தங்க பிரியர்கள் அதிர்ச்சி.. தொடர்ந்து உயரும் தங்கம்.. மூன்று நாட்களில் ரூ.1,320 அதிகரிப்பு..!!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும், சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,320 உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களையும், நகை வாங்கத் திட்டமிட்டவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய (ஜூன் 04) நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72,720-ஐ எட்டியுள்ளது.

தொடரும் தங்கத்தின் விலை உயர்வு: கடந்த ஜூன் 02 (திங்கட்கிழமை) அன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.8,950-க்கு விற்பனையானது. அப்போது ஒரு சவரன் ரூ.40 அதிகரித்து, ரூ.71,600-க்கு விற்கப்பட்டது. அதே நாளில், பிற்பகல் மீண்டும் ஒரு விலை உயர்வு ஏற்பட்டது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.9,060-க்கு விற்பனையானது. இதன் காரணமாக, ஒரு சவரன் ரூ.880 அதிகரித்து, ரூ.72,480-ஐ தொட்டது. அதேபோல், நேற்று (ஜூன் 03, செவ்வாய்க்கிழமை), 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்து, ரூ.72,640-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.9,080-க்கு விற்கப்பட்டது.

தங்க பிரியர்கள் அதிர்ச்சி.. தொடர்ந்து உயரும் தங்கம்.. மூன்று நாட்களில் ரூ.1,320 அதிகரிப்பு..!!

இன்றைய (ஜூன் 04) தங்கம் விலை நிலவரம்: இந்தத் தொடர் விலை உயர்வின் உச்சமாக, இன்று (ஜூன் 04, புதன்கிழமை) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து, ரூ.72,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து, ரூ.9,090-க்கு விற்பனை ஆகிறது. இது கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட மொத்த விலை உயர்வைப் பார்த்தால், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 24 காரட் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 24 காரட் தங்கம் ஆனது ரூ.11 உயர்ந்து ரூ.9917 ஆகவும், ஒரு சவரன் ரூ.88 அதிகரித்து ரூ.79336 ஆக விற்கப்படுகிறது.

மேலும், இளம் தலைமுறையினரின் அதிக ஆர்வத்தை பெற்றுள்ள 18 காரட் தங்கமும் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.5 அதிகரித்து ரூ.7480 ஆகவும், ஒரு சவரன் ரூ.40 அதிகரித்து ரூ.59,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி விலை ஆனது நேற்றைய விலையில் இருந்து 1 ரூபாய் அதிகரித்து ரூ.114 ஆக உள்ளது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 அதிகரித்து ரூ.1,14,000 ஆக விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம்?: தங்கத்தின் விலை தொடர் உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் (ரஷ்யா-உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு பதற்றங்கள்), அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் அச்சம், உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்றும் பணவீக்க அச்சங்கள் ஆகியவை முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கித் தள்ளுகின்றன. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருகிறது.

இந்தத் தொடர் விலை ஏற்றம், பண்டிகை காலங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த சாதாரண மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கத்தின் விலை குறையுமா அல்லது இந்த ஏற்றம் தொடருமா என்ற எதிர்பார்ப்பில் பலர் தங்கள் நகை வாங்கும் திட்டங்களைத் தள்ளி வைத்துள்ளனர். தங்கம் ஒரு முதலீட்டுப் பொருளாகக் கருதப்பட்டாலும், அதன் விலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், தற்போதைய சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+