சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாகக் கணிசமான அளவில் உயர்ந்து வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை ஆசியச் சந்தையில் தங்கம் விலை ஒரு வார உச்சத்தை எட்டி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் லெபனான் தலைநகரில் செய்த தாக்குதலும், ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதும் முக்கிய காரணமாக உள்ளது. சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2380 டாலர் அளவீட்டில் இருந்து 2417 டாலருக்கு தடாலடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டில் கோலன் ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட ராக்கெட் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ரெடியாகி வந்த இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரட்டில் Hezbollah பிரிவின் முக்கிய உயர் தலைவரை டார்கெட் செய்து நேற்று மாலை 7.40-க்கு தாக்கியது.

இதேவேளையில் ஈரான் தலைநகர் தெஹ்ரான்-ல் பாலஸ்தீன கிளர்ச்சி குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டு உள்ளார், இதற்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே மத்திய கிழக்கு சந்தையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்துள்ளது, அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவு குறித்த தெளிவாகாத நிலையில், தங்கம் விலை எவ்வளவு உயரும் என்பது தெரியவில்லை. இன்று மாலை அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் 2 நாள் கூட்டத்தின் முடிவு வெளியாக உள்ள நிலையில் தங்கம் விலையின் போக்கு அதன் பின்பு கணிக்கப்படும்.
உலகம் முழுவதும் தங்கம், பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், உலகளவில் பொருளாதாரம் சீர்குலைந்தாலோ அல்லது அரசியல் ஸ்திரத்தன்மை பாதித்தாலோ, போர் மூண்டாலோ தங்கம் விலை உயரும். ஆனால், அதே நேரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்கள் போன்றவையும் தங்கம் விலையைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.
இதேபோல் உலக நாடுகளில் மத்திய வங்கிகள் வட்டி குறைக்கும் போது போர் அச்சம், பொருளாதார பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் காலகட்டத்தில் தங்கத்தைக் காட்டிலும் பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்கும். கூடுதலாக வட்டி விகிதம் குறையும் போது பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் அதிகளவில் வெளியேறும்.
தங்கம் விலை உயர்வு நுகர்வோருக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். ஆனால், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். மேலும் தங்கத்தில் ஏற்றப்பட்டு வந்த தொடர் சரிவு இனி தடை பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தங்கம் விலை உயர்வு போலவே கச்சா எண்ணெய் விலையும் இன்று அதிகப்படியான அளவுக்கு அதிகரித்துள்ளது. WTI கச்சா எண்ணெய் விலை இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் 1.61 சதவீதம் உயர்ந்து 75.95 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.49 சதவீதம் உயர்ந்து 79.80 டாலராக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!



Click it and Unblock the Notifications