கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இது நகை வாங்கும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,400 உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களையும், நகை வாங்கத் திட்டமிட்டவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய (ஜூன் 05) நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.73,040-ஐ எட்டியுள்ளது.
தொடரும் தங்கத்தின் விலை உயர்வு: கடந்த ஜூன் 02 முதல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், ஜூன் 2-ல் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.8,950-க்கு விற்பனையானது. அப்போது ஒரு சவரன் ரூ.40 அதிகரித்து, ரூ.71,600-க்கு விற்கப்பட்டது. அதே நாளில், பிற்பகல் மீண்டும் ஒரு விலை உயர்வு ஏற்பட்டது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.9,060-க்கு விற்பனையானது. இதன் காரணமாக, ஒரு சவரன் ரூ.880 அதிகரித்து, ரூ.72,480-ஐ தொட்டது.

அதேபோல், (ஜூன் 03, செவ்வாய்க்கிழமை), 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்து, ரூ.72,640-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.9,080-க்கு விற்கப்பட்டது. அதேபோல், (ஜூன் 04, புதன்கிழமை) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து, ரூ.72,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து, ரூ.9,090-க்கு விற்பனையானது.
இன்றைய (ஜூன் 05) தங்கம் விலை நிலவரம்: இந்தத் தொடர் விலை உயர்வில் இன்று (ஜூன் 05, வியாழக்கிழமை) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.320 அதிகரித்து, ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து, ரூ.9,130-க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், 24 காரட் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 24 காரட் தங்கம் ஆனது ரூ.43 உயர்ந்து ரூ.9960 ஆகவும், ஒரு சவரன் ரூ.344 அதிகரித்து ரூ.79,680 ஆக விற்கப்படுகிறது.
மேலும், இளம் தலைமுறையினரின் அதிக ஆர்வத்தை பெற்றுள்ள 18 காரட் தங்கமும் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.30 அதிகரித்து ரூ.7510 ஆகவும், ஒரு சவரன் ரூ.240 அதிகரித்து ரூ.60,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க வெள்ளி விலை மாற்றமில்லாமல் உள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி விலை ஆனது நேற்றைய விலையிலேயே நிடிக்கிறது. இது ஒரு கிராம் ரூ.114 ஆக உள்ளது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 அதிகரித்து ரூ.1,14,000 ஆக விற்கப்படுகிறது.
என்ன காரணம் இந்த விலை உயர்வுக்கு?: தங்கத்தின் விலை தொடர் உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் (ரஷ்யா-உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு பதற்றங்கள்), அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் அச்சம், உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்றும் பணவீக்க அச்சங்கள் ஆகியவை முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கித் தள்ளுகின்றன. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருகிறது.
நகைப்பிரியர்கள் அதிர்ச்சி: இந்தத் தொடர் விலை ஏற்றம், பண்டிகை காலங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த சாதாரண மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கத்தின் விலை குறையுமா அல்லது இந்த ஏற்றம் தொடருமா என்ற எதிர்பார்ப்பில் பலர் தங்கள் நகை வாங்கும் திட்டங்களைத் தள்ளி வைத்துள்ளனர். தங்கம் ஒரு முதலீட்டுப் பொருளாகக் கருதப்பட்டாலும், அதன் விலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், தற்போதைய சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்



Click it and Unblock the Notifications