2025க்கும் முதலீட்டு சந்தைக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட முதலீட்டு சந்தையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வோர் பெரும் லாபத்தை அள்ளி வந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் நிலைமை மொத்தமாக மாற்றியுள்ளது. ஆம் தங்கம் விலை தொடர்ந்து உயரும் நேரத்தில் பங்குச்சந்தை தினமும் பீதியிலேயே வைத்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிதி ஆய்வாளர்கள், தங்கத்தின் நீண்ட கால அடிப்படையில் விலை உயர்வின் கணிப்புகளை திடிரென மாற்றியமைத்துள்ளனர். அதுவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 75 நாடுகள் மீது விதித்திருந்த ரெசிப்ரோக்கல் வரி 90 நாட்களுக்கு ஒத்திவைத்த பின்பு இந்த கணிப்பு வந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கின்றனர்.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,700 டாலரை எட்டும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிதி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது, முன்பு கணிக்கப்பட்ட 3,300 டாலரில் இருந்து பெரிய அளவில் உயர்ந்துள்ளது. மேலும், தங்கத்தின் விலை அடுத்த 8 மாதத்தில் 3,650 டாலர் முதல் 3,950 டாலர் வரை மாறுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தங்கம் விலை மீதான தனது கணிப்பை உயர்த்த முக்கிய காரணம், பொருளாதார வளர்ச்சியிலும், சர்வதேச வர்த்தகத்திலும் நிலையற்ற தன்மை இருக்கும் காரணத்தால் பணவீக்கம் உயரவும், நாணய மதிப்பு சரியவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இதை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி முதல் இந்திய ரிசர்வ் வங்கி வரையில் தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, இதற்கான டிமாண்ட் மற்றும் வர்த்தகம் ஏற்கனே துவங்கியுள்ளது. இதேபோல் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகளால் கோல்டு எக்ஸ்சேஞ்ச்-ட்ரேடட் ஃபண்டுகளில் (ETF) முதலீடுகள் அதிகரிக்கவும் செய்யும். இவ்விரு காரணத்தாலேயே தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என தனது கணிப்பை திருத்தியுள்ளது கோல்டுமேன் சாக்ஸ்.
மேலும் அமெரிக்காவில் கடுமையான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால், கோல்டு ETF திட்டத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக தங்கத்தின் விலை ஆண்டின் இறுதியில் ஒரு அவுன்ஸ்க்கு 3,880 டாலரை ஐ எட்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. திங்களன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,245.42 டாலரை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications