ஜூன் 1ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக விலை சரிவடைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்த தங்கம் தற்போது இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக விலை உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியை தர தொடங்கி இருக்கிறது. சென்னையில் நேற்று ,இன்று என தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு கண்டிருக்கின்றன.
சென்னை, மதுரை ,கோவை, திருச்சி என தமிழ்நாட்டின் பிரதான நகரங்கள் அனைத்திலும் ஜூன் 1ஆம் தேதி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14 ,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து படிப்படியாக குறைந்து வந்த தங்கம் ஜூன் 11ஆம் தேதி அன்று 13, 500 ரூபாய் என சரிவை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று ,இன்று என தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 13, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முந்தைய நாளை விட இது 300 ரூபாய் உயர்வு. இந்த சூழலில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்நது 13,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 360 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,10,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 480 ரூபாய் விலை உயர்ந்து 1,10,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1,38,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,880 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. இன்று சனிக்கிழமை என்பதால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் இருக்காது எனவே இதை விலைக்கு தான் நாளையும் தங்கம் விற்பனை செய்யப்படும்.
24 கேரட் சுத்ததங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 65 ரூபாய் விலை உயர்ந்து 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 650 ரூபாய் விலை உயர்ந்து 1,51,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,610 ரூபாய்க்கும் ஒரு சவரன் 97,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரத்தை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் அதாவது 8 கிராம் எடை கொண்ட 22 கேரட் ஆபரணத் தங்கம் வாங்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி உள்ளிட்டவை சேர்த்து சராசரியாக 1.28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
தங்கத்தை அடுத்து வெள்ளியின் விலை மாற்றம் அடைந்திருக்கிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று 265 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று ஐந்து ரூபாய் விலை கூடி 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று இன்று ஆகிய இரண்டு நாட்களில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 10,000 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


