இந்தியாவில் ஜூன் 28 ஆம் தேதியில் இருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிராம் தங்கம் விலை 135 ரூபாய் அதிகரித்துள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 147 ரூபாய் அதிகரித்துத் தங்கத்தைப் பிள்ளைகள் திருமணத்திற்காகவும், படிப்புக்காகவும் சேமிக்கும் மிடில் கிளாஸ் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து குறைவதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள மந்தநிலை தான்.இதைச் சமாளிக்க அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டியை செப்டம்பர் மாதம் குறைக்க உள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இதற்கு ஏற்றார் போல் நவம்பர் மாதம் அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது, இந்த தேர்தலில் ஜோ பைடனுக்கான வெற்றி வாய்ப்பு சமீபத்திய அதிபர் வேட்பாளர்கள் மத்தியில் நடந்த நேருக்கு நேர் விவாதத்திற்குப் பின்பு குறைந்துள்ளதாகக் கருத்து நிலவுகிறது. இதேபோல் டொனால்ட் டிரம்ப் ஆட்சியை பிடித்தால் கட்டாயம் வரிகள் உயர்த்தப்பட்டு பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும் என்ற கருத்து நிலவுகிறது.
இதனால் அமெரிக்க தேர்தலுக்கு முன்பு ஒரு முறை வட்டி விகிதத்தை குறைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதேபோல் பிரிட்டன் நாட்டிலும் பொது தேர்தல் நடக்க உள்ளது, பிரான்ஸ் நாட்டிலும் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதற்கு மத்தியில் கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால் இந்தியாவில் தங்கத்திற்கான தேவையை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே இந்தியாவில் விற்கப்படும் தங்கத்தின் மீதான விலையில் வெளிநாட்டு சந்தையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2362 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டாலும், இன்றைய வர்த்தகத்தில் 2355 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த விலை சரிவின் தாக்கம் நாளை ரீடைல் சந்தையில் எதிரொலிக்கும்.
எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று 10 கிராம 24 கேரட் தங்கம் விலை 0.03 சதவீதம் சரிந்து 72,379 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் செப்டம்பர் மாத பியூச்சர்ஸ் மதிப்பு 0.17 சதவீதம் சரிந்து 91,861 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 67,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 710 ரூபாய் உயர்ந்து 73,750 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்து 54,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1500 ரூபாய் உயர்ந்து 97500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 220 ரூபாய் உயர்ந்கு 26,930 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,760 ரூபாய், மும்பை - 6,700 ரூபாய், டெல்லி - 6,715 ரூபாய், கொல்கத்தா - 6,700 ரூபாய், பெங்களூர் - 6,700 ரூபாய், ஹைதராபாத் - 6,700 ரூபாய், கேரளா - 6,700 ரூபாய், புனே - 6,700 ரூபாய், பரோடா - 6,705 ரூபாய், அகமதாபாத் - 6,705 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,715 ரூபாய், லக்னோ - 6,715 ரூபாய், கோயம்புத்தூர் - 6,760 ரூபாய், மதுரை - 6,760 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,375 ரூபாய், மும்பை - 7,309 ரூபாய், டெல்லி - 7,324 ரூபாய், கொல்கத்தா - 7,309 ரூபாய், பெங்களூர் - 7,309 ரூபாய், ஹைதராபாத் - 7,309 ரூபாய், கேரளா - 7,309 ரூபாய், புனே - 7,309 ரூபாய், பரோடா - 7,314 ரூபாய், அகமதாபாத் - 7,314 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,324 ரூபாய், லக்னோ - 7,324 ரூபாய், கோயம்புத்தூர் - 7,375 ரூபாய், மதுரை - 7,375 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54080 ரூபாய், மும்பை - 53600 ரூபாய், டெல்லி - 53720 ரூபாய், கொல்கத்தா - 53600 ரூபாய், பெங்களூர் - 53600 ரூபாய், ஹைதராபாத் - 53600 ரூபாய், கேரளா - 53600 ரூபாய், புனே - 53600 ரூபாய், பரோடா - 53640 ரூபாய், அகமதாபாத் - 53640 ரூபாய், ஜெய்ப்பூர் - 53720 ரூபாய், லக்னோ - 53720 ரூபாய், கோயம்புத்தூர் - 54080 ரூபாய், மதுரை - 54080 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,930 ரூபாய், மும்பை - 26,930 ரூபாய், டெல்லி - 26,930 ரூபாய், கொல்கத்தா - 26,930 ரூபாய், பெங்களூர் - 26,930 ரூபாய், ஹைதராபாத் - 26,930 ரூபாய், கேரளா - 26,930 ரூபாய், அகமதாபாத் - 26,930 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,930 ரூபாய், லக்னோ - 26,930 ரூபாய், கோயம்புத்தூர் - 26,930 ரூபாய், மதுரை - 26,930 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 97500 ரூபாய், மும்பை - 93000 ரூபாய், டெல்லி - 93000 ரூபாய், கொல்கத்தா - 93000 ரூபாய், பெங்களூர் - 90600 ரூபாய், ஹைதராபாத் - 97500 ரூபாய், கேரளா - 97500 ரூபாய், புனே - 93000 ரூபாய், பரோடா - 93000 ரூபாய், அகமதாபாத் - 93000 ரூபாய், ஜெய்ப்பூர் - 93000 ரூபாய், லக்னோ - 93000 ரூபாய், கோயம்புத்தூர் - 97500 ரூபாய், மதுரை - 97500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29.10 - 6,446 ரூபாய்
குவைத் - KWD 21.49 - 5,859 ரூபாய்
மலேசியா - MYR 348 - 6,171 ரூபாய்
ஓமன் - OMR 28.15 - 6,105 ரூபாய்
கத்தார் - QAR 269 - 6,161 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 271 - 6,032 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 99.60 - 6,152 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 264.25 - 6,008 ரூபாய்
அமெரிக்கா - USD 72 - 6,012 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 264.25 - 6,008 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 264.25 - 6,008 ரூபாய்
துபாய் (UAE) - AED 264.25 - 6,008 ரூபாய்
புஜைரா (UAE) - AED 264.25 - 6,008 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 264.25 - 6,008 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 264.25 - 6,008 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 269 - 6,161 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 28.15 - 6,105 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 271 - 6,032 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.10 - 6,446 ரூபாய்
குவைத் - KWD 23.53 - 6,415 ரூபாய்
மலேசியா - MYR 364 - 6,454 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,506 ரூபாய்
கத்தார் - QAR 286.50 - 6,561 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 292 - 6,500 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 109.50 - 6,763 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 285.50 - 6,491 ரூபாய்
அமெரிக்கா - USD 76.50 - 6,388 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 285.50 - 6,491 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 285.50 - 6,491 ரூபாய்
துபாய் (UAE) - AED 285.50 - 6,491 ரூபாய்
புஜைரா (UAE) - AED 285.50 - 6,491 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 285.50 - 6,491 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 285.50 - 6,491 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 286.50 - 6,561 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,506 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 292 - 6,500 ரூபாய்
இந்த நிலையில் தங்கம் விலை அமெரிக்க தேர்தலுக்கு பின்பு குறைய வாய்ப்புகள் உள்ளதாக கணிப்புகள் கூறப்பட்டாலும், இது உறுதியானது இல்லை.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications