தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலை தங்க நகை வாங்குவதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது என்றால் மிகையில்லை.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கிராமுக்கு 50 ரூபாய் வரையில் உயர்ந்த தங்கம் விலை சனிக்கிழமையும் பெரிய அளவிலான உயர்வை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட போது கணிசமான சரிவைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள விலை மாற்றங்களும், ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு உள்ள சரிவும் தங்கம் விலையை அதிகளவில் பாதித்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை நிலவரம்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலையில் அதிரடியான விலை மாற்றங்களை எதிர்கொண்டது. இதன் வாயிலாக 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.49 சதவீதம் சரிவடைந்தது.
இதனால் தங்கம் விலை 46,610 ரூபாய்க்குச் சரிந்தது. ஆனால் ரீடைல் சந்தையில் நேற்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 500 ரூபாய் வரையில் உயர்ந்தது. குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் நேற்றை வர்த்தக முடிவில் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது. தங்கம் 0.49 சதவீதம் சரிவடைந்த நிலையில் வெள்ளி விலை 0.80 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,961 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை விலை
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச தங்க வர்த்தகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,748 டாலர் வரையில் உயர்ந்து சில மணிநேரத்திற்குள் தடாலடியாக 1,732 டாலருக்குச் சரிந்தது. வர்த்தக முடிவில் இதன் விலை உயர்ந்து 1,744 டாலருக்கு நிலைப்பெற்று உள்ளது. ரூபாய் மதிப்பில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,30,340 ரூபாயாகும்.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுகிறது. 5 நாட்களுக்கு முன்பு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.20 ரூபாய் அளவில் இருந்த நிலையில் தற்போது 74.73 ரூபாயாகச் சரிந்துள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்கள் தளர்வுகளுடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகப் பங்குச்சந்தை மற்றும் பிற முதலீட்டுச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது.
தற்காலிகமான நிலை
இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இது தற்காலிகமானது என்றாலும் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு இது முக்கியக் காரணமாக உள்ளது.
2000 டாலரை தாண்டும் தங்கம்
இந்தியாவைப் போல் ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வருடத்தின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2000 டாலரைத் தொடும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications