தங்கம் விலை பட்ஜெட் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட சுங்க வரி குறைப்பு ரீடைல் சந்தையில் முழுமையாக உட்கொள்ளும் வரையில், அதாவது சந்தையில் இருக்கும் அனைத்து விற்பனையாளர்களும் புதிய வரி முறையில் தங்கத்தை விற்பனை செய்வது இயல்பு நிலைக்கு வரும் வரையில் தங்கம் விலை சரியும் என தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஏற்கனவே கூறியிருந்தது. இதற்கு ஏற்றார் போல் பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து 3வது நாளாக இன்று தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய சரிவுக்கு முக்கியமான காரணமாகச் சர்வதேசச் சந்தை சூழ்நிலைகள் உள்ளது, அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதம் முதல் இந்த வருடத்தின் இறுதிக்குள் குறைந்தது 2 முறை வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்கப் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வருகிறது.

பொதுவாகப் பத்திர சந்தையிலிருந்து வெளியேறும் முதலீடுகள் தங்கம் மீது குவிய வாய்ப்புகள் அதிகம், ஆனால் தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் வேளையில், பெரும் பகுதி முதலீடுகள் பங்குச்சந்தைக்கும், நாணய சந்தைக்கும் செல்ல உள்ளது. மேலும் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் அமெரிக்க நிறுவனங்கள் உலகளவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்பது உறுதி.
இந்த ரேசிஸ் முன்கூட்டியே நுழைய வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருக்கும் முதலீட்டை வெளியேற்றி மாற்று முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
தங்கம் விலை சர்வதேச சந்தையில் இன்று வெளியாகும் அமெரிக்காவின் 2வது காலாண்டு ஜிடிபி வளர்ச்சியின் முன்கூட்டிய கணிப்புகளும், நாளை வெளியாகும் அமெரிக்காவின் Personal Consumption Expenditures (PCE) Price Index தரவுகள் மூலம் கட்டாயம் பெரும் மாற்றத்தைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய விலையான 2431 டாலரில் இருந்து 2368 டாலராக சரிந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையின் பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.70 சதவீதம் சரிந்து 67,780 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் ஒரு கிலோ 3.81 சதவீதம் குறைந்து 81,660 ரூபாயாக உள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 60 ரூபாய் குறைந்து 6430 ரூபாயாக உள்ளது, இதேபோல் 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் சரிந்து 7,015 ரூபாயாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஜிடிபி தரவுகளும், நுகர்வோர் தகவலும் தங்கம் விலையை தலைகீழாகப் புரட்டிப்போட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications