இந்தியாவில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய் அல்லது 1.25 லட்சம் ரூபாயைக்கூட எட்டக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் இந்திய மக்களின் முக்கிய முதலீடாக இருப்பதால் இதன் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து வாங்கி வருகின்றனர். உதாரணமாக 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 97000 ரூபாய் அளவிலும், ஒரு சவரன் 70000 ரூபாய் அளவீட்டை தாண்டிய நிலையிலும் அட்சய திருதியை பண்டிகைக்கு பல லட்சம் மக்கள் தங்கத்தை வாங்க ஆர்வமாகவே உள்ளனர். இதற்காக பல நகை கடைகள் வித்தியாச வித்தியாசமாக ஆஃபர்களை உருவாக்கி வருகின்றனர்.

சரி தங்கம் விலையின் போக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்க்கும் போது, முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபத்தை கொடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,906 ஆக இருந்தது. இது 2025ஆம் ஆண்டு அதே ஏப்ரல் 17ஆம் தேதியில் ரூ.95,239 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் 110 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை தங்கம் மீதான முதலீடு கொடுத்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை தங்கத்தின் விலை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தான் இந்திய மக்கள் மத்தியில் தங்கம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, ரிஸ்க் இல்லா முதலீடு, எளிதாக நிர்வாகம் செய்யக்கூடிய முதலீடு, தங்கத்தை நகையாக வாங்கி பயன்படுத்தினாலும் அதன் விலை உயரும் தன்மை கொண்டது இப்படி தங்கத்தை ஏன் இந்திய மக்கள் அதிகம் வாங்குகின்றனர் என்பதற்கு பல காரணங்களை கூறலாம்.
சரி நாம விஷயத்திற்கு வருவோம், தங்கம் விலை ஏன், எப்போது 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரையில் உயர்வும் வாய்ப்பை கொண்டுள்ளது. சாமானிய மக்கள் தற்போது முதலீடு செய்ய வேண்டுமா..? வேண்டாமா..?
தற்போது நிலவும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திருப்பியுள்ளதால், இந்தியாவில் தங்கத்தின் விலை விரைவில் 10 கிராமுக்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்று நிபுணர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய வர்த்தகக் கொள்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் செல்லும் என்ற அச்சம் தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சர்வதேச தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸின் மதிப்பீடுகளின்படி, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை விரைவில் ஒரு அவுன்ஸுக்கு 3,700 டாலரை எட்டலாம். மேலும், வர்த்தகப் பதட்டங்கள் அதிகரித்தால் அது 4,500 டாலர் அளவீட்டையும் தொடவும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளது. இந்த உலகளாவிய விலை நிலவரம் இந்திய சந்தையில் எதிரொலிக்கும் என்பதால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரையில் உயர்வும் வாய்ப்பை கொண்டுள்ளது என ஏற்படுத்துகிறது.
எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸின் கமாடிட்டி மற்றும் கரன்சி பிரிவின் தலைவர் அனுஜ் குப்தா கூறுகையில், அமெரிக்க அரசு உருவாக்கியுள்ள வர்த்தகப் போர் அச்சங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் காரணமாகவே தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரிகளால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் அச்சப்படுவதால், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாக உலக நாடுகளில் இருக்கும் ரிசர்வ் வங்கிகள் அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகிறது.
இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கூறுகையில், பென்ச்மார்க் வட்டி விகிதம் ஒரு சதவீதம் அதிகரித்தால் கூட அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 0.10 சதவீதம் வரையில் குறையக்கூடும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்தால் மீண்டும் 0 சதவீத அளவிலான வட்டி விகிதத்திற்கு அமெரிக்கா செல்லும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பங்குச்சந்தை முதலீடுகள் சாதகமான வாய்ப்பை கொடுக்காவிட்டால் மொத்த முதலீடும் தங்கத்தின் பக்கம் தான் திரும்பும். இதனால் தங்கம் விலை 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரையில் உயர்வும் வாய்ப்பை கொண்டுள்ளது.
இதேவேளையில் அமெரிக்க அரசு சீனா உடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ள காரணத்தால் இந்த ரெசிஷன் அச்சம், வர்த்தக போர் அச்சம் குறைந்துள்ளது. இதேபோல் அமெரிக்கா, தைவான், கொரியா, இந்தியா உட்பட பல முக்கிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டிரம்ப் கொடுத்துள்ள 90 நாள் கால அவகாசத்திற்குள் அமெரிக்க தனது டாப் 5 டிரேட் பார்ட்னர்களுடன் ஒப்பந்தம் வெற்றிகரமாக செய்துவிட்டால் ரெசிஷன், வர்த்தக போர் என ஏதுவும் இருக்காது. தங்கம் விலை தானாக குறையும், எனவே அமெரிக்காவின் முடிவுகள் தான் அனைத்தையும் தீர்மானிக்க உள்ளது.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications