தங்கம் விலை ஒரே நாளில் 2700 ரூபாய் உயர்வு.. அடுத்த என்ன நடக்கும்..? இப்பவே வாங்குவது நல்லதா..?

தங்கம் என்பது பங்குச்சந்தை, மியூச்சவல் பண்ட், ஈடிஎப், எஸ்ஐபி போன்று இல்லை, சாமானிய மக்களின் எளிய முதலீட்டு வடிவமாகவே உள்ளது. தங்கம் நகை வாங்கும் 100-க்கு 98 பேர் இதை ஒரு முதலீடாகவோ அல்லது அவசரக் காலத்தில் நிதி திரட்டும் கருவியாகவோ தான் பார்க்கின்றனர். இப்படியிருக்கையில் தங்கம் விலையில் தற்போது ஏற்படும் உயர்வு மக்களைத் தினம் தினம் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சர்வதேச வர்த்தக போர் அச்சம் காரணமாகக் கடந்த 4 வர்த்தக நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, நேற்றும் இன்றும் தடாலடியாக உயர்ந்துள்ளது. இதனால் 4 நாளில் பதிவான சரிவு மொத்தமும் திரும்ப உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தங்கம் வாங்குவதா..? வேண்டாமா..? என்பது தான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இதற்கான விடையைத் தேடி ஒரு பயணம் வாங்க.

தங்கம் விலை ஒரே நாளில் 2700 ரூபாய் உயர்வு.. அடுத்த என்ன நடக்கும்..? இப்பவே வாங்குவது நல்லதா..?

பொதுவாகப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் போது தங்கம் விலை உயரும், ஆனால் தற்போது தங்கத்தின் போக்கு தலைகீழாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்த ரெசிஷன் மோசமாக இருக்கும் காரணத்தால் பங்குச்சந்தை, கிரிப்டோகரன்சி, பத்திர முதலீடு என அனைத்தும் நஷ்டத்தை அளிக்கத் துவங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சரிவைச் சமாளிக்க முதலீட்டாளர்கள் லாப கணக்கைக் காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கும் காரணத்தால் அதை விற்று லாபத்தைப் பார்க்கத் துவங்கினர். இதனால் தங்கம் விலை 4 நாட்களாகக் குறைந்து வந்தது. ஆனால் நேற்று முதல் தங்கம் விலை உயரத் துவங்கியுள்ளது, இதற்கான காரணம் தெரிந்தால் தான் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது முடிவு செய்ய முடியும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகள் உலக நாடுகளில் பணவீக்கத்தைத் தூண்டி, பொருளாதார வளர்ச்சியை அடித்து நொறுக்கும் அளவுக்குத் தள்ளியுள்ளது. இதனால் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. ஆனால் டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சீனா-வுக்கு அறிவிக்கப்பட்ட 104 சதவீத வரியை 125 சதவீதமாக உயர்த்துவதாகவும், இதேவேளையில் பிற நாடுகளுக்கு அறிவிக்கப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

இதனால் தற்போது வர்த்தக பதற்றம் என்றது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சனையாக மாறியுள்ளது, சர்வதேச அளவிலான தாக்கம் தற்காலிகமாகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகத் தங்கத்தின் விலை நேற்று அமெரிக்க வர்த்தக நேரத்தில் ஒரு அவுன்ஸ்-க்கு 3050 டாலரில் இருந்து 3100 டாலர் வரையில் உயர்ந்தது. இன்று ஆசியச் சந்தை வர்த்தகத்தில் அதிரடியாக உயர்ந்து 3130 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம், ஆசியச் சந்தை முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டைத் தேடுவது தான்.

TD Securities நிறுவனத்தின் பொருட்கள் மூலோபாயத் தலைவர் பார்ட் மெலெக் இதுகுறித்து கூறுகையில், "தற்போது, அமெரிக்காவின் வரிவிதிப்புகள் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள ஒரு சூழ்நிலை நிலவும் வேளையில் தங்கம் மிகவும் முக்கியமான முதலீடாக உருவெடுத்துள்ளது. மேலும், பணவீக்க உயரும் அச்சம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது." என்றார்.

இருப்பினும், தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு தற்காலிக தடை ஏற்பட வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை வெளியாகவுள்ள அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்க அறிக்கை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அறிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பணவீக்கம் இருப்பதாகக் காட்டினால், அமெரிக்க டாலரின் மதிப்பு உயரக்கூடும்.

டாலரின் மதிப்பு உயர்ந்தால், டாலரில் விலையில் நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த CPI அறிக்கை தங்கத்தின் விலை நகர்வில் ஒரு முக்கிய காரணியாக தற்போது உள்ளது. இதேபோல் டாலர் மதிப்பு உயர்ந்தால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் டாலர் மதிப்பிலான தங்கத்தின் விலை உயரும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலையும் குறைந்தது, டாலர் மதிப்பு குறைந்தது இதனாலேயே 4 நாட்களில் கிராமுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்தது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்ச்சியான வர்த்தகப் போர் உலகளாவிய பொருளாதாரத்தில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும், இதேபோல் அமெரிக்காவில் பணவீக்க பாதிப்பை அதிகரிக்கும். இதனால் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாமல் போகலாம்.

ஆக, தற்போது நிலவும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரின் தீவிரத்தன்மை ஆகியவற்றின் காரணமாகத் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் Buy on dip கொள்கை அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம், ஆனால் தங்கம் விலை பெரிய அளவில் குறையும் என்ற கணிப்பும் உள்ளது. எனவே தங்கத்தில் முதலீடு செய்வோருக்கு லாபத்தில் பெரும் தடுமாற்றம் இருக்கும், இதேபோல் புதிய முதலீடுகளையும் நீண்ட கால அடிப்படையில் தான் கிடைக்கும்.

எனவே முதலீடு செய்யும் முன் தீவிரமாக ஆலோசனை செய்து முதலீடு செய்யுங்கள், இல்லையெனில் உங்களின் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை செய்து முதலீடு செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+