தங்கம் விலை 3வது நாளாக உயர்வு.. இனி 'குறைய' வாய்ப்பில்ல ராஜா..!!

தங்கம் யாருக்குக் தான் பிடிக்காது சொல்லுங்க, ஆண்கள் - பெண்கள் என இரு தரப்பினரும் பல காரணங்களுக்காகத் தங்கம் வாங்குவது இயல்பான ஓன்றாக மாறியுள்ளது. இதற்கிடையில் தங்கம் விலை குறைந்தால் நகை கடைக்குப் படையெடுக்கும் மக்கள் கூட்டத்திற்கு பட்ஜெட் அறிவிப்பில் வெளியான சுங்க வரி குறைப்பு பெரிய ஜாக்பாட் ஆக மாறியது. பட்ஜெட்-க்கு பின்பு தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் வரையில் குறைந்த காரணத்தால் அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.

ஆனால் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு என்பது ஜூலை 30ஆம் தேதியுடன் முடிவடைந்து, 3வது நாளாக இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க வேண்டும் என திட்டமிட்டு வாங்காமல் இருப்பவர்களுக்கு இந்த தொடர் 3 நாள் உயர்வு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்றால் மிகையில்லை.

தங்கம் விலை 3வது நாளாக உயர்வு.. இனி 'குறைய' வாய்ப்பில்ல ராஜா..!!

ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச சந்தையின் தாக்கம் அதிகமாக கொண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவுக்கும் அமெரிக்க முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய காரணமாக உள்ளது. இதன் வாயிலாக வாரத்தின் இறுதி நாளான இன்று சர்வதேசச் சந்தை, எம்சிஎக்ஸ், ரீடைல் சந்தை என அனைத்திலும் தங்கம் விலை உயர்வில் உள்ளது.

அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள், உற்பத்தித் துறை தகவல்கள் அந்நாட்டு முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீட்டைத் தேட வைத்துள்ளது. இதன் மூலம் கணிசமான முதலீடுகள் நேற்றைய வர்த்தகத்தில் தங்கம் மீது குவிந்தது. எனவே ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய அளவான 2457 டாலர் என்ற உச்ச நிலையில் இருந்து சிறிய ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து இன்று 2459 டாலராக உயர்ந்துள்ளது.

இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை சர்வதேச சந்தை சூழ்நிலை மற்றும் உள்நாட்டு டிமாண்ட் அடிப்படையில் 0.72 சதவீதம் அதிகரித்து 70,460 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 1.38 சதவீதம் என தடாலடியாக உயர்ந்து 83,735 ரூபாயாக உள்ளது.

இன்று இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் உயர்ந்து 64,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்து 70,470 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 75 ரூபாய் அதிகரித்துள்ளது, இதேபோல் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 82 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 51,680 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 91000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 200 ரூபாய் குறைந்து 25,950 ரூபாயாக உள்ளது. வெள்ளி, பிளாட்டினம் விலை குறைந்திருக்கும் வேளையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது தற்காலிக முதலீட்டு மதிப்பில் ஏற்படும் சரிவை சரிக்கட்டவே தங்கம் மீது திடீரென முதலீடு செய்யப்பட்டு உள்ளது தெரிகிறது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,460 ரூபாய், மும்பை - 6,480 ரூபாய், டெல்லி - 6,495 ரூபாய், கொல்கத்தா - 6,480 ரூபாய், பெங்களூர் - 6,480 ரூபாய், ஹைதராபாத் - 6,480 ரூபாய், கேரளா - 6,480 ரூபாய், புனே - 6,480 ரூபாய், பரோடா - 6,485 ரூபாய், அகமதாபாத் - 6,485 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,495 ரூபாய், லக்னோ - 6,495 ரூபாய், கோயம்புத்தூர் - 6,460 ரூபாய், மதுரை - 6,460 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,047 ரூபாய், மும்பை - 7,069 ரூபாய், டெல்லி - 7,084 ரூபாய், கொல்கத்தா - 7,069 ரூபாய், பெங்களூர் - 7,069 ரூபாய், ஹைதராபாத் - 7,069 ரூபாய், கேரளா - 7,069 ரூபாய், புனே - 7,069 ரூபாய், பரோடா - 7,074 ரூபாய், அகமதாபாத் - 7,074 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,084 ரூபாய், லக்னோ - 7,084 ரூபாய், கோயம்புத்தூர் - 7,047 ரூபாய், மதுரை - 7,047 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51680 ரூபாய், மும்பை - 51840 ரூபாய், டெல்லி - 51960 ரூபாய், கொல்கத்தா - 51840 ரூபாய், பெங்களூர் - 51840 ரூபாய், ஹைதராபாத் - 51840 ரூபாய், கேரளா - 51840 ரூபாய், புனே - 51840 ரூபாய், பரோடா - 51880 ரூபாய், அகமதாபாத் - 51880 ரூபாய், ஜெய்ப்பூர் - 51960 ரூபாய், லக்னோ - 51960 ரூபாய், கோயம்புத்தூர் - 51680 ரூபாய், மதுரை - 51680 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,950 ரூபாய், மும்பை - 25,950 ரூபாய், டெல்லி - 25,950 ரூபாய், கொல்கத்தா - 25,950 ரூபாய், பெங்களூர் - 25,950 ரூபாய், ஹைதராபாத் - 25,950 ரூபாய், கேரளா - 25,950 ரூபாய், அகமதாபாத் - 25,950 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,950 ரூபாய், லக்னோ - 25,950 ரூபாய், கோயம்புத்தூர் - 25,950 ரூபாய், மதுரை - 25,950 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 91,000 ரூபாய், மும்பை - 87,200 ரூபாய், டெல்லி - 86,500 ரூபாய், கொல்கத்தா - 86,500 ரூபாய், பெங்களூர் - 86,000 ரூபாய், ஹைதராபாத் - 91,000 ரூபாய், கேரளா - 91,000 ரூபாய், புனே - 87,200 ரூபாய், பரோடா - 86,500 ரூபாய், அகமதாபாத் - 86,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 86,500 ரூபாய், லக்னோ - 86,500 ரூபாய், கோயம்புத்தூர் - 91,000 ரூபாய், மதுரை - 91,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 28 - 6,330 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,100 ரூபாய்
மலேசியா - MYR 353 - 6,562 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,449 ரூபாய்
கத்தார் - QAR 279 - 6,407 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 280 - 6,248 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102 - 6,405 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 276 - 6,281 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,239 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 276 - 6,281 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 276 - 6,281 ரூபாய்
துபாய் (UAE) - AED 276 - 6,281 ரூபாய்
புஜைரா (UAE) - AED 276 - 6,281 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 276 - 6,281 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 276 - 6,281 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 279 - 6,407 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,449 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 280 - 6,248 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 30 - 6,730 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,660 ரூபாய்
மலேசியா - MYR 368 - 6,841 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,808 ரூபாய்
கத்தார் - QAR 298 - 6,832 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 302 - 6,739 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 112 - 7,033 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 298 - 6,782 ரூபாய்
அமெரிக்கா - USD 79 - 6,615 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 298 - 6,782 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 298 - 6,782 ரூபாய்
துபாய் (UAE) - AED 298 - 6,782 ரூபாய்
புஜைரா (UAE) - AED 298 - 6,782 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 298 - 6,782 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 298 - 6,782 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 298 - 6,832 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,808 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 302 - 6,739 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+