புதன்கிழமை அன்று சர்வதேச தங்க சந்தையில் வரலாறு காணாத வகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,052 டாலர்களைத் தொட்டு புதிய உச்சத்தை எட்டியது. இது தங்கத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளோருக்கு ஜாக்பாட் ஆக இருந்தாலும், தங்கத்தை முக்கிய சேமிப்பாக வைத்திருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த தடாலடி உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் தலைவரின் அந்த ஒரு அறிவிப்பு தான்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், நாணய கொள்கை முடிவுகளை அறிவித்த பின்னர் உரையாற்றிய போது வெளியிட்ட சில அறிவிப்புகள் தங்கம் தான் இனி எதிர்காலம் என முதலீட்டாளர்கள் முடிவு செய்துவிட்டனர்.

பெடரல் ரிசர்வ் வங்கியின் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி, தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 4.25% முதல் 4.50% வரையிலேயே வைத்திருப்பதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே தங்கம் விலை உயர துவங்கியுத. பெடரல் ரிசர்வ் தனது வட்டியைக் குறைக்காது என ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்தது போலவே நடந்துள்ளது. காரணம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாட்டின் கடனை குறைக்க அதிகப்படியான முதலீடுகளைப் பத்திர சந்தையில் திருப்புவதற்காகப் பல வேலைகளைச் செய்து வருகிறார்.
ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிக்கையில், அமெரிக்கத் தொழிலாளர் சந்தை வலுவாக இருப்பதை ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில், பணவீக்கம் சற்று உயர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியது. ஆனால் இதெல்லாம் பிரச்சனையே இல்லை, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி 2% க்கும் குறைவாகக் குறையக்கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது, அமெரிக்கப் பொருளாதாரம் சற்று பலவீனமடைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் பிரச்சனை இப்படியிருக்கையில் அமெரிக்கப் பத்திர சந்தையில் சிறிய அளவிலான முதலீடுகள் வெளியேறி பங்குச்சந்தையிலும், தங்கத்திலும் குவிந்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே இன்று இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகளும் உயர்வுடன் துவங்கியுள்ளது.
ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு ஏப்ரல் 2ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது, இது உலகளவில் பெரும் வர்த்தக பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அடுத்த 6-12 மாதம் வரையிலான முதலீட்டு உக்திகளை திருத்தி வருகின்றனர்.
இதேபோல் ஃபெடரல் ரிசர்வ் வங்கி இந்த நிதியாண்டில் இரண்டு முறை வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இது பொருளாதாரம், பணவீக்க விகிதங்கள் அடிப்படையில் உயர்த்தவோ, குறைக்கவோ கூடும்.
இதேவேளையில் ஜெரோம் பவல் பொருளாதார கண்ணோட்டத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் அரசு விதிக்கும் சுங்க வரிகளால் ஏற்படும் பணவீக்க அழுத்தத்தின் ஒரு பகுதி மக்கள் தலையில் பணவீக்கமாக விழும் என்பதையும் ஜெரோம் பவல் விளக்கியுள்ளார். இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வது நிச்சயமாகும்.
அதே நேரத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை நிறுத்துவதற்கான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
மறுமுனையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். இந்த புவிசார் அரசியல் பிரச்சனையும் தங்கம் விலையைத் தொடர்ந்து உயர்வான நிலையில் வைத்துள்ளது.
இப்படி 1. அமெரிக்க பொருளாதாரம், 2. புவிசார் அரசியல் பிரச்சனை, 3. மார்ச் மாதத்திலிருந்து உயரும் கச்சா எண்ணெய் விலை என 3 முக்கிய காரணத்தால் தங்கம் விலை அடுத்த சில வாரத்தில் அல்லது ஒரு சில மாதத்தில் 1 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் அதிகரித்து 90,660 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து 66,480 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications