வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சனிக்கிழமை அன்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்திருந்தது. வெள்ளிக்கிழமை அன்று தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் அதிகரித்தது. சில நாட்களாக தங்கம் விலையில் குறைவே இல்லை. தொடர்ந்து ஏறுமுகமாக தான் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி கோவை மதுரையில் தங்கம் விலை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.6,880 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.7,505 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 6,880 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் அதிகரித்து 55,040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 16 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,505 ரூபாயாக உள்ளது. அதேபோல ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 128 ரூபாய் அதிகரித்து 60,040 ரூபாயாக இருக்கிறது.
இன்று ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 12 ரூபாய் அதிகரித்து 5,635 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 96 ரூபாய் அதிகரித்து 45,080 ரூபாயாக உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று கிராம் 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூரில் 1 கிலோ வெள்ளி விலை 98,000 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் இந்த தொடர் ஏற்றம் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நாளை முதல் புரட்டாசி மாதம் துவங்க உள்ள காரணத்தினால் திருமண விசேஷங்கள் தொடர்ந்து இந்த மாதத்தில் நடைபெற்றிருக்கும். இதன் காரணமாகவும் டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலையில் ஏற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் தோராயமாக தங்கம் விலை சவரனுக்கு 1400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் தங்கம் விலையில் ஏற்றம் இருக்குமா அல்லது குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?



Click it and Unblock the Notifications