தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி வாங்குவதற்கு வருடம் முழுவதும் மக்கள் வரிசைகட்டி நிற்கும் சந்தையைக் கொண்டுள்ளது இந்தியா. ஜூலை மாதம் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவை பயன்படுத்தி அதிகப்படியான மக்கள் தங்கம் வாங்கி பலன் அடைந்தனர், ஆனால் ஜூலை மாத இறுதியில் சுங்க வரி குறைப்பின் எதிரொலிகள் முழுமையாக அடங்கி, சர்வதேச சந்தைக்கு இணங்க செயல்படத் துவங்கியது. இதன் காரணமாகத் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் துவங்கி இந்திய ரீடைல் சந்தை வரையில் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. தமிழ்நாடு ரீடைல் சந்தையில் சனிக்கிழமை தங்கம் விலை கணிசமாகக் குறைந்தாலும் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை தரவுகள் அந்நாட்டில் ரெசிஷன் அச்சத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேற்றப்பட்டு, டாலர் மதிப்பும் குறைந்து தங்கத்தை மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இன்று ஜப்பான், கொரியா, இந்தியப் பங்குச்சந்தைகள் அதிகப்படியான சரிவைப் பதிவு செய்துள்ளது.
இதன் விளைவாகச் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை இன்றைய வர்த்தகத்தில் 2455 டாலர் வரையில் உயர்ந்து, 2424 டாலர் வரையில் சரிந்து மீண்டும் 2443 டாலருக்கு எட்டியுள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையிலும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் உடன் 10 கிராம் தங்கம் விலை 0.38 சதவீதம் உயர்ந்து 70,052 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை 0.20 சதவீதம் குறைந்து 82,324 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 64,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 70,580 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 51,760 ரூபாயாக உள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை வெறும் 100 ரூபாய் மட்டும் உயர்ந்து 91,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 160 ரூபாய் குறைந்து 25,590 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,470 ரூபாய், மும்பை - 6,470 ரூபாய், டெல்லி - 6,485 ரூபாய், கொல்கத்தா - 6,470 ரூபாய், பெங்களூர் - 6,470 ரூபாய், ஹைதராபாத் - 6,470 ரூபாய்,கேரளா - 6,470 ரூபாய், புனே - 6,470 ரூபாய், பரோடா - 6,475 ரூபாய், அகமதாபாத் - 6,475 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,485 ரூபாய், லக்னோ - 6,485 ரூபாய், கோயம்புத்தூர் - 6,470 ரூபாய், மதுரை - 6,470 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,058 ரூபாய், மும்பை - 7,058 ரூபாய், டெல்லி - 7,073 ரூபாய், கொல்கத்தா - 7,058 ரூபாய், பெங்களூர் - 7,058 ரூபாய், ஹைதராபாத் - 7,058 ரூபாய், கேரளா - 7,058 ரூபாய், புனே - 7,058 ரூபாய், பரோடா - 7,063 ரூபாய், அகமதாபாத் - 7,063 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,073 ரூபாய், லக்னோ - 7,073 ரூபாய், கோயம்புத்தூர் - 7,058 ரூபாய், மதுரை - 7,058 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51760 ரூபாய், மும்பை - 51760 ரூபாய், டெல்லி - 51880 ரூபாய், கொல்கத்தா - 51760 ரூபாய், பெங்களூர் - 51760 ரூபாய், ஹைதராபாத் - 51760 ரூபாய், கேரளா - 51760 ரூபாய், புனே - 51760 ரூபாய், பரோடா - 51800 ரூபாய், அகமதாபாத் - 51800 ரூபாய், ஜெய்ப்பூர் - 51880 ரூபாய், லக்னோ - 51880 ரூபாய், கோயம்புத்தூர் - 51760 ரூபாய், மதுரை - 51760 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,590 ரூபாய், மும்பை - 25,590 ரூபாய், டெல்லி - 25,590 ரூபாய், கொல்கத்தா - 25,590 ரூபாய், பெங்களூர் - 25,590 ரூபாய், ஹைதராபாத் - 25,590 ரூபாய், கேரளா - 25,590 ரூபாய், அகமதாபாத் - 25,590 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,590 ரூபாய், லக்னோ - 25,590 ரூபாய், கோயம்புத்தூர் - 25,590 ரூபாய், மதுரை - 25,590 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 91,000 ரூபாய், மும்பை - 85,700 ரூபாய், டெல்லி - 85,700 ரூபாய், கொல்கத்தா - 85,700 ரூபாய், பெங்களூர் - 85,000 ரூபாய், ஹைதராபாத் - 91,000 ரூபாய், கேரளா - 91,000 ரூபாய், புனே - 85,700 ரூபாய், பரோடா - 85,700 ரூபாய், அகமதாபாத் - 85,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 85,700 ரூபாய், லக்னோ - 85,700 ரூபாய், கோயம்புத்தூர் - 91,000 ரூபாய், மதுரை - 91,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,294 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,070 ரூபாய்
மலேசியா - MYR 345 - 6,536 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,445 ரூபாய்
கத்தார் - QAR 276 - 6,357 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 278 - 6,208 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 101 - 6,366 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 275 - 6,271 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,245 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 275 - 6,271 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 275 - 6,271 ரூபாய்
துபாய் (UAE) - AED 275 - 6,271 ரூபாய்
புஜைரா (UAE) - AED 275 - 6,271 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 275 - 6,271 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 275 - 6,271 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 276 - 6,357 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,445 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 278 - 6,208 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,672 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,619 ரூபாய்
மலேசியா - MYR 356 - 6,745 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,794 ரூபாய்
கத்தார் - QAR 295 - 6,782 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 300 - 6,699 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 111 - 7,031 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 297 - 6,773 ரூபாய்
அமெரிக்கா - USD 79 - 6,623 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 297 - 6,773 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 297 - 6,773 ரூபாய்
துபாய் (UAE) - AED 297 - 6,773 ரூபாய்
புஜைரா (UAE) - AED 297 - 6,773 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 297 - 6,773 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 297 - 6,773 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 295 - 6,782 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,794 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 300 - 6,699 ரூபாய்
அமெரிக்க மந்தநிலை அச்சம்: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜூலை மாத வேலைவாய்ப்பு தரவுகளில் அமெரிக்க வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தின் 4.1 சதவீதத்தில் இருந்து 4.3 சதவிகிதமாக மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் விரைவில் மந்த நிலை ஏற்படும் என்ற அச்சம் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாதத்தில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பின்மை தரவுகள் அமெரிக்க பங்குச்சந்தையை மோசமான நிலைக்கு தள்ளியது மட்டும் அல்லாமல், தங்கம் மீதான முதலீட்டையும் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ப்ளூம்பெர்க் செய்தியின்படி, கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர்கள் அடுத்த 12 மாதங்களில் அமெரிக்காவில் மந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளனர்.
பொருளாதார மந்த நிலை அச்சத்தின் எதிரொலியாக, இந்த ஆண்டு அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிலர் இந்த ஆண்டு செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஜேபி மோர்கன் நிபுணர்கள் செப்டம்பரில் 50 அடிப்படை புள்ளிகள் மற்றும் நவம்பரில் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித குறைப்பு வரலாம் என்று கணித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொன்றதைத் தொடர்ந்து, ஈரான் பழிவாங்கும் என்று உறுதியளித்துள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் மாசுட் பெஸ்கியானின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஈரானுக்கு வந்த போது ஹனியே கொல்லப்பட்டார்.
இதனால் இஸ்ரேல்- ஈரான் மத்தியில் நிலவும் பதற்றமான சூழ்நிலை போர் அச்சத்தை அதிகரித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்கா தனது இராணுவத்தை இப்பகுதியில் வலுப்படுத்தி வருகிறது. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் மூலம் தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க தூண்டினாலும் அமெரிக்க வேலையின்மை தரவுகளின் பாதிப்பை முழுமையாக நீக்க முடியவில்லை.
More From GoodReturns

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications