தங்கத்தின் விலை அமெரிக்க சந்தையின் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்தது, இதன் வாயிலாக இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக சரிந்து தங்கம் வாங்க திட்டமிட்டோருக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளது.
ஒரே நாளில் ஒரு சதவீதத்திற்கும் மேலாகவும், இந்த வாரம் முழுவதும் மூன்று சதவீதத்திற்கும் மேலாகவும் தங்கத்தின் விலை இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் குறைந்துள்ளது. தங்கம் விலை வீழ்ச்சி அடைந்துள்ள இதே நேரத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. சர்வதேச முதலீடு சந்தையில் நிலவும் மோசமான சூழ்நிலை தான் இந்த விலை மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக உள்ளது. இதுக்குறித்து முழுமையாக அறிந்துக்கொண்டால் சரியான நேரத்தில் நீங்கள் முதலீடு செய்து அதிகப்படியான லாபத்தை பெறலாம்.

இந்தியாவில் கடந்த 4 நாளாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்துள்ளது, பிப்ரவரி 25 ஆம்தேதி 8075 ரூபாய்க்கு விற்கப்பட்ட 22 கேரட் ஒரு கிராம் தங்கம் இன்று மார்ச் 1ஆம் த்தி 7940 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த 4 நாட்களில் கிராமுக்கு 135 ரூபாய் குறைந்துள்ளது. 10 கிராமுக்கு 1350 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு பத்து நாள் உயர்வான 107.66 ஐ எட்டியது முதலீட்டு சந்தையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. தங்கம் விலை குறையும் வேளையில் டாலர் மதிப்பு உயர முக்கியமான காரணம் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசின் வர்த்தக கொள்கை மாற்றங்கள் மற்றும் இதன் மூலம் எழும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் தான்.
இந்த பிரச்சனைக்கு மத்தியில் டாலர் மதிப்பு 10 நாள் உயர்வை எட்டியதை தொடர்ந்து, தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2,858 டாலரில் வர்த்தகமாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை 2955 டாலராக உள்ளது.
டாலர் மதிப்பு மற்றும் தங்கம் விலையில் பதிவாகியுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து அமெரிக்க மண்ணிற்கு வரும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதை கடந்த மாதம் ஒத்திவைத்த நிலையில், இது அடுத்த வாரம் மார்ச் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தார். இது சர்வதேச பொருளாதார வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும், சப்ளை செயினிலும் பெரும் மாற்றத்தையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பணவீக்க அளவீட்டை கணக்கிடும் கோர் தனிப்பட்ட நுகர்வு செலவுகள் (PCE) விலை குறியீடு பணவீக்கம் ஃபெடரல் ரிசர்வ் இலக்கான இரண்டு சதவீதத்தை நெருங்கி வருவதைக் குறிக்கிறது. இந்த தரவு வெளியீடு, ஃபெடரல் ரிசர்வ் தளர்வான நாணயக் கொள்கைகளைத் தொடரும் என்ற எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின ஜிடிபி வளர்ச்சி 2.3 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாக குறைக்கப்படும் என கணிப்புகளும் வெளியாகியுள்ளது. இதனால் அரசு பத்திரங்கள் மீதான முதலீடும் குறைந்துள்ளது. இதனால் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது கையிருப்பில் அதிகப்படியான பணத்தை வைத்திருக்கும் நிலை உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்வுகள், உலகளாவிய சந்தைகளில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, மற்றும் அமெரிக்க டாலரின் வலிமை பொருளாதார மந்த நிலை குறித்த கவலைகளை தூண்டுகின்றன.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!



Click it and Unblock the Notifications