தொடர்ச்சியாக விலை குறைந்து வந்த தங்கம் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் சென்னை, மதுரை , கோவை , திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் தங்கத்தின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் நேற்று 13,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 70 ரூபாய் விலை உயர்ந்து 13,220 ரூபாய் ஆக விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,05,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை மதுரை , கோவை , திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஆபரண தங்கம் இதே விலைக்கு தான் விற்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை முதல் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணமே இருக்கிறது. சனி, திங்கள், செவ்வாய் என இந்த மூன்று நாட்களில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது, ஒரு சவரனுக்கு 960 ரூபாய் விலை கூடியிருக்கிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 14,420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,44,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 24 கேரட் தங்கத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது 18 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 11,035 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,280 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தொடர்ந்து மூன்று நாட்களாக மாறாமல் இருந்த வெள்ளியின் விலை இன்று மாற்றம் கண்டு இருக்கிறது. ஒரு கிராமுக்கு 5 ரூபாய் விலை உயர்ந்து 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் விலை உயர்ந்து 2 ,40,000 ரூபாயாக்கு விற்பனையாகிறது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 10 கிராம் தங்கம் விலை 1,42,301 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இது தற்காலிக விலை உயர்வு தான் என்கின்றனர் நிபுணர்கள். குறுகிய காலத்தில் விலை ஏறி மீண்டும் இறங்கும் என கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

