தங்கம் விலை பயங்கரமாக சரியலாம்! Credit Suisse கணிப்பு! எவ்வளவு வீழ்ச்சி காணும்?

சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை (XAU USD) இந்த 2020-ம் ஆண்டில் மட்டும் (இது நாள் வரை) 24.23 சதவிகிதம் விலை அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பெர்க் தரவுகள் சொல்கின்றன.

கடந்த ஆகஸ்ட் 2020 முதல் வாரத்தில், 2,063 டாலருக்கு நிறைவடைந்து, முதலீட்டாளர்களை அண்ணாந்து பார்க்க வைத்தது சர்வதேச தங்கம் விலை. ஆனால் இந்த விலை ஏற்றம் நிலைக்கவில்லை.

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த ஆகஸ்ட் 2020 உச்சத்துக்குப் பிறகு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

எதை பார்க்கப் போகிறோம்

எதை பார்க்கப் போகிறோம்

சர்வதேச தங்கம் விலை எவ்வளவு டாலர் வீழ்ச்சி கண்டு இருக்கிறது? இதனால் ஆபரணத் தங்கம் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறதா? மேலும் எவ்வளவு டாலர் வரை சர்வதேச தங்கம் விலை வீழ்ச்சி காணலாம் என க்ரெடிட் சூசி சொல்கிறது? அந்த விலை வீழ்ச்சி சென்னை ஆபரணத் தங்கம் விலையிலும் எதிரொலிக்குமா? இதுவரை அப்படி எதிரொலித்து இருக்கிறதா? என்பதை எல்லாம் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

8.5 % வீழ்ச்சி - 176 டாலர்

8.5 % வீழ்ச்சி - 176 டாலர்

இன்று 1,887 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது ஒரு அவுன்ஸ் சர்வதேச் தங்கம் விலை. கடந்த புதன்கிழமை (16 செப் 2020) அன்று, 1,959 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக இந்த ஐந்து வர்த்தக நாட்களில் 72 டாலர் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது. ஆகஸ்ட் உச்சமான 2,063 டாலரில் இருந்து தற்போதைய (23 செப் 2020) விலையான 1,887 டாலரைக் கழித்தால், 176 டாலர் என்கிற பெரிய விலை வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது. சரி ஏன் இவ்வளவு பெரிய சரிவு?

தங்கம் விலை வீழ்ச்சிகிகு காரணங்கள் என்ன?

தங்கம் விலை வீழ்ச்சிகிகு காரணங்கள் என்ன?

அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் (DXY:CUR), கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்தில் இருந்து, நேற்று வரை ஒரு முறை கூட 94 புள்ளிகளைத் தொட்டது இல்லை. ஆனால் இன்று காலை அதிகபட்சமாக 94.24 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமானது. இது அமெரிக்க டாலரின் பலம் அதிகரிப்பதையே காட்டுகிறது.

டாலரால் தங்கம் காஸ்ட்லி ஆகிவிடும்

டாலரால் தங்கம் காஸ்ட்லி ஆகிவிடும்

டாலர் மதிப்பு அதிகரித்தால், மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பு குறைகிறது என பொருள். எனவே மற்ற நாட்டு முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டி இருக்கும். எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து இருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து தங்கத்தின் விலை ஏற்றத்தை கணிசமாக பாதித்து இருக்கிறது.

SPDR Gold Trust கையிருப்பு

SPDR Gold Trust கையிருப்பு

தங்கத்தில் முதலீடு குறைந்து இருக்கிறதா என்பதை, உலகின் மிகப் பெரிய கோல்ட் ட்ரஸ்டான SPDR Gold Trust-ன் தங்க ஹோல்டிங்ஸைப் பார்த்தாலே ஒரு தெளிவு கிடைத்துவிடும். நேற்று (22 செப் 2020) SPDR Gold Trust-ன் கையிருப்பு, 0.05 சதவிகிதம் இறக்கம் கண்டு 1,278.23 டன்னாக குறைந்து இருக்கிறதாம். இது பெரிய சரிவு இல்லை என்றாலும், தங்கத்தில் முதலீடுகள் வரவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இது போன்ற காரணங்களால் தங்கம் விலை சரிந்து கொண்டு இருக்கிறது.

Credit Suisse கணிப்பு

Credit Suisse கணிப்பு

இப்போது ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை இறக்கத்தில் வர்த்தகமாவது, நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால், மேற்கொண்டு தங்கம் விலை 1,765 டாலர் வரை வீழ்ச்சி காணலாம். சொல்லப் போனால் 1,726 டாலர் வரை கூட சரியலாம் என க்ரெடிட் சூசி (Credit Suisse) அறிக்கை சொல்லி இருப்பதாக kitco.com வலைதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. சரி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை என்ன?

இன்றைய தங்கம் விலை (23 செப் 2020)

இன்றைய தங்கம் விலை (23 செப் 2020)

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று 52,470 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, இன்று 48,100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். இவை இரண்டுமே ஆகஸ்ட் உச்சத்துக்குப் பிறகான மிகக் குறைந்த விலை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தங்கம் விலை Vs ஆபரணத் தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை Vs ஆபரணத் தங்கம் விலை

பொதுவாக, எப்போது எல்லாம் சர்வதேச தங்கம் விலை இறக்கம் காண்கிறதோ, அப்போது எல்லாம் இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சானா எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும் தங்கம் விலை தொடங்கி சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை வரை, எல்லாவற்றின் விலையும் கணிசமாக மாற்றம் காணும். பொதுவாக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணங்கள் அல்லது விலை இறக்கம் கண்ட ஆதாரங்கள் இருக்கா? இதோ இருக்கே.

ஆபரணத் தங்கம் விலை இறக்கம் காண வாய்ப்பு

ஆபரணத் தங்கம் விலை இறக்கம் காண வாய்ப்பு

ஆகஸ்ட் 2020 முதல் வாரத்தில் சர்வதேச தங்கம் விலை 2,063 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்த போது, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,887 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது ஆகஸ்ட் உச்சத்துக்குப் பிறகான மிகக் குறைந்த விலை. சென்னையில் இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 52,470-க்கு விற்பனை ஆகிறது. இதுவும் ஆகஸ்ட் உச்சத்துக்குப் பிறகான மிகக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தங்கம் 8.5% சென்னை ஆபரணத் தங்கம் 11 %

சர்வதேச தங்கம் 8.5% சென்னை ஆபரணத் தங்கம் 11 %

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கத்தின் விலையை, ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து தற்போதைய விலைக்கு கணக்கிட்டல் சுமாராக 8.57 % விலை சரிந்து இருக்கிறது. ஆனால் சென்னை ஆபரணத் தங்கம் விலையை, ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து தற்போதைய விலைக்கு கணக்கிட்டல் சுமாராக 11 சதவிகிதம் விலை சரிந்து இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் சர்வதேச தங்கம் விலை மாற்றம் கண்டால், சென்னை ஆபரணத் தங்கம் விலையும் மாற்றம் காண்கிறது.

நீண்ட காலத்துக்கு 2,300 வரை தொடலாம்

நீண்ட காலத்துக்கு 2,300 வரை தொடலாம்

சரி, இப்போதைக்கு இறக்கத்தில் வர்த்தகமாவது நீடித்தால் 1,726 டாலர் வரைத் சரியலாம் எனச் சொல்லி இருக்கிறது. நீண்ட காலத்தில் விலை ஏறுமா என்கிற கேள்விக்கு, பதில் சொல்லி இருக்கிறது க்ரெடிட் சூசி. ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை என்ன ஆகும் என்று கேட்டால், 2,300 டாலர் வரைத் தொடலாம் எனக் க்ரெடிட் சூசி (Credit Suisse) கணித்து இருப்பதாக கிட் கோ வலைதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+