும் கொஞ்சம் இறக்கம் கண்டு இருக்கிறது.

எம் சி எக்ஸ் தங்கம் விலை

எம் சி எக்ஸ் தங்கம் விலை

இந்தியாவின் கமாடிட்டி சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்ட்டின் விலை 48,950 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 08 ஜூலை 2020 அன்று 49,348 ரூபாயைத் தொட்டது. ஆனால் இன்று கொஞ்சம் விலை சரிந்து இருக்கிறது. சூப்பர், சர்வதேச தங்கம் விலையும் சரிந்து இருக்கிறது. எம் சி எக்ஸ் தங்கம் விலையும் சரிந்து இருக்கிறது. அபப்டி என்றால் ஆபரணத் தங்கம் விலையும் சரிந்து இருக்குமே? என்று கேட்டால் பதில் நோ தான்.

டாலர் பிரச்சனை

டாலர் பிரச்சனை

சர்வதேச தங்கம் விலை சரிந்தாலும், அதை இந்தியாவில் கொண்டு வரும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பதை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, மீண்டும் டாப் கியரில் 75.29 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சென்னையில் 24 கேரட் தங்கம் விலை

சென்னையில் 24 கேரட் தங்கம் விலை

ஒட்டு மொத்த தமிழக மக்கள் தொகையில், சுமாராக ஆறில் ஒரு பங்கு மக்களை தன்னகத்தே கொண்டு இருக்கும் சிங்காரச் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக, நேற்று 51,460 ரூபாய்க்கு விற்பனைச் செய்து இருக்கிறார்கள். கிராமுக்கு 5,146 ரூபாய் மேனிக்கு பவுனுக்கு 41,168 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.

சென்னையில் 22 கேரட் தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் தங்கம் விலை

அதே சென்னை மாநகரத்தில், 22 கேரட் 10 கிராம் தங்கம் விலையும் வரலாறு காணாத அளவுக்கு நேற்று 47,180 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். கிராமுக்கு 4,718 ரூபாய் மேனிக்கு 37,744 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். சரி அடுத்து தங்கம் விலை என்ன ஆகும் எனக் கேட்டால் ஒரு அதிர்ச்சி தகவலைச் சொல்லி இருக்கிறார் ஒரு அனலிஸ்ட்.

விலை 68,000 வரை தொடலாம்

விலை 68,000 வரை தொடலாம்

உலக பொருளாதாரமே மந்த நிலையில் இருப்பது, வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால், பல நாட்டு கரன்ஸிகளின் மதிப்பு குறையலாம். எனவே, இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை டிசம்பர் 2021-க்குள் 65,000 - 68,000 ரூபாய் வரை தொடலாம் எனச் சொல்லி இருக்கிறார் மோதிலால் ஓஸ்வால் கமாடிட்டி நிறுவனத்தின் அசோசியேட் இயக்குநர் கிஷோர்.

தங்கம் விலை ஏற்றக் கணிப்பு

தங்கம் விலை ஏற்றக் கணிப்பு

கோல்ட் மேன் சாக்ஸ் அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை 2,000 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருப்பது, ஜே பி மார்கன் கூட சர்வதேச தங்கம் விலை அதிகரிக்கும் எனச் சொல்லி இருந்தார்கள். இப்போது இந்தியாவில் கூட 10 கிராம் தங்கத்தின் விலை 68,000 ரூபாய் வரைத் தொட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் தங்கம் விலை எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+