2026-இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? முன்னணி வங்கிகள் வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!

2025ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக தங்கத்தின் விலை பல வரலாற்று உச்சங்களை எல்லாம் எட்டியது. உலக சந்தையில் ஆகட்டும் உள்ளூர் சந்தையில் ஆகட்டும் தங்கம் விலை குறைந்த காலத்திலேயே பல மடங்கு உயர்ந்தது .

இந்த ஆண்டில் மட்டும் தங்கம் இதுவரை 60 சதவீதத்திற்கும் மேல் விலை உயர்வு கண்டிருக்கிறது. தற்போது தங்கத்தின் விலை சற்றே குறைந்து இருந்தாலும், 2026 ஆம் ஆண்டில் 2025 ஆம் ஆண்டு போலவே தங்கத்தின் விலை உயருமா? இந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்யாமல் வாய்ப்பை நழுவ விட்டவர்களுக்கு அடுத்த ஆண்டாவது அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த சூழலில் தான் உலகின் பல்வேறு முன்னணி வங்கிகளும் தரகு நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் 2026இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த தங்களுடைய கணிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.

2026-இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? முன்னணி வங்கிகள் வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!

பேங்க் ஆஃப் அமெரிக்கா: உலக சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4187 டாலராக இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் தங்கம் 60% விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் பேங்க் ஆஃப் அமெரிக்கா 2026 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரம் டாலர்களை எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. தற்போதைய நிலையில் இருந்து சுமார் 19% உயரும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா தெரிவிக்கிறது. டிரம்ப் தன்னுடைய வர்த்தக கொள்கைகளை மாற்றிக் கொள்வது, அமெரிக்கா வர்த்தக பற்றாக்குறை உள்ளிட்டவை 2025 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலையை உயர்த்தும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோல்டுமேன் சாக்ஸ்: இந்த நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4900 டாலர்கள் வரை எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து அதிகமாக தங்கம் வாங்குவதையும் , ரெப்போ வட்டி விகிதங்களை குறைப்பதும் தங்கத்தின் விலையை உயர்த்தும் என தெரிவித்திருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கு மூன்று முறை வட்டிகளை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் . 2026 தங்கம் முதலீட்டாளர்களுக்கு வளமான ஆண்டாக இருக்கும் என தெரிவிக்கிறது .

ஹெச்எஸ்பிசி: இந்த நிறுவனம் சர்வதேச சந்தையில் 4,400 டாலர்கள் என்ற விலைக்குள் ஏற்ற இறக்கங்களை காணும் என தெரிவித்திருக்கிறது . தற்போதுள்ள விலையில் இருந்து அதிகபட்சம் 5% உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது. வர்த்தக மோதல்கள் தணிந்தது, புவி சார் பதட்டங்கள் குறைந்தது. தங்கத்தின் விலையில் ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருக்கும் என ஹெச்எஸ்பிசி-இன் கணிப்பு தெரிவிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+