நடுத்தர மக்களின் முக்கிய சேமிப்பாகவும், முதலீடாகவும் இருக்கும் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடுமாற்றமும், நேற்று அறிவிக்கப்பட்ட வட்டி விகிதம் குறித்த முடிவும் தங்கம் விலையைச் சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரும் பாதையிலேயே வைத்துள்ளது.
இந்திய சந்தையில் பட்ஜெட்-க்கு முன்பு தங்கம் வாங்க வேண்டும் என மக்கள் அதிகம் ஆர்வம் காட்டும் காரணத்தால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை மாறாமல் இருந்தாலும், இந்திய சந்தையில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தங்கம் விலை, டாலர் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தை விலை ஆகியவற்றின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலையை தீர்மானிப்பதில் உள்நாட்டு டிமாண்ட் சிறிய அளவிலான பங்கீட்டை மட்டுமே வகிக்கிறது என்பதால் தங்கம் விலை உயருமா குறையுமான என்பதை இவ்விரு காரணிகளைக் கணக்கிட்டாலே போதுமானது.
அந்த வகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் அறிவித்த நிலையில் ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பை அளவிடும் அமெரிக்க டாலர் குறியீடும் (DXY) வலுப்பெற்று, 0.12% உயர்ந்து 108.04 ஐ எட்டியது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை நேற்றைய விலையான 2760-2765 டாலர் அளவிலேயே உள்ளது. இதற்கு மத்தியில் தங்கம் விலை 2745 டாலர் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித அறிவிப்பு வெளியான பின்பு தங்கம் விலை சரிவில் இருந்து மீண்டுள்ளது.
இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 கிராம் 150 ரூபாய் உயர்ந்து 22 கேரட் தங்கம் 76100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் அதிகரித்து 83020 ரூபாயாக உள்ளது. மேலும் நாட்டின் முக்கிய நகரங்களில் இன்று தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலையை இப்போதும் பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 60880 ரூபாய், மும்பை - 60880 ரூபாய், டெல்லி - 61000 ரூபாய், கொல்கத்தா - 60880 ரூபாய், பெங்களூர் - 60880 ரூபாய், ஹைதராபாத் - 60880 ரூபாய், கேரளா - 60880 ரூபாய், புனே - 60880 ரூபாய், பரோடா - 60920 ரூபாய், அகமதாபாத் - 60920 ரூபாய், ஜெய்ப்பூர் - 61000 ரூபாய், லக்னோ - 61000 ரூபாய், கோயம்புத்தூர் - 60880 ரூபாய், மதுரை - 60880 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,610 ரூபாய், மும்பை - 7,610 ரூபாய், டெல்லி - 7,625 ரூபாய், கொல்கத்தா - 7,610 ரூபாய், பெங்களூர் - 7,610 ரூபாய், ஹைதராபாத் - 7,610 ரூபாய், கேரளா - 7,610 ரூபாய், புனே - 7,610 ரூபாய், பரோடா - 7,615 ரூபாய், அகமதாபாத் - 7,615 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,625 ரூபாய், லக்னோ - 7,625 ரூபாய், கோயம்புத்தூர் - 7,610 ரூபாய், மதுரை - 7,610 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,302 ரூபாய், மும்பை - 8,302 ரூபாய், டெல்லி - 8,317 ரூபாய், கொல்கத்தா - 8,302 ரூபாய், பெங்களூர் - 8,302 ரூபாய், ஹைதராபாத் - 8,302 ரூபாய், கேரளா - 8,302 ரூபாய், புனே - 8,302 ரூபாய், பரோடா - 8,307 ரூபாய், அகமதாபாத் - 8,307 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,317 ரூபாய், லக்னோ - 8,317 ரூபாய், கோயம்புத்தூர் - 8,302 ரூபாய், மதுரை - 8,302 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,285 ரூபாய், மும்பை - 6,227 ரூபாய், டெல்லி - 6,239 ரூபாய், கொல்கத்தா - 6,227 ரூபாய், பெங்களூர் - 6,227 ரூபாய், ஹைதராபாத் - 6,227 ரூபாய், கேரளா - 6,227 ரூபாய், புனே - 6,227 ரூபாய், பரோடா - 6,231 ரூபாய், அகமதாபாத் - 6,231 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,239 ரூபாய், லக்னோ - 6,239 ரூபாய், கோயம்புத்தூர் - 6,285 ரூபாய், மதுரை - 6,285 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,06,000 ரூபாய், மும்பை - 98,500 ரூபாய், டெல்லி - 98,500 ரூபாய், கொல்கத்தா - 98,500 ரூபாய், பெங்களூர் - 98,500 ரூபாய், ஹைதராபாத் - 1,06,000 ரூபாய், கேரளா - 1,06,000 ரூபாய், புனே - 98,500 ரூபாய், பரோடா - 98,500 ரூபாய், அகமதாபாத் - 98,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 98,500 ரூபாய், லக்னோ - 98,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,06,000 ரூபாய், மதுரை - 1,06,000 ரூபாய்.
அமெரிக்க மத்திய வங்கியான பெடர்ல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையில் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் ஆசியச் சந்தையின் வர்த்தகம் துவங்கிய உடன் தங்கம் விலை உயரத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பெடர்ல் ரிசர்வ் பணவீக்கம், வேலைவாய்ப்பு தரவுகளை முன்வைத்து இந்த வட்டி விகித குறைப்பைக் குறைத்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடர்ல் ரிசர்வ் 4.25% - 4.50% என்ற அளவில் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க ஒருமனதான முடிவை எடுத்துள்ளது. இதன் வாயிலாக நீண்ட கால வட்டி விகிதங்களுக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் அமெரிக்க 10 ஆண்டு கருவூல பத்திரத்தின் லாபம் சிறிய அளவில் மட்டும் உயர்ந்து 4.549% ஐ எட்டியது.
More From GoodReturns

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications