ஆத்தி! ட்ரம்பால் தங்கம் விலை உயரலாம்! ஆரூடம் சொல்லும் அனலிஸ்ட் பெர்னார்ட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் வாங்கப் போகிறீர்களா? கடந்த சில மாதங்களாக தங்கம் வாங்க, நல்ல நேரத்தையும், விலையையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா?

நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு செப்டம்பர் 2020 மாதத்தில் கிடைத்தது என்றால் நம்புவீர்களா? ஆம் செப்டம்பரில் வந்தது. இப்போது கூட தங்கம் விலை பெரிய ஏற்றம் கண்டு விடவில்லை. வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம்.

ஆனால் விரைவில், அமெரிக்க தேர்தலாலும், அதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்பின் சில விஷயங்களைச் செய்தால் தங்கம் விலை உயரலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வாருங்கள் பார்ப்போம்
 

வாருங்கள் பார்ப்போம்

தங்கம் விலை செப்டம்பர் 2020-ல் மட்டும் எவ்வளவு சரிந்தது? தங்கம் விலை நிலவரம் என்ன? ட்ரம்பால் eன்ன செய்டால் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது? என்பதை எல்லாம் இங்கு விரிவாகப் பார்ப்போம். முதலில் தங்கம் விலை நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

சென்னை ஆபரணத் தங்கம் விலை

சென்னை ஆபரணத் தங்கம் விலை

தமிழகத்தின் நெற்றித் திலகாகத் திகழும் சென்னை மாநகரத்தில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 52,760 ரூபாய்க்கு நேற்று விற்பனை ஆனது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,370 ரூபாய்க்கு நேற்று விற்பனை ஆனது.

2.7 % விலை வீழ்ச்சி

2.7 % விலை வீழ்ச்சி

கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் மட்டும், 24 கேரட் 10 கிராம் சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை, 2.7 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. 01 செப் 2020 அன்று 54,200 ரூபாய்க்கு விற்பனை ஆன தங்கம், 30 செப் 2020 அன்று 52,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

எம் சி எக்ஸ் தங்கம்
 

எம் சி எக்ஸ் தங்கம்

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த 01 அக்டோபர் 2020 அன்று, 536 ரூபாய் (1.06 %) விலை ஏற்றம் கண்டு, 50,940 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

செப்டம்பரில் 2.13 % சரிந்த எம் சி எக்ஸ் தங்கம்

செப்டம்பரில் 2.13 % சரிந்த எம் சி எக்ஸ் தங்கம்

அதே அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, 01 செப் 2020 அன்று 51,502 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த 30 செப் 2020 அன்று 50,404 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக இந்த ஒரு மாத காலத்தில் எம் சி எக்ஸ் தங்கம் விலை 2.13 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

XAU USD CUR - தங்கம் விலை

XAU USD CUR - தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று (02 அக் 2020) 6.17 டாலர் விலை (0.32 %) சரிந்து 1,899 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 1,917 டாலர் வரைத் தொட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2016-க்குப் பிறகு செப்டம்பர் 2020

நவம்பர் 2016-க்குப் பிறகு செப்டம்பர் 2020

சர்வதேச தங்கம் விலை, கடந்த நவம்பர் 2016-க்குப் பிறகு, ஒரு மாத காலத்தில் மிகப் பெரிய நஷ்டம் கண்டு இருக்கிறது என்றால் அது செப்டம்பர் 2020-ம் மாதம் தான் என்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்திகள். செப்டம்பர் 2020-ல் சர்வதேச தங்கம் விலை 4.3 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

ரோஸ் நார்மன் கருத்து

ரோஸ் நார்மன் கருத்து

தங்கம் விலை கன்சாலிடேட் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஏற்ற டிரெண்டில் தான் இருக்கிறது. கடந்த ஏழு காலாண்டுகளாக, தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது எட்டாவது காலாண்டிலும் ஏற்றம் காணும் இடத்தில் இருக்கிறது. பொதுவாகவே, டாலர் கரன்சி பலமடைந்தால், தங்கம் விலை சரியும். அது தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் அனலிஸ்ட் ரோஸ் நார்மன் (Ross Norman).

அமெரிக்க டாலர் கரன்சியின் மதிப்பு

அமெரிக்க டாலர் கரன்சியின் மதிப்பு

கடந்த ஜூலை 2019 கால கட்டத்துக்குப் பின், அமெரிக்க டாலர் இண்டெக்ஸ், கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் தான் நல்ல ஏற்றம் கண்டு இருக்கிறது. இத்தனை நாள், தங்கத்தில் அடைக்கலம் தேடிக் கொண்டு இருந்த முதலீட்டாளர்கள், தற்போது அமெரிக்க டாலரில் தஞ்சமடையத் தொடங்கி இருக்கிறார்கள். இதுவும் தங்கம் விலை வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து இருக்கிறது.

ட்ரம்பால் தங்கம் விலை உயரலாம்

ட்ரம்பால் தங்கம் விலை உயரலாம்

ஒருவேளை, டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தோற்று, அந்த தோல்வியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அது தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு மிகவும் சாதகமான அம்சமாக அமையலாம். ட்ரம்ப் அப்படி செய்தால், அது அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பின் மீது கேள்வி எழுப்புவதாக இருக்கும். இது தங்கத்துக்கு சாதகமாக அமையும் என்கிறார் நாடிக்சிஸ் (Natixis)-ன் அனலிஸ்ட் பெர்னார்ட் டாடா (Bernard Dahdah).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price may rise if trump lost in election and refuse to accept the election result

The Natixis analyst Bernard Dahdah said that the Gold price may rise if trump lost in election and refuse to accept the election results.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X