தங்கம் விலை ரூ.5000 உயர்வு: இந்தியர்களின் தீபாவளி பர்சேஸுக்கு வேட்டு வைத்த டிரம்ப்..!!

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் டிரம்புக்கு எதிராக அமைந்துள்ளதால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் சூழலில் தங்கம் விலை 5000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டு அதிர்ச்சியை தந்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது . சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 285 ரூபாய் உயர்ந்து 13,385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 2,280 ரூபாய் விலை கூடி 1,07,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் கடந்த வாரம் வரலாற்றில் இல்லாத சரிவை கண்டது. ஆனால் கடந்த 2 நாட்களிலேயே பெருமளவு விலை உயர்ந்து விட்டது.

தங்கம் விலை ரூ.5000 உயர்வு: இந்தியர்களின் தீபாவளி பர்சேஸுக்கு வேட்டு வைத்த டிரம்ப்..!!

தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதியான சனிக்கிழமை தொடங்கி இன்று வரையிலான இந்த 5 நாட்களில் ஒரு ஞாயிறு என்பதால் தங்கம் விலை மாறவில்லை, மற்ற 4 நாட்களுமே தங்கம் விலை உயர்ந்துள்ளது. அப்படி பார்த்தால் நவம்பர் 1 முதல் இன்று வரை 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 655 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு 5,240 ரூபாய் விலை கூடியுள்ளது. நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணதங்கம் விலை கிராமுக்கு 585 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு 4,680 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது.

Also Read

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்நிலையில் தடாலடியாக தங்கம் விலை உயர்ந்திருப்பது மக்களுக்கு கலக்கத்தை தந்துள்ளது. ஒரு வழியாக தங்கம் விலை குறைந்ததே என மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அமெரிக்க தேர்தல் முடிவுகளால் தங்கம் விலை உயர்ந்துவிட்டது.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,602 ரூபாய்க்கும் 10 கிராம் 1,46,020 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிராமுக்கு 638 ரூபாயும் , 10 கிராமுக்கு 6,380 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,952 ரூபாய்க்கும் ஒரு சவரன் 87,616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 210 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.10 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையை விட கிலோவுக்கு 2.25 லட்சம் ரூபாய் விலை சரிந்து 2 லட்சமாக தான் இருந்தது. ஆனால் அமெரிக்க தேர்தல் முடிவு வெளியானதை அடுத்து நேற்று மாலை கிலோ 2.10 லட்சமாக விலை உயர்ந்தது. இன்றும் அதே வேளையில் நீடிக்கிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,140 டாலருக்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதே இந்தியாவிலும் தங்கம் விலை உயர காரணம். எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 1,45,900 ரூபாயாக வர்த்தமாகி வருகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+