அமெரிக்க டாலர் முதலீடுகள் அதிகம் பெற்ற அமெரிக்க அரசு பத்திரங்கள் இன்று காலை வர்த்தகத்தில் டாலர் கடனில் அதிகப்படியான லாபம் பார்க்க முதலீட்டாளர்கல் துவங்கியதால் பத்திர முதலீடுகள் குறைந்தது. இதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையிலும், உள்நாட்டு சந்தையிலும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
அமெரிக்க டாலர் முதலீடுகள் அதிகம் பெற்ற அமெரிக்க அரசு பத்திரங்கள் இன்று காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் டாலர் கடனில் அதிகப்படியான லாபம் பார்க்க துவங்கியதால் பத்திர முதலீடுகள் குறைந்தது. இதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையிலும், உள்நாட்டு சந்தையிலும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் விரைவில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்கும் என நம்பினாலும் அதற்கான சூழ்நிலை இல்லை என்பதை அமெரிக்க முதலீட்டாளர்கள் இன்னும் உணரவில்லை. இத்தகையை சூழ்நிலையில் முதலீட்டு விருப்பங்கள் மாறுகிறது, ரிஸ்க் எடுக்கும் அளவுகள் அனைத்தும் மாறுபடுகிறது. இதன் எதிரொலி தான் தற்போது தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம்.
சர்வதேச சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1817 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று 1828 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதுவே ரூபாய் மதிப்பில் பார்த்தால் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை இன்று 152,194 ரூபாய்.
மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.07 சதவீதம் உயர்ந்து 56,762 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 0.70 சதவீதம் உயர்ந்து 67,354.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையிலும் இதன் தாக்கம் தெரிகிறது.
ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் அதிகரித்து 52950 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 57,760 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 42,360 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 400 ரூபாய் உயர்ந்து 73,500 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 160 ரூபாய் உயர்ந்து 23250 ரூபாயாக உள்ளது. கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 52,950 ரூபாய், மும்பை - 52,400 ரூபாய், டெல்லி - 52,550 ரூபாய், கொல்கத்தா - 52,400 ரூபாய், பெங்களூர் - 52,400 ரூபாய், ஹைதராபாத் - 52,400 ரூபாய், கேரளா - 52,400 ரூபாய், புனே - 52,400 ரூபாய், பரோடா - 52,450 ரூபாய், அகமதாபாத் - 52,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 52,550 ரூபாய், லக்னோ - 52,550 ரூபாய், கோயம்புத்தூர் - 52,950 ரூபாய், மதுரை - 52,950 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 57,760 ரூபாய், மும்பை - 57,160 ரூபாய், டெல்லி - 57,310 ரூபாய், கொல்கத்தா - 57,160 ரூபாய், பெங்களூர் - 57,160 ரூபாய், ஹைதராபாத் - 57,160 ரூபாய், கேரளா - 57,160 ரூபாய், புனே - 57,160 ரூபாய், பரோடா - 57,210 ரூபாய், அகமதாபாத் - 57,210 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,310 ரூபாய், லக்னோ - 57,310 ரூபாய், கோயம்புத்தூர் - 57,760 ரூபாய், மதுரை - 57,760 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 42360 ரூபாய், மும்பை - 41920 ரூபாய், டெல்லி - 42040 ரூபாய், கொல்கத்தா - 41920 ரூபாய், பெங்களூர் - 41920 ரூபாய், ஹைதராபாத் - 41920 ரூபாய், கேரளா - 41920 ரூபாய், புனே - 41920 ரூபாய், பரோடா - 41960 ரூபாய், அகமதாபாத் - 41960 ரூபாய், ஜெய்ப்பூர் - 42040 ரூபாய், லக்னோ - 42040 ரூபாய், கோயம்புத்தூர் - 42360 ரூபாய், மதுரை - 42360 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 73500 ரூபாய், மும்பை - 71100 ரூபாய், டெல்லி - 71100 ரூபாய், கொல்கத்தா - 71100 ரூபாய், பெங்களூர் - 69000 ரூபாய், ஹைதராபாத் - 73500 ரூபாய், கேரளா - 73500 ரூபாய், புனே - 71100 ரூபாய், பரோடா - 71100 ரூபாய், அகமதாபாத் - 71100 ரூபாய், ஜெய்ப்பூர் - 71100 ரூபாய், லக்னோ - 71100 ரூபாய், கோயம்புத்தூர் - 73500 ரூபாய், மதுரை - 73500 ரூபாய்.


Click it and Unblock the Notifications