தங்கம் விலை தடாலடியாக உயர்வு.. ஆடிப்போன மக்கள்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..!!

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக மந்தமாக இருந்த நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் சிறிய அளவிலான பதிவு செய்ததைத் தொடர்ந்து இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால், நாட்டின் மொத்த தேவையும் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் தங்கம் விலை சர்வதேசச் சந்தையின் போக்கைத் தான் அதிகம் சார்ந்துள்ளது. இதன் மூலம் நேற்று அமெரிக்கச் சந்தையில் பதிவான தடாலடி உயர்வு இன்று இந்திய சந்தையில் எதிரொலித்துள்ளது.

தங்கம் விலை தடாலடியாக உயர்வு.. ஆடிப்போன மக்கள்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..!!

சர்வதேச சந்தையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 75 டாலரில் இருந்து 76.01 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2332 டாலரில் இருந்து 2364 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட இன்று 73900 ரூபாயை நெருங்கியது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 800 ரூபாய் உயர்ந்து 67,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 960 ரூபாய் உயர்ந்து 73,970 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 640 ரூபாய் உயர்ந்து 54,240 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1400 ரூபாய் உயர்ந்து 98500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 50 ரூபாய் உயர்ந்து 26,310 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,780 ரூபாய், மும்பை - 6,715 ரூபாய், டெல்லி - 6,730 ரூபாய், கொல்கத்தா - 6,715 ரூபாய், பெங்களூர் - 6,715 ரூபாய், ஹைதராபாத் - 6,715 ரூபாய், கேரளா - 6,715 ரூபாய், புனே - 6,715 ரூபாய், பரோடா - 6,720 ரூபாய், அகமதாபாத் - 6,720 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,730 ரூபாய், லக்னோ - 6,730 ரூபாய், கோயம்புத்தூர் - 6,780 ரூபாய், மதுரை - 6,780 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,397 ரூபாய், மும்பை - 7,325 ரூபாய், டெல்லி - 7,340 ரூபாய், கொல்கத்தா - 7,325 ரூபாய், பெங்களூர் - 7,325 ரூபாய், ஹைதராபாத் - 7,325 ரூபாய், கேரளா - 7,325 ரூபாய், புனே - 7,325 ரூபாய், பரோடா - 7,330 ரூபாய், அகமதாபாத் - 7,330 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,340 ரூபாய், லக்னோ - 7,340 ரூபாய், கோயம்புத்தூர் - 7,397 ரூபாய், மதுரை - 7,397 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54240 ரூபாய், மும்பை - 53720 ரூபாய், டெல்லி - 53840 ரூபாய், கொல்கத்தா - 53720 ரூபாய், பெங்களூர் - 53720 ரூபாய், ஹைதராபாத் - 53720 ரூபாய், கேரளா - 53720 ரூபாய், புனே - 53720 ரூபாய், பரோடா - 53760 ரூபாய், அகமதாபாத் - 53760 ரூபாய், ஜெய்ப்பூர் - 53840 ரூபாய், லக்னோ - 53840 ரூபாய், கோயம்புத்தூர் - 54240 ரூபாய், மதுரை - 54240 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,310 ரூபாய், மும்பை - 26,310 ரூபாய், டெல்லி - 26,310 ரூபாய், கொல்கத்தா - 26,310 ரூபாய், பெங்களூர் - 26,310 ரூபாய், ஹைதராபாத் - 26,310 ரூபாய், கேரளா - 26,310 ரூபாய், அகமதாபாத் - 26,310 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,310 ரூபாய், லக்னோ - 26,310 ரூபாய், கோயம்புத்தூர் - 26,310 ரூபாய், மதுரை - 26,310 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 98500 ரூபாய், மும்பை - 94000 ரூபாய், டெல்லி - 94000 ரூபாய், கொல்கத்தா - 94000 ரூபாய், பெங்களூர் - 92850 ரூபாய், ஹைதராபாத் - 98500 ரூபாய், கேரளா - 98500 ரூபாய், புனே - 94000 ரூபாய், பரோடா - 94000 ரூபாய், அகமதாபாத் - 94000 ரூபாய், ஜெய்ப்பூர் - 94000 ரூபாய், லக்னோ - 94000 ரூபாய், கோயம்புத்தூர் - 98500 ரூபாய், மதுரை - 98500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 27.50 - 6,095 ரூபாய்,
குவைத் - KWD 22.20 - 6,045 ரூபாய்,
மலேசியா - MYR 350 - 6,201 ரூபாய்,
ஓமன் - OMR 28.20 - 6,120 ரூபாய்,
கத்தார் - QAR 270 - 6,188 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 271 - 6,035 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 99.60 - 6,144 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 265 - 6,028 ரூபாய்,
அமெரிக்கா - USD 72 - 6,015 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 265 - 6,028 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 265 - 6,028 ரூபாய்,
துபாய் (UAE) - AED 265 - 6,028 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 265 - 6,028 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 265 - 6,028 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 265 - 6,028 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 270 - 6,188 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 28.20 - 6,120 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 271 - 6,035 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 29.20 - 6,472 ரூபாய்,
குவைத் - KWD 23.70 - 6,454 ரூபாய்,
மலேசியா - MYR 368 - 6,520 ரூபாய்,
ஓமன் - OMR 30.10 - 6,532 ரூபாய்,
கத்தார் - QAR 288 - 6,601 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 291 - 6,481 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 109.50 - 6,754 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 286.25 - 6,511 ரூபாய்,
அமெரிக்கா - USD 76 - 6,350 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 286.25 - 6,511 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 286.25 - 6,511 ரூபாய்,
துபாய் (UAE) - AED 286.25 - 6,511 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 286.25 - 6,511 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 286.25 - 6,511 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 286.25 - 6,511 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 288 - 6,601 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 30.10 - 6,532 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 291 - 6,481 ரூபாய்.

வெள்ளிக்கிழமை ஐரோப்பியச் சந்தை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க மாற்றமின்றி, வியாழக்கிழமை அமெரிக்கச் சந்தையில் பதிவான வலுவான உயர்வை மொத்தமாக அப்படியே தக்கவைத்துக்கொண்டு $2,360 - $2,365 விலையில் வர்த்தகமானது.

அமெரிக்க சந்தையில் அடுத்த வாரம் புதிய பத்திர வெளியிடப்பட இருக்கும் வேளையில் வியாழக்கிழமை அன்று அமெரிக்க டிரெஷரி பத்திரங்களின் லாப அளவீடுகள் அதிகரித்தது. பொதுவாகப் பத்திர சந்தையில் புதிய பத்திரங்கள் வெளியிடும் போது தங்கம் விலை சரியும், ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் வியாழக்கிழமை வெளியான மந்தமான அமெரிக்கப் பொருளாதார தரவுகள் தான், இதன் மூலம் இந்த ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு தேவை குறைந்து, தங்கத்திற்குச் சாதகமான சூழ்நிலை உருவாகிறது.

மறுமுனையில் இங்கிலாந்து மத்திய வங்கி (BoE) வியாழக்கிழமை வெளியிட்ட பொருளாதார கருத்துக்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) இந்த மாத தொடக்கத்தில் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது, சுவிஸ் தேசிய வங்கி (SNB) 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக வட்டி விகிதக் குறைப்பை வியாழக்கிழமை அன்று அறிவித்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தங்கத்தின் விலை உயர்வுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க மாற்றமின்றி இருந்தாலும், எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படவுள்ளது என்ற எதிர்பார்ப்பு காரணமாக, விலை உயர்வுக்கான சாத்தியம் இருக்கிறது.

அமெரிக்க டாலர் பலவீனமடைவது மற்றும் பிற முதலீட்டுச் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் போது, தங்கம் பாரம்பரியமாகப் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. எனவே தங்கம் மீது ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+