இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாகக் குறைந்து வந்த நிலையில், அமெரிக்க வட்டி விகித குறைப்பின் உண்மையான தாக்கம் இன்று முதல் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கப்பட்ட பின்பு தங்கம் விலை உயரும் என கணிக்கப்பட்டது போல் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தாலும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் டாலர் மதிப்பு குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் முக்கிய வர்த்தக நாணயங்கள் கொண்ட பேஸ்கட்டில் டாலரின் மதிப்பு 106 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தில் இருந்து படிப்படியாக 100 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது. இதேவேளையில் அமெரிக்காவில் ரெசிஷன் அச்சமும் அதிகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் எதிர்பார்த்த தாக்கம் இல்லை.

இதனால் டாலருக்கான டிமாண்ட் குறைந்து தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் தடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் மற்றும் விரைவில் திருமண சீசன் துவங்க இருக்கும் காரணத்தால் தங்க நகைகளுக்கான டிமாண்ட் அதிகரிக்கும், இத்தகைய சூழ்நிலையில் டாலர் விலை சரிவால் தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் தடுக்கப்பட்டு உள்ளது ஜாக்பாட் தான்.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை மீண்டும் 2600 டாலரை நெருங்கியுள்ளது, ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை வர்த்தகத்தின் போது தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காமெக்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 16 டாலர் உயர்ந்து 2630 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
இதை தொடர்ந்து இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 68,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 660 ரூபாய் உயர்ந்து 75,110 ரூபாயாக உயர்ந்துள்ளது.
3 நாள் தொடர் சரிவுக்கு பின்பு தங்கம் விலை உயர்ந்துள்ளது என்று பார்ப்பதைக் காட்டிலும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பிற்குப் பின்பு தங்கம் விலை உயர்ந்துள்ளது தான் முக்கியமான விஷயம். இதோடு அடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் 0.50 சதவீத அளவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வு பாதையில் தான் இருக்கப்போகிறது என சந்தையின் தற்போதைய கணிப்புகள் கூறுகிறது.
இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் ஆபரணத் தங்கம் அதாவது 8 கிராம் ஒரு சவரன் தங்கம் விலை 480 ரூபாய் உயர்ந்து 55000 ரூபாய் அளவீட்டைத் தாண்டி 55,080 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 1.50 ரூபாயும், கிலோவுக்கு 1500 ரூபாயும் உயர்ந்து 97,500 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 290 ரூபாய் உயர்ந்து 26,460 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,885 ரூபாய், மும்பை - 6,885 ரூபாய், டெல்லி - 6,900 ரூபாய், கொல்கத்தா - 6,885 ரூபாய், பெங்களூர் - 6,885 ரூபாய், ஹைதராபாத் - 6,885 ரூபாய், கேரளா - 6,885 ரூபாய், புனே - 6,885 ரூபாய், பரோடா - 6,890 ரூபாய், அகமதாபாத் - 6,890 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,900 ரூபாய், லக்னோ - 6,900 ரூபாய், கோயம்புத்தூர் - 6,885 ரூபாய், மதுரை - 6,885 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,511 ரூபாய், மும்பை - 7,511 ரூபாய், டெல்லி - 7,526 ரூபாய், கொல்கத்தா - 7,511 ரூபாய், பெங்களூர் - 7,511 ரூபாய், ஹைதராபாத் - 7,511 ரூபாய், கேரளா - 7,511 ரூபாய், புனே - 7,511 ரூபாய், பரோடா - 7,516 ரூபாய், அகமதாபாத் - 7,516 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,526 ரூபாய், லக்னோ - 7,526 ரூபாய், கோயம்புத்தூர் - 7,511 ரூபாய், மதுரை - 7,511 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,640 ரூபாய், மும்பை - 5,633 ரூபாய், டெல்லி - 5,646 ரூபாய், கொல்கத்தா - 5,633 ரூபாய், பெங்களூர் - 5,633 ரூபாய், ஹைதராபாத் - 5,633 ரூபாய், கேரளா - 5,633 ரூபாய், புனே - 5,633 ரூபாய், பரோடா - 5,637 ரூபாய், அகமதாபாத் - 5,637 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,646 ரூபாய், லக்னோ - 5,646 ரூபாய், கோயம்புத்தூர் - 5,640 ரூபாய், மதுரை - 5,640 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55080 ரூபாய், மும்பை - 55080 ரூபாய், டெல்லி - 55200 ரூபாய், கொல்கத்தா - 55080 ரூபாய், பெங்களூர் - 55080 ரூபாய், ஹைதராபாத் - 55080 ரூபாய், கேரளா - 55080 ரூபாய், புனே - 55080 ரூபாய், பரோடா - 55120 ரூபாய், அகமதாபாத் - 55120 ரூபாய், ஜெய்ப்பூர் - 55200 ரூபாய், லக்னோ - 55200 ரூபாய், கோயம்புத்தூர் - 55080 ரூபாய், மதுரை - 55080 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,460 ரூபாய், மும்பை - 26,460 ரூபாய், டெல்லி - 26,460 ரூபாய், கொல்கத்தா - 26,460 ரூபாய், பெங்களூர் - 26,460 ரூபாய், ஹைதராபாத் - 26,460 ரூபாய், கேரளா - 26,460 ரூபாய், புனே - 26,460 ரூபாய், வதோதரா - 26,460 ரூபாய், அகமதாபாத் - 26,460 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 97,500 ரூபாய், மும்பை - 92,500 ரூபாய், டெல்லி - 92,500 ரூபாய், கொல்கத்தா - 92,500 ரூபாய், பெங்களூர் - 85,000 ரூபாய், ஹைதராபாத் - 97,500 ரூபாய், கேரளா - 97,500 ரூபாய், புனே - 92,500 ரூபாய், பரோடா - 92,500 ரூபாய், அகமதாபாத் - 92,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 92,500 ரூபாய், லக்னோ - 92,500 ரூபாய், கோயம்புத்தூர் - 97,500 ரூபாய், மதுரை - 97,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.10 - 6,672 ரூபாய்
குவைத் - KWD 23.56 - 6,455 ரூபாய்
மலேசியா - MYR 344 - 6,862 ரூபாய்
ஓமன் - OMR 31.15 - 6,759 ரூபாய்
கத்தார் - QAR 295 - 6,760 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 298 - 6,634 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 104.50 - 6,767 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 290.75 - 6,613 ரூபாய்
அமெரிக்கா - USD 78.50 - 6,557 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 290.75 - 6,613 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 290.75 - 6,613 ரூபாய்
துபாய் (UAE) - AED 290.75 - 6,613 ரூபாய்
புஜைரா (UAE) - AED 290.75 - 6,613 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 290.75 - 6,613 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 290.75 - 6,613 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 295 - 6,760 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.15 - 6,759 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 298 - 6,634 ரூபாய்
இங்கிலாந்து - GBP 57.70 - 6,424 ரூபாய்
கனடா - CAD 109.25 - 6,730 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 117.90 - 6,713 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.10 - 7,115 ரூபாய்
குவைத் - KWD 25.75 - 7,055 ரூபாய்
மலேசியா - MYR 359 - 7,161 ரூபாய்
ஓமன் - OMR 33.15 - 7,192 ரூபாய்
கத்தார் - QAR 315 - 7,218 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 321 - 7,146 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 115.10 - 7,453 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 314 - 7,141 ரூபாய்
அமெரிக்கா - USD 83.50 - 6,975 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 314 - 7,141 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 314 - 7,141 ரூபாய்
துபாய் (UAE) - AED 314 - 7,141 ரூபாய்
புஜைரா (UAE) - AED 314 - 7,141 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 314 - 7,141 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 314 - 7,141 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 315 - 7,218 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.15 - 7,192 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 321 - 7,146 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.95 - 7,008 ரூபாய்
கனடா - CAD 115.25 - 7,099 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 128.70 - 7,328 ரூபாய்
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications