சர்வதேச சந்தையில் பணவீக்க தரவுகளின் தாக்கமும், நாணய கொள்கையின் தாக்கமும் மொத்தமாக முடிந்த நிலையில், செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ந்து இதே நாணய புழக்கம், வட்டி விகிதம் தான் தொடரும். இதனால் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை குறுகிய கால லாப நோக்கத்தில் முதலீடு செய்ய துவங்கியதால் தங்கமும் குறிப்பிடத்தக்க முதலீட்டை வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தை வர்த்தகத்தில் பெற்றது.
இதன் எதிரொலியாக இந்த வாரத்தின் வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2317 டாலரில் இருந்து 2332 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஐரோப்பிய வர்த்தகத்தின் போதே தங்கம் விலை உயர துவங்கிய வேளையில் எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர்ஸ்-ன் விலையும் அதிகரித்தது.

இதன் செயின் ரியாக்ஷனாக 2 நாட்களாக குறைந்த தங்கம் விலை, இன்று ஓரே நாளில் மொத்தமாக உயர்ந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு கடந்த 2 நாட்களில் 30 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தடாலடியாக கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது.
இந்த 2 நாள் சரிவைப் பயன்படுத்தி தங்கம் வாங்கியோருக்கு ஜாக்பாட் தான், இன்று ரீடைல் சந்தையில் இருக்கும் விலை நிலவரத்தையும், இந்தியா மற்றும் உலக நாடுகளில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தங்கம் விலையைத் தொகுத்துப் பட்டியலிட்டுள்ளோம்.
இதன் அடிப்படையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் அதிகரித்து 67,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 73,150 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 440 ரூபாய் அதிகரித்து 53,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 600 ரூபாய் அதிகரித்து 95600 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 140 ரூபாய் அதிகரித்து 25,570 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,705 ரூபாய், மும்பை - 6,650 ரூபாய், டெல்லி - 6,665 ரூபாய், கொல்கத்தா - 6,650 ரூபாய், பெங்களூர் - 6,650 ரூபாய், ஹைதராபாத் - 6,650 ரூபாய், கேரளா - 6,650 ரூபாய், புனே - 6,650 ரூபாய், பரோடா - 6,655 ரூபாய், அகமதாபாத் - 6,655 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,665 ரூபாய், லக்னோ - 6,665 ரூபாய், கோயம்புத்தூர் - 6,705 ரூபாய், மதுரை - 6,705 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,315 ரூபாய், மும்பை - 7,255 ரூபாய், டெல்லி - 7,270 ரூபாய், கொல்கத்தா - 7,255 ரூபாய், பெங்களூர் - 7,255 ரூபாய், ஹைதராபாத் - 7,255 ரூபாய், கேரளா - 7,255 ரூபாய், புனே - 7,255 ரூபாய், பரோடா - 7,260 ரூபாய், அகமதாபாத் - 7,260 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,270 ரூபாய், லக்னோ - 7,270 ரூபாய், கோயம்புத்தூர் - 7,315 ரூபாய், மதுரை - 7,315 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53640 ரூபாய், மும்பை - 53200 ரூபாய், டெல்லி - 53320 ரூபாய், கொல்கத்தா - 53200 ரூபாய், பெங்களூர் - 53200 ரூபாய், ஹைதராபாத் - 53200 ரூபாய், கேரளா - 53200 ரூபாய், புனே - 53200 ரூபாய், பரோடா - 53240 ரூபாய், அகமதாபாத் - 53240 ரூபாய், ஜெய்ப்பூர் - 53320 ரூபாய், லக்னோ - 53320 ரூபாய், கோயம்புத்தூர் - 53640 ரூபாய், மதுரை - 53640 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,570 ரூபாய், மும்பை - 25,570 ரூபாய், டெல்லி - 25,570 ரூபாய், கொல்கத்தா - 25,570 ரூபாய், பெங்களூர் - 25,570 ரூபாய், ஹைதராபாத் - 25,570 ரூபாய், கேரளா - 25,570 ரூபாய், அகமதாபாத் - 25,570 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,570 ரூபாய், லக்னோ - 25,570 ரூபாய், கோயம்புத்தூர் - 25,570 ரூபாய், மதுரை - 25,570 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 95600 ரூபாய், மும்பை - 91000 ரூபாய், டெல்லி - 91000 ரூபாய், கொல்கத்தா - 91000 ரூபாய், பெங்களூர் - 90300 ரூபாய், ஹைதராபாத் - 95600 ரூபாய், கேரளா - 95600 ரூபாய், புனே - 91000 ரூபாய், பரோடா - 91000 ரூபாய், அகமதாபாத் - 91000 ரூபாய், ஜெய்ப்பூர் - 91000 ரூபாய், லக்னோ - 91000 ரூபாய், கோயம்புத்தூர் - 95600 ரூபாய், மதுரை - 95600 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.10 - 6,006 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,992 ரூபாய்,
மலேசியா - MYR 348 - 6,162 ரூபாய்,
ஓமன் - OMR 27.90 - 6,055 ரூபாய்,
கத்தார் - QAR 266.50 - 6,108 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 268 - 5,968 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.20 - 6,062 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 261.75 - 5,954 ரூபாய்,
அமெரிக்கா - USD 71 - 5,932 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 261.75 - 5,954 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 261.75 - 5,954 ரூபாய்,
துபாய் (UAE) - AED 261.75 - 5,954 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 261.75 - 5,954 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 261.75 - 5,954 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 261.75 - 5,954 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 266.50 - 6,108 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.90 - 6,055 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 268 - 5,968 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.90 - 6,405 ரூபாய்,
குவைத் - KWD 23.40 - 6,374 ரூபாய்,
மலேசியா - MYR 365 - 6,463 ரூபாய்,
ஓமன் - OMR 29.70 - 6,445 ரூபாய்,
கத்தார் - QAR 284 - 6,509 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 288 - 6,413 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 109.10 - 6,735 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 282.50 - 6,426 ரூபாய்,
அமெரிக்கா - USD 75.50 - 6,308 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 282.50 - 6,426 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 282.50 - 6,426 ரூபாய்,
துபாய் (UAE) - AED 282.50 - 6,426 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 282.50 - 6,426 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 282.50 - 6,426 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 282.50 - 6,426 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 284 - 6,509 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.70 - 6,445 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,413 ரூபாய்.


Click it and Unblock the Notifications