எகிறும் தங்கம்.. குமுறும் மக்கள்.. இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன தெரியுமா..?

எளியவர்களின் முதலீட்டு கருவியாக இருக்கும் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாகத் தடாலடியாக உயர்ந்து வருகிறது, இதனால் இந்த திருமண சீசனில் மணமுடிக்கும் வீட்டார் தங்கம் வாங்குவதைக் கண்டு அஞ்சி வருகின்றனர். சந்தை நிபுணர்களின் கணிப்பின்படி இனி ஒரு சவரன் தங்கம் விலை 53000 ரூபாய்க்குக் குறையவே குறையாது என அடித்துச் சொல்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகப் பீதி ஏற்படத் துவங்கியுள்ளது.

கடந்த 50 நாட்களில் சுமார் 30 நாட்கள் தங்கம் விலை மந்தநிலையில் வர்த்தகமான போது அதிகப்படியான மக்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு தங்கம் வாங்கினர். ஆனால் அதிகப்படியான மக்கள் சர்வதேசச் சந்தையின் போக்கைக் கவனிக்காமல் தங்கம் விலை இன்னும் குறையுமெனக் கணக்கிட்டு வாய்ப்பை மிஸ் செய்தனர். இந்த நிலையில் தான் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வாரத்தின் முதல் நாளான இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2578 டாலரில் இருந்து 2585 டாலர் வரையில் தடாலடியாக அதிகரித்துள்ளது. இதையே கடந்த 7 நாட்களில் கணக்கிட்டால் 2488 டாலரில் இருந்து 100 டாலர் அதிகரித்து 2585 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதை ரூபாய் மதிப்பீட்டில் பார்க்கும் போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை வெறும் 7 நாளில் 2,08,986 ரூபாயில் இருந்து 2,17,021 ரூபாயாக உயர்ந்துள்ளது, இந்த விலை நிலை டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றத்தையும் சேர்த்துக் கணக்கிடப்பட்டு உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் உயர்ந்து 68,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து 75,050 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் உயர்ந்து 55,040 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை 55000 ரூபாய் என்ற முக்கிய விலை நிலையை அடைந்துள்ளது.

வெள்ளி விலை ஒரு கிலோ 1000 ரூபாய் உயர்ந்து 98000 ரூபாயாக உயர்ந்து மீண்டும் 1 லட்சம் ரூபாய் அளவீட்டை நோக்கிய படையெடுக்கத் துவங்கியுள்ளது. இறுதியாகப் பிளாட்டினம் விலை 10 கிராம் 90 ரூபாய் உயர்ந்து 26,890 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,880 ரூபாய், மும்பை - 6,880 ரூபாய், டெல்லி - 6,895 ரூபாய், கொல்கத்தா - 6,880 ரூபாய், பெங்களூர் - 6,880 ரூபாய், ஹைதராபாத் - 6,880 ரூபாய், கேரளா - 6,880 ரூபாய், புனே - 6,880 ரூபாய், பரோடா - 6,885 ரூபாய், அகமதாபாத் - 6,885 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,895 ரூபாய், லக்னோ - 6,895 ரூபாய், கோயம்புத்தூர் - 6,880 ரூபாய், மதுரை - 6,880 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,505 ரூபாய், மும்பை - 7,505 ரூபாய், டெல்லி - 7,515 ரூபாய், கொல்கத்தா - 7,505 ரூபாய், பெங்களூர் - 7,505 ரூபாய், ஹைதராபாத் - 7,505 ரூபாய், கேரளா - 7,505 ரூபாய், புனே - 7,505 ரூபாய், பரோடா - 7,505 ரூபாய், அகமதாபாத் - 7,505 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,515 ரூபாய், லக்னோ - 7,515 ரூபாய், கோயம்புத்தூர் - 7,505 ரூபாய், மதுரை - 7,505 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,635 ரூபாய், மும்பை - 5,629 ரூபாய், டெல்லி - 5,642 ரூபாய், கொல்கத்தா - 5,629 ரூபாய், பெங்களூர் - 5,629 ரூபாய், ஹைதராபாத் - 5,629 ரூபாய், கேரளா - 5,629 ரூபாய், புனே - 5,629 ரூபாய், பரோடா - 5,633 ரூபாய், அகமதாபாத் - 5,633 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,642 ரூபாய், லக்னோ - 5,642 ரூபாய், கோயம்புத்தூர் - 5,635 ரூபாய், மதுரை - 5,635 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55040 ரூபாய், மும்பை - 55040 ரூபாய், டெல்லி - 55160 ரூபாய், கொல்கத்தா - 55040 ரூபாய், பெங்களூர் - 55040 ரூபாய், ஹைதராபாத் - 55040 ரூபாய், கேரளா - 55040 ரூபாய், புனே - 55040 ரூபாய், பரோடா - 55080 ரூபாய், அகமதாபாத் - 55080 ரூபாய், ஜெய்ப்பூர் - 55160 ரூபாய், லக்னோ - 55160 ரூபாய், கோயம்புத்தூர் - 55040 ரூபாய், மதுரை - 55040 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,890 ரூபாய், மும்பை - 26,890 ரூபாய், டெல்லி - 26,890 ரூபாய், கொல்கத்தா - 26,890 ரூபாய், பெங்களூர் - 26,890 ரூபாய், ஹைதராபாத் - 26,890 ரூபாய், கேரளா - 26,890 ரூபாய், புனே - 26,890 ரூபாய், வதோதரா - 26,890 ரூபாய், அகமதாபாத் - 26,890 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 98,000 ரூபாய், மும்பை - 93,000 ரூபாய், டெல்லி - 93,000 ரூபாய், கொல்கத்தா - 93,000 ரூபாய், பெங்களூர் - 86,000 ரூபாய், ஹைதராபாத் - 98,000 ரூபாய், கேரளா - 98,000 ரூபாய், புனே - 93,000 ரூபாய், பரோடா - 93,000 ரூபாய், அகமதாபாத் - 93,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 93,000 ரூபாய், லக்னோ - 93,000 ரூபாய், கோயம்புத்தூர் - 98,000 ரூபாய், மதுரை - 98,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 29.90 - 6,654 ரூபாய்
குவைத் - KWD 23.39 - 6,430 ரூபாய்
மலேசியா - MYR 350 - 6,819 ரூபாய்
ஓமன் - OMR 30.80 - 6,712 ரூபாய்
கத்தார் - QAR 293 - 6,743 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 294 - 6,574 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 104.60 - 6,757 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 289 - 6,603 ரூபாய்
அமெரிக்கா - USD 78.50 - 6,587 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 289 - 6,603 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 289 - 6,603 ரூபாய்
துபாய் (UAE) - AED 289 - 6,603 ரூபாய்
புஜைரா (UAE) - AED 289 - 6,603 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 289 - 6,603 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 289 - 6,603 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 293 - 6,743 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.80 - 6,712 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 294 - 6,574 ரூபாய்
இங்கிலாந்து - GBP 58.01 - 6,394 ரூபாய்
கனடா - CAD 109 - 6,733 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 119.60 - 6,735 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 31.80 - 7,077 ரூபாய்
குவைத் - KWD 25.51 - 7,013 ரூபாய்
மலேசியா - MYR 365 - 7,111 ரூபாய்
ஓமன் - OMR 32.75 - 7,137 ரூபாய்
கத்தார் - QAR 313 - 7,203 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 318 - 7,111 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 115.20 - 7,442 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 312.25 - 7,134 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 6,964 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 312.25 - 7,134 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 312.25 - 7,134 ரூபாய்
துபாய் (UAE) - AED 312.25 - 7,134 ரூபாய்
புஜைரா (UAE) - AED 312.25 - 7,134 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 312.25 - 7,134 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 312.25 - 7,134 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 313 - 7,203 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.75 - 7,137 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 318 - 7,111 ரூபாய்
இங்கிலாந்து - GBP 63.28 - 6,975 ரூபாய்
கனடா - CAD 115 - 7,104 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 130.50 - 7,348 ரூபாய்

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் விடுமுறை காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் குறைந்துள்ள நிலையிலும் தங்கம் விலை இன்று அதன் வரலாற்று உச்ச அளவில் தொடர்ந்து வலிமையாக உள்ளது. தங்க விலை தற்போது 2,580 டாலர் அளவில் நிலையாக உள்ளது. இதுவரை சாதனை உயர்வை எட்டிய தங்க விலை, இந்த வாரம் நடைபெற உள்ள முக்கிய மத்திய வங்கிகளின் கூட்டங்களின் முடிவுகளை எதிர்பார்த்து வர்த்தகர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவு பெரும் தாக்கத்தைத் தங்கம் விலையில் ஏற்படுத்தும்.

அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வருவதால், அமெரிக்காவின் மத்திய வங்கியான Federal Reserve (Fed) வட்டி விகிதத்தை அதிகளவில் குறைக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாளை துவங்கும் நாணய கொள்கை கூட்டத்தில் குறைந்தது 0.50 சதவீதம் வரையில் வட்டி விகிதம் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களின் மீதான முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் குறைந்துள்ளன. இது அமெரிக்க டாலருக்கு (USD) பலவீனத்தை ஏற்படுத்தி, தங்க விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. டாலர் மதிப்பு குறைந்தாலும், பத்திர சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள் பெரும் பகுதி தங்கம் மீது குவியும் காரணத்தால் தங்கம் விலை உயரும்.

அமெரிக்க மத்திய வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் புதன்கிழமை வெளியாகும். இதை தொடர்ந்து வியாழக்கிழமை பேங்க் ஆஃப் இங்கிலாந்து, வெள்ளிக்கிழமை பேங்க் ஆப் ஜப்பான் ஆகிய நாடுகளின் மத்திய வங்கியும் தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ளது. இதனால் தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் பரபரப்பாகவே இருக்கும்.

எகிறும் தங்கம்.. குமுறும் மக்கள்.. இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன தெரியுமா..?

அமெரிக்காவில் நவம்பர் தேர்தலுக்கு முன் அரசியல் குழப்பம், டிரம்ப் மீது 2வது முறை தாக்குதல் முயற்சி மற்றும் தொடர்ச்சியான புவிசார் அரசியல் அச்சுறுத்தல்கள் தங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டு ஆர்வத்தை அதிகரித்துள்ளன. இருப்பினும், சந்தையின் நேர்மறையான மனநிலை, தங்க விலைக்கு மேலும் உயரும் வாய்ப்பை குறைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+